Monday, February 15, 2010

தக்காளிச் சட்னி?

தெருமுனைப் பெட்டிக்கடைக்காரன்
பூசணிக்காய் உடைப்பதைக் கண்டபோது
ஏளனப் பார்வையுடன்
இன்னும் திருந்தவில்லையா எனக் கேட்டுவிட்டே
வீடு வந்தேன்

வழக்கமாய் சூடம் மட்டுமே சுற்றுபவள்
உப்பு மிளகாய்
சுற்றிப் போட்டுக்கொண்டிருந்தாள்
குழந்தை பேறில்லா எதிர்வீட்டுப் பெண்
கொஞ்சிக் கொண்டிருந்தாளாம்

ஏன்டா.. உனக்கு வந்தா இரத்தம்
அதுவே எனக்கு வந்தா தக்காளிச் சட்னியா?
வழியும் இரத்தத்தோடு
வடிவேலு சொல்லிக்கொண்டிருந்தார்
நான் கூனிக் குறுகி நின்றுகொண்டிருந்தேன்!

உழவன்

30 comments:

ராமலக்ஷ்மி said...

//உனக்கு வந்தா இரத்தம்
அதுவே எனக்கு வந்தா தக்காளிச் சட்னியா?//

நல்ல பன்ச்:)!

கவிதையும் சொல்ல வந்த கருத்தும் அருமை!

வாழ்த்துக்கள்!

அகநாழிகை said...

கவிதையின் கரு அருமை.
வாழ்த்துகள்.

PPattian : புபட்டியன் said...

தினம் தினம் அனுபவம்.. நல்ல வேளை, தக்காளிச் சட்னி இல்லை என்ற புரிதலாவது உள்ளதே :)

Vidhoosh said...

அருமை சார். :)

திகழ் said...

அருமை

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

தக்காளிச் சட்னி - யதார்த்தம்! அருமை!!

வித்யா said...

:))

ஹேமா said...

வார்த்தைகள் ஸ்தம்பிதம்.உண்மை சொன்னால் இரத்தமும் வருமோ !

க.பாலாசி said...

பளிச்சுன்னு அறைஞ்சமாதிரி சொல்லீட்டீங்க... கவிதை அருமை....

D.R.Ashok said...

super :)

சொல்லரசன் said...

உண்மைதான்,இந்த முரன்பாடு எல்லோரிடமும் உள்ளது.

SUFFIX said...

சரிதான் பாஸ் :)

V.Radhakrishnan said...

அருமையாக இருக்கிறது. சுயபரிசோதனை செய்து கொண்டாலும் வாழ்க்கை அப்படி அப்படியேதான் இருக்கும்.

padma said...

நல்லா இருக்கு !உணர்ந்து கொள்ளுதலே பெரிய விஷயம் .
நல்ல கவிதை .

கார்த்திகைப் பாண்டியன் said...

நச் கவிதை நண்பா

Anonymous said...

எதார்த்தத்தை எளிமையாய் பின்னியது விதம் அருமை..குட்டித்தத்துவம் சொல்லப்பட்டுள்ளது கவிதையில்....

உயிரோடை said...

//வழக்கமாய் சூடம் மட்டுமே சுற்றுபவள்
உப்பு மிளகாய்
சுற்றிப் போட்டுக்கொண்டிருந்தாள்
குழந்தை பேறில்லா எதிர்வீட்டுப் பெண்
கொஞ்சிக் கொண்டிருந்தாளாம்
//

இந்த‌ கால‌த்தில் கூட‌வா

"உழவன்" "Uzhavan" said...

@ராமலக்ஷ்மி 
 
@அகநாழிகை
 
@PPattian : புபட்டியன்
 
@Vidhoosh
 
@திகழ்
 
@நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்
 
@வித்யா
 
@ஹேமா
 
@க.பாலாசி
 
@D.R.Ashok
 
@சொல்லரசன் - ஆரம்ப காலத்தில் என்னை ஊக்கப்படுத்திய குறிப்பிடத்தக்க நண்பர்களுள் ஒருவராகிய உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே :-)
 
@SUFFIX
 
@V.Radhakrishnan
 
@padma
 
@கார்த்திகைப் பாண்டியன்
 
@தமிழரசி
 
@உயிரோடை - என்ன மேடம் இப்படிக் கேட்டுட்டீங்க..உங்களின் இந்தக் கேள்விதான் எனக்கு வியப்பாக உள்ளது :-) இந்தக் காலத்தில் மட்டுமல்ல; எல்லாக் காலத்திலும் இது நடக்கும்.
 
 
தங்களின் கருத்துகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மற்றும் தமிலிஷில் வாக்களித்த அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி :-)
 
அன்புடன்
உழவன்

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இங்கு நல்லவர்கள் அனைவருமே மனசாட்சியோட போராடியே வாழ்கிறார்கள்..

உண்மை.,

உறைக்கிறது..

நன்றி..

என்.விநாயகமுருகன் navina14@hotmail.com said...

தலைவா காலை காட்டுங்க...

சே.குமார் said...

நல்லாயிருக்கு..!

"உழவன்" "Uzhavan" said...

@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
 
@ என்.விநாயகமுருகன் - ஐயோ நண்பா.. என்ன இதெல்லாம் :-)
 
@சே.குமார்
 
அனைவருக்கும் மிக்க நன்றி.

விக்னேஷ்வரி said...

நல்லாருக்குங்க. நல்ல கருத்து.

"உழவன்" "Uzhavan" said...

//விக்னேஷ்வரி
நல்லாருக்குங்க. நல்ல கருத்து.//
 
ரொம்ப நன்றிங்க :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

உயிரோடை said...
//வழக்கமாய் சூடம் மட்டுமே சுற்றுபவள்
உப்பு மிளகாய்
சுற்றிப் போட்டுக்கொண்டிருந்தாள்
குழந்தை பேறில்லா எதிர்வீட்டுப் பெண்
கொஞ்சிக் கொண்டிருந்தாளாம்
//

இந்த‌ கால‌த்தில் கூட‌வா.

இந்தக் காலத்தில் தான் இது ஜாஸ்தி ;))))))))

ஏன்னா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பெற்றுவிட்டு அது மேல திருஷ்டி பட்டுடக்கூடாதில்லையா :))))))


கவிதையோட கரு ரொம்ப நல்லா இருந்துச்சு உழவன்.

"உழவன்" "Uzhavan" said...

//கவிதையோட கரு ரொம்ப நல்லா இருந்துச்சு உழவன். //
 
நன்றி அமித்துமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை.
வாழ்த்துகள்.

"உழவன்" "Uzhavan" said...

நன்றி T.V.ராதாகிருஷ்ணன் அவர்களே :-)

நாவிஷ் செந்தில்குமார் said...

நல்ல கவிதை

"உழவன்" "Uzhavan" said...

//நாவிஷ் செந்தில்குமார்
நல்ல கவிதை //
 
நன்றி நாவிஷ்