சாம்பல் நிறத்தில்
குட்டையான வாலோடு
மினுங்கும் கண்களுடன்
பாண்டிபஜாரில் வாங்கிய
நாயின் கழுத்தை
இறுக்கிப் பிடித்துக் கடித்தும்
வாலைப் பிடித்துத் தூக்கியெறிந்தும்
குழந்தை விளையாடியதைக் கண்டு பதறி
கயிற்றை அறுத்து
தலைதெறிக்க ஓடிய
என் வீட்டு நாய்
இன்னமும் வீடு திரும்பவில்லை
எதிர்வீட்டில்
கிளிஜோதிடர் இருக்கிறார்
எப்படியும் இரண்டு பேராவது
எதிர்காலம் அறியும் பொருட்டு வருவதை
தினமும் அலுவலகம் செல்லும்போது காண்கிறேன்.
விரைவில் ஒரு
கிளி பொம்மை வாங்கவேண்டும்!
உழவன்
Sunday, March 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!
உழவன்
சீக்கிரம் வாங்குங்க. அப்ப்டிய யானை, பூனை பொம்மை எல்லாமும்.. :)
எழுதவும் கற்கிறேன் உங்களிடம். :)
அட!!
கவிதை சூப்பர், சீக்கிரம் பொம்மை வாங்கி கிளிக்கு விடுதலை அளியுங்கள் உழவன்
அப்ப கிளிக் கவிதை ரெடின்னு சொல்லு....
//Vidhoosh
எழுதவும் கற்கிறேன் உங்களிடம். :) //
ஐயோ.. என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம்.. நானும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன் விதூஷ் மேடம்.. மிக்க நன்றி இதுபோன்ற பெருந்தன்மையான வார்த்தைகளுக்கு.
//அமிர்தவர்ஷினி அம்மா
அட!!
கவிதை சூப்பர், சீக்கிரம் பொம்மை வாங்கி கிளிக்கு விடுதலை அளியுங்கள் உழவன் //
வாங்கிடலாம் அமித்துமா.. மிக்க நன்றி :-)
சூப்பர் :)
அசத்தல்.
//பதறி
கயிற்றை அறுத்து
தலைதெறிக்க ஓடிய
என் வீட்டு நாய்
இன்னமும் வீடு திரும்பவில்லை//
ரசித்துச் சிரித்தேன்.
கிளி பொம்மை வாங்கக் கிளம்புங்க:)!
கவிதை சூப்பர்
நல்லாயிருக்கு.
கிளி வாங்குங்க வரேன்.
பைனல் டச் சூப்பர் நண்பா..
உழவரின் எழுத்துக்களில் மிகுந்த முன்னேற்றம். நல்லா இருக்கு.
//தமிழரசி said...
அப்ப கிளிக் கவிதை ரெடின்னு சொல்லு....//
அட்டா..பளிச்..வரிகள்
ரசித்தேன் ;-)
நன்றி என்.விநாயகமுருகன்
நன்றி மாதேவி
நன்றி T.V.ராதாகிருஷ்ணன்
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி சி. கருணாகரசு
நன்றி கார்த்திகைப் பாண்டியன் நண்பா
நன்றி SUFFIX
நன்றி ஜெனோ
பார்த்துங்க அப்புறம் வடிவேல்மாதிரி உங்களைவைத்து ஜோஸியம் சொல்லிவிடபோகிறார் உங்க எதிர்வீட்டுக்காரர்.
கவிதை அருமை
நன்றி சொல்லரசன் :-)
நல்லாயிருக்கு.
//விரைவில் ஒரு
கிளி பொம்மை வாங்கவேண்டும்//....ம்ம்...சீக்கிரம் வாங்கிடுங்க:)
நன்றி ப்ரியா.. நல்ல கிளி எங்க கிடைக்கும்னு சொல்லுங்க.. வாங்கிடலாம் :-)
மிகவும் ரசித்தேன்...நண்பர்களுக்கும் மின்னஞ்சல் செய்துள்ளேன்.
Good one!
//மேடேஸ்வரன்
மிகவும் ரசித்தேன்...நண்பர்களுக்கும் மின்னஞ்சல் செய்துள்ளேன். //
மிக்க மகிழ்ச்சி நண்பரே. வருகைக்கும் மின்னஞ்சலுக்கும் மிக்க நன்றி
*
//Chitra
Good one! //
பாராட்டுக்கும் மிக்க நன்றி சித்ரா
பதிப்புகள் அருமை உழவரே..
ரசித்தேன்..ருசித்தேன்
நன்றி படைப்பாளி
:))
மிக்க நன்றி இரசிகை
Post a Comment