Showing posts with label அனுபவமும் புனைவும். Show all posts
Showing posts with label அனுபவமும் புனைவும். Show all posts

Thursday, July 23, 2009

தீபாவளி ???

லதா.. 5.30க்கு அலாரம் வச்சிருக்கேன். ஒருவேளை நான் தூங்கிட்டாலும் நீ எழுப்பி விட்டிரு.

என்னது.. 5.30க்கா? 4 மணிக்கே வைங்க. தூங்கிருவேனோனு கவலையெல்லாம் படவேண்டாம். ஒரு வாளி தண்ணிய ஊத்தியாவது நான் எழுப்பிவிட்டிருவேன்.

அடி பாவி. ரொம்ப நல்ல எண்ணம் உனக்கு.

பின்னே.. ஒருவேளை எழுந்திருக்க லேட் ஆயிடுச்சுனா அவ்ளதான். எல்லாம் பிளானும் நாசமாகிடும்.

ஏதோ கொஞ்சம் இரக்கம் காட்டுடியம்மா. ஆர்வக்கோளாருல சுடுதண்ணிய ஊத்திராதே.



டிரிங்..................

ரகு.. ரகு...மணி 4 ஆயிருச்சு. எழுந்திருங்க.

ஏய் தூக்கம் தூக்கமா வருதுடா..

தூங்குனாலாம் வேலைக்காவாது. நான் போய் டீ போடுறேன். அதுக்குள்ள ப்ரஷ் பண்ணிட்டு கெளம்புற வழியைப் பாருங்க.

அடடா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலயே.

ஏதோ முனங்கிற மாதிரி இருக்கு

ஒன்னுமில்லை ஒன்னுமில்லை.. இதோ கெளம்பிட்டேன்.

ஒருவழியா 4.30 கெல்லாம் கெளம்பியாச்சு. லதா.. நான் கொளம்புறேன். போய்ட்டு போன் பண்ணுறேன்.

ம்ம்.. வெற்றியோட திரும்பி வாங்க.

என்னடி இது? குங்குமமெல்லாம் வச்சு விடுற. விட்டா கையக் கீறி ரத்தத்துல பொட்டு வச்சு அனுப்புவ போல.

பின்னே.. நீங்க போறது எவ்வளவு முக்கியமான காரியம்.

உன் அலும்பு தாங்கல. ஓகே ஒகே.. பை.



5 மணி கூட இன்னும் ஆகல. அதுக்குள்ள இவ்வளவு பேரா!!! அடடா.. நம்மதான் லேட்டோ.. நமக்கு முன்னால எட்டு பேரு இருக்காங்களே. சரி வெயிட் பண்ணுவோம். கெடைக்காமலா போயிரும்.

எனக்கு இந்த காதல் அனுபவம் இல்லாததால, ஒரே இடத்துல உக்கார்ந்துக்கிட்டு ஒரு 3 மணி நேரத்தைப் போக்குறது ரொம்ப கஷ்டமா போச்சு. ம்ம்.. என்ன பண்ணுறது. காத்துதான ஆகனும். வேறு வழியில்லாம FM ல பாட்டுக்கேட்டுக்கிட்டே டைம்பாஸ் பண்ணுனேன்.



"சார் உங்களுக்கு பின்னால நான்; எனக்கு பின்னாலதான் நீங்க. ஹலோ சார் நீங்கெல்லாம் எங்களுக்கு பின்னாலதான் வந்தீங்க. ப்ளீஸ் பின்னால போயிடுங்க" அந்த நேரத்துல காதுல விழுந்த வசனங்கள் இதுமாதிரி நிறைய.

வரிசை நகர்ந்த அந்த 5 நிமிடங்கள் எல்லோரின் இதயத்துடிப்பும் அதிகரித்திருந்ததை உணரமுடிந்தது.

இப்ப என்னோட நிமிடங்கள்....... ... வாவ்.. தேங்க் காட் :-))

லதாவுக்கு போன் போட்டு சொல்லிருவோம். இந்த விசயத்தக் கேட்டா எவ்வளவு சந்தோசப்படுவா.
ஸ்பீடு டயலில் அவளுக்கான 3ம் எண்ணை தொடர்ந்து அழுத்த...

ஹலோ..லாதா, சக்ஸஸ்.. கெடைச்சிருச்சுடா. ஆமா ஆமா லக்கிதான். எந்த சாமி புண்ணியமோ. ஆமா கெளம்பிட்டேன். இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவேன்.



கேட்டுக்கு முன்னால பைக்க நிறுத்திட்டு, உள்ளே போறேன். எதிர்ல லதா ஆரத்தி தட்டோட நிக்குறா.

ஹே.. என்னடி ஆரத்தியெல்லாம் எடுக்குற? ஆச்சரியத்துடன் நான் கேட்க

பின்னே.. இது பெரிய சாதனை இல்லையா?

என்னது சாதனையா?? தீபாவளிக்கு ஊருக்குப் போக ட்ரெய்ன்ல டிக்கெட் புக் பண்ணிட்டு வந்ததெல்லாம் பெரிய சாதனையா?

சாதனை இல்லாம பின்னே என்னவாம். காலையிலேயே எல்லா சேனல்லயும் ப்ளாஷ் நியூஸ். எட்டு நிமிஷத்துல எல்லா ட்ரெய்னும் ஃபுல் ஆயிடுச்சாம். நீங்க போன் பண்ணி சொன்னவுடனே நான் எவ்ளோ சந்தோசப்பட்டேன் தெரியுமா. இந்த சந்தோசத்தைக் கொண்டாட கேசரி வேற பண்ணிருக்கேன்.

ஓ.. இது வேறயா!!! தீபாவளிக்கு ஊருக்குப் போக டிக்கெட் கிடைச்சாலே, அதை ஒரு பண்டிகையாக் கொண்டாட வேண்டிய நிலைமை சென்னைவாசிகளுக்கு வந்திருச்சா!!
என்ன கொடுமை சார் இது!


உழவன்