நன்றி: ஆனந்த விகடன் 10.08.2011
Showing posts with label மழலைக் கவிதைகள். Show all posts
Showing posts with label மழலைக் கவிதைகள். Show all posts
Friday, September 2, 2011
Monday, March 14, 2011
Wednesday, February 2, 2011
Sunday, January 9, 2011
அஞ்சு நிலா
Monday, October 4, 2010
ஆனந்த விகடனுக்கு நன்றி
6.10.10 தேதியிட்ட இவ்வார ஆனந்த விகடனில் "நன்றி விநாயகா" மற்றும் "மியாவ்" என்ற என் இரு கவிதைகள் வந்துள்ளன. ஆனந்த விகடனுக்கு மனப்பூர்வமான நன்றி.
அதுவும் "மியாவ்" கவிதைக்கு ஒரு முழுப்பக்கதையே வழங்கி, மலங்க மலங்க விழிக்கும் பூனை படத்துடன் வெளியிட்டு சிறப்பித்தமைக்கு ஆனந்த விகடன் குழுவினருக்கு என் கூடுதல் நன்றிகள்!

டிஸ்கி: இந்த இரு கவிதைகளையும் எனக்கு வழங்கிய என் செல்ல மகள் அகமதி வெண்பாவிற்கு அன்பு முத்தங்கள் :-)
அதுவும் "மியாவ்" கவிதைக்கு ஒரு முழுப்பக்கதையே வழங்கி, மலங்க மலங்க விழிக்கும் பூனை படத்துடன் வெளியிட்டு சிறப்பித்தமைக்கு ஆனந்த விகடன் குழுவினருக்கு என் கூடுதல் நன்றிகள்!

டிஸ்கி: இந்த இரு கவிதைகளையும் எனக்கு வழங்கிய என் செல்ல மகள் அகமதி வெண்பாவிற்கு அன்பு முத்தங்கள் :-)
Monday, September 27, 2010
உருவக் கவிதை
கவிதை எழுதவேண்டும்
என நான் அமர்ந்த பொழுதில்
ஓடி வந்த ஒன்றரை வயது மகள்
பேனாவைப் பிடுங்கி
கவிதை எழுத ஆரம்பித்துவிட்டாள்.
இடியாப்ப உருவங்கொண்ட கவிதையை
அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தேன்.
உழவன்
என நான் அமர்ந்த பொழுதில்
ஓடி வந்த ஒன்றரை வயது மகள்
பேனாவைப் பிடுங்கி
கவிதை எழுத ஆரம்பித்துவிட்டாள்.
இடியாப்ப உருவங்கொண்ட கவிதையை
அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தேன்.
உழவன்
Monday, August 16, 2010
மனித பொம்மை
குரங்கு பொம்மையைக் கொடுக்கிறேன்
அளவில்லா மகிழ்ச்சியோடு விளையாடுகிறாள்.
நாய் பொம்மையைக் கொடுக்கிறேன்
அதே மகிழ்ச்சி
கிளி கரடி குதிரை என
எல்லா பொம்மைகளோடும்
அதே விளையாட்டு.
மனித பொம்மையைக் கொடுக்கிறேன்
வாங்கவே தயங்குகிறாள்.
அடுத்த தலைமுறை பற்றிய பயம்
எனக்குத்
தொற்றிக்கொண்டது.
உழவன்
அளவில்லா மகிழ்ச்சியோடு விளையாடுகிறாள்.
நாய் பொம்மையைக் கொடுக்கிறேன்
அதே மகிழ்ச்சி
கிளி கரடி குதிரை என
எல்லா பொம்மைகளோடும்
அதே விளையாட்டு.
மனித பொம்மையைக் கொடுக்கிறேன்
வாங்கவே தயங்குகிறாள்.
அடுத்த தலைமுறை பற்றிய பயம்
எனக்குத்
தொற்றிக்கொண்டது.
உழவன்
Tuesday, April 13, 2010
மன்னிக்கவும்
கண்ணாடி முன்னால் நிற்கும்போதே
கவனிக்கத் தொடங்கிவிடுகிறாள்
பேண்ட் சர்ட் அணியும்போது
உறுதிப்படுத்தி விடுகிறாள்
வண்டிச் சாவியை எடுத்தவுடன்
தவழ்ந்தோடி வந்து
காலைக் கட்டிக்கொண்டு
அண்ணாந்து பார்த்து
அழுது அடம்பிடிக்கிறாள்.
என்ன கூறி சமாதானம் செய்வது
என்பது தெரியாமல்
அவளோடு விளையாட ஆரம்பித்துவிட்டேன்
மன்னிக்கவும்
இன்றைய என் வருகை
தாமதமும் ஆகலாம்
இல்லாமலும் போகலாம்!
