பொங்கலுக்கு முதல் நாள் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு ஆட்டோ பிடிப்பதற்காக, தெரு முனையிலுள்ள ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்தேன். வழக்கமாக நூறிலிருந்து நூற்றியிருபது ரூபாய் தான் கேட்பார்கள். ஆனால் அன்று அந்த ஆட்டோக்காரார் இருநூறு ரூபாய் கேட்டார். பொங்கல், தீபாவளி போன்ற விசேச தினங்கள் என்றால் இவர்கள் இப்படித்தான் அளவிற்கதிகமாகக் கேட்பார்கள் என்பது தெரியும். அதற்காக இவ்வளவு அதிகமாகவா கேடபது என்று நினைத்துக்கொண்டு, அவரிடம் பேரம் பேச ஆரம்பித்தேன். அவரும் குறைப்பதாய் இல்லை; எனக்கும் அதில் உடன்பாடில்லை. சரி நான் வேறு ஆட்டோ பார்த்துக்கொள்கிறேன் எனச் சொல்லிவிட்டு, வீட்டிற்குச் சென்று மனைவி குழந்தையோடு, உடைமைகளையும் எடுத்துகொண்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டேன். போகிற வழியில் எதாவது ஆட்டோ கிடைக்காமலா போகும் என்ற நம்பிக்கைதான்.
நடந்து செல்லும் வழியில் பல ஆட்டோக்கள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக வந்து போயின. ஆனால் எல்லா ஆட்டோக்களும் பயணிகளோடு சென்றும், வந்தும் கொண்டிருந்தன. என்னடா இது ஒரு ஆட்டோவும் கிடைக்கவில்லையே என நொந்துகொண்டு நடக்கையில், எதிரே வந்துகொண்டிருந்த ஒரு ஆட்டோவை கையைக் காட்டி அழைத்தேன். ஆட்டோ அருகினில் வந்த பின்புதான் தெரிந்தது, அது "அந்த" ஆட்டோ என்று. சிரித்துக்கொண்டே சொன்னார், என்ன சார் ஒரு ஆட்டோவும் கிடைக்கலாயா; நூற்றியென்பாதாவது குடுங்க. வேறுவழி. நூற்றியென்பதைக் கொடுத்து அன்றைய விதியை எதிர்கொண்டேன்.
oOo
அது என்னனு தெரியல. ப்ளாஷ்க்குக்கும் எங்க வீட்டுக்கும் ராசியே இல்லை. "Vacuum flask ஒன்னு வாங்கனும்ப்பா" என்று மனைவி சொன்னவுடன், கடன் அட்டையில் சேர்ந்த புள்ளிகளை ப்ளாஷ்க்காக மாற்றினேன். கிரெடிட் கார்டு தொடர்பான பரிமாற்றங்கள் அனனத்தும் அலுவலக முகவரியில்தான் இருந்தது. செக்யூரிட்டி அலவலகத்தில் வாங்கப்படும் பொருளானது எனது இருக்கைக்கு வராமலா போகும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். வழக்கமாக எல்லா கடிதங்களும் இருக்கைக்கே வந்துவிடும். இல்லையேல் நம்மை தொலைபேசியில் அழைத்து, நேரில் வந்து பெற்றுக்கொள்ளச் சொல்வார்கள். ஆனால் இரண்டு வாரத்தில் வருமென்று சொல்லப்பட்ட ப்ளாஷ்க் மூன்று வாரங்களாகியும் வராததால், வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஏற்கனவே டெலிவரி பண்ணியாச்சே சார் என்று சொல்லவும், என்னடா இது வம்பா போச்சு என என்ணிக்கொண்டு, பொருளை வாங்கியவரின் விவரத்தைப் பெற்றுக்கொண்டு விசாரித்ததில், செக்யூரிட்டி ஆபீசில் சரியான பதில் இல்லை. யாரிடம் சென்று புகார் அளித்தாலும் வேலைக்காவாது எனத் தெரியும். ஆதலால் ப்ளாஷ்க்கை கவலையோடு மறந்துவிட்டேன்.
