Sunday, February 21, 2010

சாரை சாரையாய்...

ஒற்றையடிப் பாதையில்
சாரை சாரையாக
நேரும் எதிருமாகப் பரபரப்புடன்
சென்று கொண்டேயிருக்கிறார்கள்
சிலர் உணவுப் பொட்டலத்தோடு
எதிர்வரும் ஒவ்வொருவரையும்
கடக்கும்போதும் ஒரு விநாடி
ஏதோ பேசிக்கொள்கிறார்கள்
எங்கிருந்து வருகிறார்கள்
எங்கே போகிறார்கள்
எதுவும் புலப்படவில்லை
அறியும்பொருட்டு பின் தொடர்ந்தேன்
ஒரு இடத்தில்
பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்
யாரோ கொண்டுவந்த உணவை
யாரோ சாப்பிடுகிறார்களா இல்லை
இவ்வளவு பேரும் ஒரே குடும்பத்தார்களா
புரியவில்லை வியந்தேன்
சாப்பிட்டு முடித்த ஒருவன்
தண்ணீர் கூட குடிக்காமல்
எங்கோ ஓடுகிறான்.

இந்த ஆண்டிற்கான எட்டு கேசுவல் லீவில்
மீதமிருந்த இரண்டை
டிசம்பரில் எடுத்துத்
தூங்கிக் கழித்துக் கொண்டிருந்த
முதல் நாளில்தான் இவர்களைக் கண்டேன்.
எடுத்துவந்த விஷப்பொடியைத் தூக்கி எறிந்துவிட்டு
சிறிது சர்க்கரையை
அவர்களின் மேல் தூவிவிட்டு
அலுவலகம் புறபட்டுவிட்டேன்.

உழவன்

நன்றி: நவீன விருட்சம்

நன்றி உயிரோசை (12.04.2010)

32 comments:

ராமலக்ஷ்மி said...

'சாரை சாரையாய்’ போகுமிவற்றைக் கவனிப்பது பொழுது போக்காகவும் இருந்திருக்கிறது சின்னவயதில். ஆள்காட்டி விரலில் சர்க்கரையை வைத்து நீட்டினால் தூக்கிச் செல்லும் சுவற்றில் செல்லுபவை.

நல்ல அவதானிப்புடனான வரிகள். முடிவு ரொம்பப் பிடித்தது. வாழ்த்துக்கள் தொடர்ந்து அசத்த:)!

ராமலக்ஷ்மி said...

//சாப்பிட்டு முடித்த ஒருவன்
தண்ணீர் கூட குடிக்காமல்
எங்கோ ஓடுகிறான்.//

அருமை:)!

வித்யா said...

நல்லாருக்கு..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு..

ஜெனோவா said...

கூர்ந்த கவனிப்பு , முடித்த விதம் மிகப் பிடித்திருந்தது சார் ;-)

அமிர்தவர்ஷினி அம்மா said...
This comment has been removed by the author.
அமிர்தவர்ஷினி அம்மா said...

நிறைய கவனிக்க ஆரம்பிச்சிட்டீங்க போல :)))))

கவிதை நல்லா இருந்துச்சு.

நவீன விருட்சத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்

SUFFIX said...

எல்லொரும் சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன், ஆமாம், நிறையவே கவனிக்க ஆரம்பிச்சிட்டிங்க, வரிகள் நல்லா இருக்கு.

PPattian : புபட்டியன் said...

அருமை அந்த காண்ட்ராஸ்ட்.. தூங்கிக் கழிக்கும்போது கிடைத்த பாடம்..

padma said...

இந்த மனநிலை தான் நம்மை மற்றவரிடமிருந்து வேறுபடுத்துகிறது

ஹேமா said...

மனிதர்களை ரசிப்பதை விட்டுவிட்டு இப்போவெல்லாம் இப்படி ரசிப்பது மனதுக்கு இதமாகவே இருக்கிறது.

சே.குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு.

அகநாழிகை said...

கவிதை அருமை. வாழ்த்துகள்

யாழினி said...

கவிதை நல்லாருக்கு..

V.Radhakrishnan said...

வித்தியாசமான அழகிய கவிதை.

என்.விநாயகமுருகன் navina14@hotmail.com said...

விஷப்பொடியைத் தூக்கி எறிந்துவிட்டு
சிறிது சர்க்கரையை
அவர்களின் மேல் தூவிவிட்டு
அலுவலகம் புறபட்டுவிட்டேன்.

இந்த வரிகள் அதிர்வுகளையும் வலியையும் உண்டாக்குகிறது. கவிதை அருமை

Anonymous said...