உழவன்
கவனிக்கத் தொடங்கிவிடுகிறாள்
பேண்ட் சர்ட் அணியும்போது
உறுதிப்படுத்தி விடுகிறாள்
வண்டிச் சாவியை எடுத்தவுடன்
தவழ்ந்தோடி வந்து
காலைக் கட்டிக்கொண்டு
அண்ணாந்து பார்த்து
அழுது அடம்பிடிக்கிறாள்.
என்ன கூறி சமாதானம் செய்வது
என்பது தெரியாமல்
அவளோடு விளையாட ஆரம்பித்துவிட்டேன்
மன்னிக்கவும்
இன்றைய என் வருகை
தாமதமும் ஆகலாம்
இல்லாமலும் போகலாம்!
உழவன்
Sunday, March 7, 2010
கிளி பொம்மை
சாம்பல் நிறத்தில்
குட்டையான வாலோடு
மினுங்கும் கண்களுடன்
பாண்டிபஜாரில் வாங்கிய
நாயின் கழுத்தை
இறுக்கிப் பிடித்துக் கடித்தும்
வாலைப் பிடித்துத் தூக்கியெறிந்தும்
குழந்தை விளையாடியதைக் கண்டு பதறி
கயிற்றை அறுத்து
தலைதெறிக்க ஓடிய
என் வீட்டு நாய்
இன்னமும் வீடு திரும்பவில்லை
எதிர்வீட்டில்
கிளிஜோதிடர் இருக்கிறார்
எப்படியும் இரண்டு பேராவது
எதிர்காலம் அறியும் பொருட்டு வருவதை
தினமும் அலுவலகம் செல்லும்போது காண்கிறேன்.
விரைவில் ஒரு
கிளி பொம்மை வாங்கவேண்டும்!
உழவன்
குட்டையான வாலோடு
மினுங்கும் கண்களுடன்
பாண்டிபஜாரில் வாங்கிய
நாயின் கழுத்தை
இறுக்கிப் பிடித்துக் கடித்தும்
வாலைப் பிடித்துத் தூக்கியெறிந்தும்
குழந்தை விளையாடியதைக் கண்டு பதறி
கயிற்றை அறுத்து
தலைதெறிக்க ஓடிய
என் வீட்டு நாய்
இன்னமும் வீடு திரும்பவில்லை
எதிர்வீட்டில்
கிளிஜோதிடர் இருக்கிறார்
எப்படியும் இரண்டு பேராவது
எதிர்காலம் அறியும் பொருட்டு வருவதை
தினமும் அலுவலகம் செல்லும்போது காண்கிறேன்.
விரைவில் ஒரு
கிளி பொம்மை வாங்கவேண்டும்!
உழவன்
Monday, February 15, 2010
தக்காளிச் சட்னி?
தெருமுனைப் பெட்டிக்கடைக்காரன்
பூசணிக்காய் உடைப்பதைக் கண்டபோது
ஏளனப் பார்வையுடன்
இன்னும் திருந்தவில்லையா எனக் கேட்டுவிட்டே
வீடு வந்தேன்
வழக்கமாய் சூடம் மட்டுமே சுற்றுபவள்
உப்பு மிளகாய்
சுற்றிப் போட்டுக்கொண்டிருந்தாள்
குழந்தை பேறில்லா எதிர்வீட்டுப் பெண்
கொஞ்சிக் கொண்டிருந்தாளாம்
ஏன்டா.. உனக்கு வந்தா இரத்தம்
அதுவே எனக்கு வந்தா தக்காளிச் சட்னியா?
வழியும் இரத்தத்தோடு
வடிவேலு சொல்லிக்கொண்டிருந்தார்
நான் கூனிக் குறுகி நின்றுகொண்டிருந்தேன்!
உழவன்
பூசணிக்காய் உடைப்பதைக் கண்டபோது
ஏளனப் பார்வையுடன்
இன்னும் திருந்தவில்லையா எனக் கேட்டுவிட்டே
வீடு வந்தேன்
வழக்கமாய் சூடம் மட்டுமே சுற்றுபவள்
உப்பு மிளகாய்
சுற்றிப் போட்டுக்கொண்டிருந்தாள்
குழந்தை பேறில்லா எதிர்வீட்டுப் பெண்
கொஞ்சிக் கொண்டிருந்தாளாம்
ஏன்டா.. உனக்கு வந்தா இரத்தம்
அதுவே எனக்கு வந்தா தக்காளிச் சட்னியா?
வழியும் இரத்தத்தோடு
வடிவேலு சொல்லிக்கொண்டிருந்தார்
நான் கூனிக் குறுகி நின்றுகொண்டிருந்தேன்!
