Showing posts with label யூத்விகடன் "மாத மின்னிதழ்". Show all posts
Showing posts with label யூத்விகடன் "மாத மின்னிதழ்". Show all posts

Monday, December 21, 2009

இன்னொரு "ஏனோ?"

கூட்டமில்லாத
குளு குளு கடை

எடுத்ததென்னவோ
ஒரு சட்டைதான்
கொடுத்ததோ
இரு ஆயிரம்.

சிக்னலில்
க்ளீனிங் க்ளாத்
விற்கும்
சிறுமியிடம் மட்டும்
மனம்
வாங்க மறுப்பதேனோ?

உழவன்

***

இம்மாத யூத்ஃபுல் விகடன் மாத மின்னிதழில் கீழக்கண்ட என் கவிதை இடம்பெற்றுள்ளது. நன்றி யூத்ஃபுல் விகடன்





Monday, February 16, 2009

சென்னை கிரிக்கெட்

ஆட்டம் பரபரப்பாகவும்
விறுவிறுப்பாகவும்
போய்க்கொண்டிருந்தது
 
பவுண்டரியில் ஃபீல்டிங்
செய்த நான்
பறந்து வந்த பந்தை
வேகமாய் ஓடிச்சென்று பிடித்துவிட்டு
விக்கெட் விழுந்த
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்
 
என்னைப் போலவே
எனதருகில் நின்று
ஃபீல்டிங் செய்த ஒருவர்
"பாஸ்.. அது எங்க பால்"
என்றபோதுதான்
எனக்குப் புரிந்தது
அவன் பிடிக்க வேண்டிய பந்தை
நான் பிடித்து
அவர்களுக்கு
ஃபீல்டிங் செய்துள்ளேன் என்று !
 
தீப்பெட்டிக்குள்
அடைக்கப்பட்ட குச்சிகள் போன்று
இருந்த மைதானத்தைப் பார்த்தபோது
 
மிளகாய் மாரு பிடுங்கப்பட்ட
பல ஏக்கர் பொட்டல்காட்டில்
பதினோரு பேரு கூட இல்லாமல்
கிரிக்கெட் ஆடிய
அந்த நினைவுகள்
சச்சின் அடித்த பவுண்டரியாய்
விர்ரென்று ஒரு விநாடி வந்து போனது !