பளார் என்ற சத்ததோடு படித்து முடித்தேன்....பாடமாயும் பொருள் கொண்டதாயும் கவிதை அருமை உழவன்..

"உழவன்" "Uzhavan" said...

@ராமலக்ஷ்மி  - ரொம்ப மகிழ்ச்சி. நீங்க அந்தக் காலத்திலேயே எறும்புக்கு சர்க்கரை கொடுத்த பரம்பரை :-) மிக்க நன்றி.
 
@ஜெனோவா - ரொம்ப மகிழ்ச்சி ஜெனோ.. நெல்லை வந்தா உங்கள பார்க்கலாமா?
 
@அமிர்தவர்ஷினி அம்மா - கவனிக்கும் விஷயத்துல நீங்கதான் கிங்கு அமித்துமா :-)
 
@அகநாழிகை - தங்களின் தொடர் வருகையும், பாராட்டுக்களும் மிக்க மகிழ்ச்சி தருகிறது ஜி :-)
 
@யாழினி - முதல் வருகைக்கு நன்றி

"உழவன்" "Uzhavan" said...

@என்.விநாயகமுருகன் - மிக்க மகிழ்வாய் உணர்கிறேன் நண்பா.
 
@தமிழரசி - பளார் என்ற சத்தமா? அது எங்க இருந்து வருது? :-) நன்றி தமிழ்
 
@வித்யா - ரொம்ப நன்றிங்க
 
@T.V.ராதாகிருஷ்ணன் - நன்றி
 
@SUFFIX - நன்றி SUFFIX

"உழவன்" "Uzhavan" said...

@PPattian : புபட்டியன் - நன்றி புபட்டியன்
 
@padma - மிக்க நன்றி
 
@ஹேமா - நன்றி ஹேமா
 
@சே.குமார் - நன்றி
 
@V.Radhakrishnan  - மகிழ்ச்சியும் நன்றியும்

"உழவன்" "Uzhavan" said...

தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும் அனைவருக்கும் மிக்க நன்றி

ராமலக்ஷ்மி said...

//எறும்புக்கு சர்க்கரை கொடுத்த பரம்பரை :-)//

இருக்கட்டும் இருக்கட்டும்:)!

முதலிலே சொன்னால் மற்றவருக்கு சஸ்பென்ஸ் போய்விடுமென எல்லோரும் வாசித்தபின் சொல்ல விரும்பியது:

இக்கவிதையின் வெற்றி முதல் வாசிப்பில் முதல்பத்தி முடிகையில் எதைப்பற்றி பேசுகிறீர்கள் என்பது புரியாமலிருப்பதும்தான். புலனான பின் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. ‘கூடி உண்பவரெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவரா’ எழும் ஆச்சரியத்துக்கு சமூகமும் காரணமாகிறது. இதமான முடிவில் தெரிவது மனிதம் மட்டுமல்ல மனிதனால் இதெல்லாம் முடியவில்லையே எனும் ஆதங்கமும்தான். நல்லாயிருங்க என்பது போலப் போற்றித் தூவிச் செல்கிறானோ பூவுக்குப் பதில் சர்க்கரையை:)? ரசித்தேன்.

"உழவன்" "Uzhavan" said...

என்ன சொல்றதுனே தெரியல.. மிக்க நன்றி

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லா, எதார்த்தமா இருக்கு உழவன்.

"உழவன்" "Uzhavan" said...

/விக்னேஷ்வரி
ரொம்ப நல்லா, எதார்த்தமா இருக்கு உழவன். //
 
ரொம்ப நன்றிங்க :-)

சி. கருணாகரசு said...

அங்கே நான் ... உழைப்பு, கூட்டு வாழ்க்கை, ஒழுங்கு போன்றவற்றையும் காண்கிறேன்... கவிதை நல்லாயிருக்குங்க.

"உழவன்" "Uzhavan" said...

//சி. கருணாகரசு
அங்கே நான் ... உழைப்பு, கூட்டு வாழ்க்கை, ஒழுங்கு போன்றவற்றையும் காண்கிறேன்... கவிதை நல்லாயிருக்குங்க. //
 
மிக்க மகிழ்ச்சி. நன்றி

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

இரசிகை said...

nice.........!

"உழவன்" "Uzhavan" said...

//இரசிகை
nice.........! //
 
என்னுடைய நிறையக் கவிதைகளைப் படித்துவிட்டு, எல்லாவற்றிற்கும் பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி..
தொடர்ந்து வாங்க..

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு உழவரே!

"உழவன்" "Uzhavan" said...

நன்றி பா.ராஜாராம் அவர்களே