அதற்குப் பின்னர் கொஞ்ச நாள் கழித்து, வேறொரு ப்ளாஷ்க் வாங்கினோம். வாங்கிய மறுநாளே கைதவறிக் கீழே விழுந்ததில், கீறல் விட்டுப் பயன்படுத்தமுடியாமல் போய்விட்டது. பிளாஸ்டிக் ப்ளாஷ்க் என்பதால்தான் கீழே விழுந்தவுடன் உடைந்துவிட்டது; அடுத்த முறை ஸ்டீலில் வாங்கிடலாம் என்ற முடிவோடு இருக்கையில், சரவனா ஸ்டோர் சென்றிருந்தபோது அங்கு ஒன்று வாங்கினோம். இவ்வளவு குறைந்த விலைக்கு இவ்வளவு பெரிய ப்ளாஷ்க் தரும்போதே நான் சுதாரித்திருக்க வேண்டும். நம்ம தான் அப்படியில்லையே..டீக்கடையில் வடை எடுக்கும்போது கூட எது நமக்கு சற்றுப் பெரியதாகத் தெரிகிறதோ அதைத் தானே எடுப்போம். ரெண்டே ரெண்டு நாள்தான்; அந்த ப்ளாஷ்க் செத்துப்போனது. (ப்ளாஷ்க்கையே செத்துப்போனது என்று சொல்கிறேனெனில் எவ்வளாவு கடுப்பாகியிருப்பேன் என யூகித்துக்கொள்ளூங்கள்) ஒரு மணி நேரம் கூட தன்னால் வெப்பத்தைத் தாங்கமுடியாமல் எங்களைத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது.
இதுவும் போச்சா.. சரவனா ஸ்டோரில் வாங்கினாலே இப்படித்தான். எந்தப் பொருளிலும் குவாலிட்டியே இருக்காது; அடுத்த முறை வேறொரு கடையில் தான் வாங்கவேண்டுமென முடிவு செய்து, வாங்கியும் விட்டோம். இது நன்றாகத் தன் பணியைச் செய்து, அப்பாடா என்ற பெருமூச்சையும் வரவைத்தது. ஆனால் விதி ப்ளாஷ்க்கை விட்டதா? இல்லையே. போன முறை ஊருக்குச் செல்லும்போது, ரயிலில் என் குழந்தைக்கு நன்றாகப் பயன்பட்ட இந்த ப்ளாஷ்க்கை, மறக்காமல் சென்னைக்குத் திரும்பும்போதும் சூடான பாலோடு எடுத்து வைக்கத் தவறவில்லை. மறுநாள் காலையில் தாம்பரத்தில் இறங்கி, வீட்டிற்குச் சென்று பார்க்கையில் ப்ளாஷ்க் இல்லை. நெல்லை எக்ஸ்பிரஸிலேயே போய்விட்டதா? இல்லை வீட்டிற்கு வந்த ஆட்டோவிலேயே திரும்பிப் போய்விட்டதா என இன்னும் புலப்படவில்லை.
ஒரு மாதத்தில் நான்கு ப்ளாஷ்க் வாங்கியும், எதுவுமே நம் வீட்டில் தங்கவில்லை. இனிமேலும் நமக்கு ப்ளாஷ்க் தேவையா? வேண்டவே வேண்டாமென குடும்பத்தோடு ஒரு மனதாக முடிவெடுத்து விட்டோம். இப்பொது எங்கள் வீட்டில் ப்ளாஷ்க் இல்லை; இனிமேலும் வாங்கப் போவதில்லை.
oOo
இப்ப சொல்லுங்க. விதி வலியதோ?
உழவன்
Monday, March 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
அடப்பாவமே, ஃப்ளாஸ்க் கதை ரொம்பவே சோகமால்லா இருக்கு. ஆட்டோ கதை அதுக்கும் மேலே.
சிரிப்பு வந்தாலும், உண்மையிலேயே விதி வலியதுன்னுதான் நம்ப வைக்குது. ஆனாலும், விதியை மதியால் வெல்லலாம்கிறதையும் மறக்க முடியல. அதுக்காகவாவது கடைசி முயற்சியா இன்னும் ஒரே ஒரு ஃப்ளாஸ்க் வாங்கிப் பாருங்க.
சிரிக்கிறதா அழுவதா என்று தெரில..
ஆனால், கரீம்பாய்ஸ் அல்லது போப்பட்ஜமால் கடைகளில் வாங்குங்கள். எனக்கு அங்கே வாங்கிய கிச்சன் உபகரணங்கள் /பாத்திரங்கள் / கிறிஸ்டல்வேர்- கண்ணாடிகள் இன்று வரை உபயோகப் பட்டு கொண்டிருப்பதால், "ராசியான", "ஆசிர்வதிக்கப்பட்ட", கடைனும் சொல்லிக்கலாம்.. :))
ரொம்பவே வலியதுதான்.
விதூஷ் சைக்கிள் கேப்பில விளம்பரம் பண்ணிட்டு போறீங்களே:))
முதல் விஷயத்தில் விதி வலியதேதான். அதுவும் அதே ஆட்டோக்காரரிடம் மாட்டியது கொடுமைதான்:)!
அடுத்ததில் ஒத்துக் கொள்ளவே முடியாது. நல்லாப் பார்த்து இன்னொரு ஃப்ளாஸ்க் வாங்கி கவனமாய் உபயோகித்து அடுத்த மாதம் இன்னொரு பதிவு போடுங்கள்!
இடுகை அருமை!
