Showing posts with label கல்கி. Show all posts
Showing posts with label கல்கி. Show all posts

Thursday, August 25, 2011

துடியான சாமி - கல்கி இதழில்





நன்றி: கல்கி 14.08.2011

இதுவரை கல்கியில் வெளியானவைகளைப் படிக்க “க்ளிக் செய்யவும்

Wednesday, March 30, 2011

கல்கி இதழில் …

எனது கவிதையான “பார்த்துக் கொண்டே இருக்கலாம்” இவ்வாரக் (03.04.2011) கல்கியில் வெளிவந்துள்ளது.




நன்றி: கல்கி

Wednesday, February 2, 2011

புதுவீடு - கல்கி

இவ்வார (06.02.2011) கல்கி இதழில் என் இயற்பெயரிலேயே “புதுவீடு” கவிதை வெளியாகியுள்ளது.
நன்றி `கல்கி'


Sunday, October 31, 2010

கல்கியில் வெளியான என் கட்டுரை

07.11.2010 தேதியிட்ட இவ்வார “கல்கி”யில் “இனிச்சமரம்” என்கிற என் கட்டுரையும், நண்பர் நிலாரசிகனின் “தனலட்சுமி டாக்கீஸ்” எனும் கட்டுரையும் ஊர்ப்பாசம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இனிச்சமரம்

நீங்கள் எப்போதாவது “இனிச்சமரம்” பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகினில் இருக்கும் எங்கள் ஊரான வேலிடுபட்டி எனும் கிராமத்தில், ஊரின் தென்கிழக்கில் ராட்சதக் குடை போல பரந்து விரிந்திருக்கும் முதுமையான ஒரு புளியமரம் இருக்கிறது. அம்மரத்தின் பழத்தை ஒருமுறை சுவைத்துப் பாருங்கள். ஒரு புளியமரத்தினை இக்கிராம மக்கள் ஏன் இனிச்சமரம் என்றே அழைக்கிறார்கள் என்பதன் காரணம் புரியும். காற்றிற்கு விழும் புளியம் பழங்களை சமைப்பதற்கு எடுத்துச் செல்லும் பெண்கள், இம்மரத்தின் பழத்தில் ரசம் வைக்கக்கூடத் தயங்கும் அளவிற்கு இனிப்பான புளியம்பழங்களைத்தரும் மரம் இந்த இனிச்சமரம்.

இம்மரத்தின் அருகினில் இருக்கும் ஆரம்பப் பள்ளியில் நான் படித்தபோது, இடைவேளை மணியடித்ததும் போட்டிபோட்டுக் கொண்டு அம்மரம் நோக்கி ஓடிச்சென்று, இனிச்சமரத்தின் பழங்களைப் பொறுக்கித் தின்போம். பழம் கிடைக்காத சக நண்பர்கள் காசு கொடுத்து புளியம்பழத்தை வாங்கித் தின்ற ஞாபகம் இன்றும் நினைவில் இருக்கிறது. கோலி, பம்பரம், ஊஞ்சல் என எல்லோருக்கும் பால்ய காலத்தில் தாய்மடியாக விளங்கிய அம்மர நிழலில் சிறிது நேரம் அமர்ந்திருந்து நினைவுகளை மீட்டெடுப்பதை இன்னமும் பலர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.

மரப்பலகையும், ரசம் போன கண்ணாடியுமாக, இம்மரத்தின் நிழலில் பெரும்பாலான நேரங்களில் அமர்ந்திருக்கும் முடி திருத்துபவரான பெருமாளுக்கு, எல்லோரையும் விட அதிகமான பாசம் இம்மரத்தின் மீது உண்டு. காற்றும் மழையுமாக இருந்த ஒரு நாளில், பல மரங்கள் சாய்ந்து கிடந்தாலும், இனிச்சமரத்தின் வடக்குப் பக்கமாய் இருந்த ஒரு பெரிய கிளை ஒடிந்து விழுந்தபோது, ஊரே அங்கு ஓடி வந்து சோகத்தை அவ்விடத்தில் கொட்டித் தீர்த்தது.

எனது தாத்தாவின் பால்ய காலத்திலிருந்து, இன்றுவரை இனிச்சம்பழங்களை வழங்குவது மட்டுமல்லாது, எங்கள் ஊரின் ஓர் அடையாளமாக இருக்கும் இம்மரத்தின் மீதிருக்கும் எங்களின் பாசம் என்றும் மாறவேமாறாது.

உழவன்

நன்றி: கல்கி




Monday, October 11, 2010

நன்றி "கல்கி"

17.10.2010 தேதியிட்ட இவ்வார கல்கியில் இடம்பெற்ற என் கவிதையை உங்களோடு பகிர்வதில் மகிழ்வு கொள்கிறேன்.



நன்றி "கல்கி"



கடந்த வார ஆனந்த விகடனில் வெளியான என் கவிதைகளைப் படிக்க விரும்புவோர் என் முந்தைய இடுகைக்குச் செல்லவும்.


அன்புடன்
உழவன்