உழவன்
Monday, January 25, 2010
மழலை
யானையாய் பிளிறி
பூனையாய்க் கத்தி
நாயாய்க் குரைத்து
நரியாய் ஊளையிட்டு
கோழியாய்க் கூவி
குதிரையாய்க் கனைத்து
...
இப்படி விநாடிக்கொரு
பிராணியாய் மாறி
உன்னைச் சிரிக்க வைக்கிறேன்.
மனிதனாய்ப் பேசினால் மட்டும்
ஏன் சிரிப்பதேயில்லை
என எண்ணும்போதே
மழலை மொழி வரும் திசைநோக்கித்
திரும்பிப் பார்த்துச் சிரித்து
என் ஐயம் போக்குகிறாய்!
உழவன்
பூனையாய்க் கத்தி
நாயாய்க் குரைத்து
நரியாய் ஊளையிட்டு
கோழியாய்க் கூவி
குதிரையாய்க் கனைத்து
...
இப்படி விநாடிக்கொரு
பிராணியாய் மாறி
உன்னைச் சிரிக்க வைக்கிறேன்.
மனிதனாய்ப் பேசினால் மட்டும்
ஏன் சிரிப்பதேயில்லை
என எண்ணும்போதே
மழலை மொழி வரும் திசைநோக்கித்
திரும்பிப் பார்த்துச் சிரித்து
என் ஐயம் போக்குகிறாய்!
உழவன்
Monday, January 11, 2010
முன் பல் விழுந்த சிறுமி "அகநாழிகை"

இக்கவிதையை இதழில் படித்துவிட்டுப் பாராட்டிய நண்பர்கள் யாத்ரா, ராமலக்ஷ்மி, அமிர்தவர்ஷினி அம்மா, முத்துச்சாமி, நவாஸ், கிருஷ்ணபிரபு ஆகியோருக்கும், இதழில் வெளியிட்ட நண்பர் பொன்.வாசுதேவன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
உலகத்துப் பசிபோக்க
உழைக்கிறோம் உழவங்க நாங்க
எங்க குடி தழைக்கனும்
எல்லோரும் வாழ்த்துங்க!
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
உழவன்
Friday, January 1, 2010
மியாவ்
மியாவ் என்ற ஒரு அழைப்பிலேயே
வாசல் முன் வந்து நின்ற
பூனையைக் காட்டி
"நீ சாப்பிடவில்லையெனில்
பூனைக்குக் கொடுத்திடுவேன்"
என ஏமாற்றிச் சோறூட்ட
இன்றும் தயாரானாள் அவள்
தனைநோக்கி சோற்றுக்கை நீளும்
ஒவ்வொரு முறையும்
கழுத்து நீட்டி வாய்திறந்து
கையின் போக்கிலேயே கண்பதித்து
சோற்றையும் குழந்தையையுமே
பார்த்துக்கொண்டிருக்கிறது பூனை
கடைசிவரை வாய்திறக்காது
பூனையின் எதிர்பார்ப்பை
குழந்தை பூர்த்தி செய்துகொண்டிருக்கையில்
சலிப்புற்று
குழந்தையின் குமட்டில் இடித்து
கையிலிருந்த சோற்றுருண்டையைத்
தன் வாயில் போட்டு
நடக்க யத்தனித்தபோது
ஓவென அழுத குழந்தையை
எப்படித் தேற்றுவதென்பது தெரியாது
மலங்க மலங்க
விழித்துக்கொண்டிருக்கிறது பூனை!
உழவன்
"உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை"
வாசல் முன் வந்து நின்ற
பூனையைக் காட்டி
"நீ சாப்பிடவில்லையெனில்
பூனைக்குக் கொடுத்திடுவேன்"
என ஏமாற்றிச் சோறூட்ட
இன்றும் தயாரானாள் அவள்
தனைநோக்கி சோற்றுக்கை நீளும்
ஒவ்வொரு முறையும்
கழுத்து நீட்டி வாய்திறந்து
கையின் போக்கிலேயே கண்பதித்து
சோற்றையும் குழந்தையையுமே
பார்த்துக்கொண்டிருக்கிறது பூனை
கடைசிவரை வாய்திறக்காது
பூனையின் எதிர்பார்ப்பை
குழந்தை பூர்த்தி செய்துகொண்டிருக்கையில்
சலிப்புற்று
குழந்தையின் குமட்டில் இடித்து
கையிலிருந்த சோற்றுருண்டையைத்
தன் வாயில் போட்டு
நடக்க யத்தனித்தபோது
ஓவென அழுத குழந்தையை
எப்படித் தேற்றுவதென்பது தெரியாது
மலங்க மலங்க
விழித்துக்கொண்டிருக்கிறது பூனை!
உழவன்
"உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை"
Subscribe to:
Posts (Atom)