//டீக்கடையில் வடை எடுக்கும்போது கூட எது நமக்கு சற்றுப் பெரியதாகத் தெரிகிறதோ அதைத் தானே எடுப்போம்.//
நல்ல லாஜிக்:))! பெரிசா இருப்பதுதான் சமயத்தில் உள்ளே வெந்திருக்காது:)!
விதி வலியது தான்...பெரும்பாலும் ஸ்பென்சர் அல்லது ரிலயன்ஸ் ஸ்டோர்களிலும் ப்ளாஸ்க் வாங்கக் கூடாதென்பது நான் கற்றுக் கொண்ட பாடம்,அங்கேயும் வெப்பம் தாங்கவல்லவை அல்ல பிளாஸ்குகள்.
//இப்ப சொல்லுங்க. விதி வலியதோ?//
அப்படித்தான் தோணுது சகா ;-)
//நெல்லை எக்ஸ்பிரஸிலேயே போய்விட்டதா? //
ஆமா நீங்களும் நம்ம ஊரா சகா?
விதி வலியதுதான்.. ஏன்னா.. எங்க வீட்டில நாங்களா தூக்கிப் போடும் வரை ப்ளாஸ்க் நல்லாவே வேலை செய்தது.. அதே ப்ளாஸ்க்னால உங்களுக்கு எவ்வளவு அனுபவம் பாருங்க..:)
ஆட்டோ சம்பவம் சுவாரசியம்.. நம்மைப் பார்த்து நாமே சிரித்து சமாளிக்கும் தருணங்கள் அவை..
பாவமே!
இரண்டு அனுபவங்களும் அருமையாக பகிர்ந்திருக்கீங்க, ஆனால் முதலில் உள்ளது ஆட்டோவில் போயே ஆகவேண்டும் அதனால சட்டுபுட்டுன்னு காச கொடுத்து போயாச்சு, அடுத்தது அத்தனை அவசரமில்லாதது, அதனால் ஹுசைனம்மா சொன்னது மாதிரி, அடுத்த கட்ட முயற்சியா ஒரு ப்லாஸ்க் வாங்கிடுங்க அதையும் தான் பார்த்துடுவோமே(அவ்ளோ சுலுவா விட்டுருவோமா..?)
நன்றி ஹுஸைனம்மா
நன்றி Vidhoosh (தகவலுக்கு நன்றி)
நன்றி ராமலக்ஷ்மி (நீங்க அனுப்பிய ஃப்ளாஷ்க் க்கு நன்றி :-))
நன்றி வித்யா (அப்படினா அந்தக் கடையெல்லாம் விதூஷ் மேடத்துக்கு சொந்தமான கடைகளா :-))
நன்றி KarthigaVasudevan
நன்றி ஜெனோவா (ஒரே ஊராவா.. அப்படியும் சொல்லிக்கலாம் :-))
நன்றி PPattian : புபட்டியன் (நல்லா வேலை செய்கிற ப்ளாஷ்க ஏங்க தூக்கிப்போடுறீங்க?
நன்றி அதிஷா
நன்றி henry J (உங்க விளம்பரத்துக்கு நன்றி)
நன்றி SUFFIX (இதையெல்லாம் ஒரு இடுகையா போட்டா, யாராவது நமக்கு ஐயோ பாவம்னு நினைச்சி, ஒரு ப்ளாஷ்க் கிப்ட் கொடுப்பாங்கனு பார்த்தா, எல்லோரும் என்னையே வாங்கச் சொல்லுறீங்க.. என்ன கொடுமை சார் இது. :-))
தமிலிஷ்ல ஓட்டு போட்டவங்களுக்கும் நன்றி
ரொம்பவே வலியதுதான்
:(((
ஹுசைனம்மா சொல்றா மாதிரி விதியை மதியால் வெல்ல உடனடியாக ஒரு ஈகிள் அல்லது பட்டர்ஃப்ளை ப்ராண்ட் ப்ளாஸ்க் ஆக பார்த்து வாங்கிவிடவும். :)
நன்றி சே.குமார்
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா..புதுசு ஒன்னு வாங்கிரலாம் :-)
flask & auto amivathellaam iraivan koduththa varam.........:)
but,
tharamaana flask vaanga vaazhthukal.
//இரசிகை
flask & auto amivathellaam iraivan koduththa varam.........:)
but,
tharamaana flask vaanga vaazhthukal. //
ம்ஹூம்.. ப்ளாஷ்க் வாங்குற மாதிரி ஐடியாலே இல்ல :-)
naanum kovilpattithan ninga entha urr
// வித்யாஷங்கர்
naanum kovilpattithan ninga entha urr//
கீழ்க்கண்ட இந்தப் பதிவைப் படிங்க :-) மிக்க மகிழ்ச்சி இப்படி உரிமையோடு கேட்டதற்கு.
http://tamiluzhavan.blogspot.com/2010/10/blog-post_31.html
Post a Comment