Sunday, March 14, 2010

உழவனின் "நெல்மணிகள்" - 1

இந்த மாதம் நடைபெற்ற (மார்ச் 14' 2010) "கேணி" யில் எழுத்தாளர் "நாஞ்சில் நாடன்" அவர்கள் கலந்துகொண்டார். ஒரு படைப்பாளி தான் தெரிந்து வைத்திருக்க வேண்டிய மொழியின் அளவைப் பற்றி மிக அருமையாகப் பேசினார். வெறும் ஆயிரக்கணக்கான சொற்களை மட்டுமே தெரிந்துவைத்துக்கொண்டு படைப்புகளைப் படைக்காமல், நம் மொழியில் புதைந்துகிடக்கும் லட்சக்கணக்கான சொற்களைத் தெரிந்துவைத்து, அந்தச் சொற்களையெல்லாம் உங்களால் இன்னும் எவ்வளவு காலம் வாழவைக்கமுடியுமோ அவ்வளவு காலம் வாழவையுங்கள் என்றார். "என்னைப் பயன்படுத்து என்னைப் பயன்படுத்து" என்று சொற்கள் என் முன்னால் வந்து ஒன்றோடொன்று போட்டிபோடும் என பாரதிதாசன் சொல்வதுபோல, படைப்பாளிகள் முன்னால் இப்படி சொற்கள் வந்து போட்டிபோடவேண்டும் என்றார். இதற்கு அவர் நிறைய உதாரணங்களையும் சொன்னார்.
 
"எல்லா மொழிகளுமே செம்மொழிதான். நான் எப்படி என் மொழி மட்டும்தான் செம்மொழி என்று சொல்லமுடியும்" என்று கூறியதோடு, பல மொழிகளிலிருந்து தோன்றிய பல படைப்பாளிகளின் பெயரையும் சொன்னார். மொழிக்கான மாநாடுகள் அரசியல் காரணங்களுக்காகத்தான் இப்பொது நடைபெறுகின்றன என்றும், வர இருக்கும் செம்மொழி மாநாட்டுக்கு, மொழியை உண்மையிலேயே செம்மொழியாக்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கு அழைப்பிதழ் வர வாய்ப்பேயில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பல இடங்களில் ஜெயமோகனை வெகுவாகப் பாராட்டினார். (முடிந்தால் இது பற்றி விரிவான பதிவு ஒன்றை எழுதுகிறேன்)
மிகவும் அன்போடு பேசி, புத்தகத்தில் கையெழுத்திட்டுத்தந்த எழுத்தாளர் "நாஞ்சில் நாடன்" அவர்களுக்கு என் அன்பான நன்றிகள்.
 
oOo
 
மார்ச் 4ம் தேதி "தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினமாக" அனுசரிக்கப்படுகிறது. பணியிடத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் ஏற்படவேண்டும் என்பதற்காக, அன்றைய தினத்தில், தொழிற்சாலைகளில் பாதுகாப்பு தொடர்பான பல நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு எனது தொழிற்சாலையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான ஸ்லோகன் போட்டியில் அடியேன் கலந்துகொண்டேன். என்னுடைய கீழ்க்கண்ட ஸ்லோகனுக்கு மூன்றாவது பரிசு கிடைத்துள்ளது. நிர்வாகத்திற்கு எனது நன்றி.
 
"தீயை விரல் வைத்து உணராதே
பாதுகாப்பை விபத்தின் மூலம் கற்காதே"

 
முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற எனது சக பணியாளர்களின் ஸ்லோகன்கள் கீழே. அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
 
"விதிகள் எதிரிகளானால், விபத்துக்கள் விருந்தாளிகளாகும்"
 
"சரியான கவனம் பணியிடத்தில், சுகமான பயணம் வாழ்விடத்தில்"
 
oOo
 
இந்த மாத (மார்ச் 2010) "வெள்ளிநிலா" மாத இதழில் என்னுடைய "உன் பெயர் என்ன?" என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. ஆசியருக்கு என் நன்றி.
கட்டுரையப் படிக்க தலைப்பை கிளிக்கவும்.
 
oOo
 
உலகமே எதிர்பார்த்திருந்த/கண்டுகொள்ளாத ஐபிஎல் கோலகலமாக (மார்ச் 12) ஆரம்பித்துவிட்டது. ஐபிஎல்-ன் விசேசம் என்னவென்றால், சர்வதேசப் போட்டிகளில் முறைத்துக்கொண்டு ஆடிய வீரர்களுடன், இப்போது கைகோர்த்துக்கொண்டு ஆடவேண்டிய நிலைமையும், அதேபோல் ஒரே நாட்டைச் சேர்ந்த் வீரர்கள், பல அணிகளோடு சேர்ந்து எதிரும் புதிருமாக விளையாடவேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. இது ஒருவகையில் பல நாட்டு வீரர்களுடன் நட்பு ஏற்படவும் வாய்ப்பை உருவாக்கித் தருகிறது என்றும் சொல்லலாம்.
 
கடந்த இரண்டு ஐபிஎல் போட்டிகளிலும் கோப்பையைத் தட்டிச் சென்றவர்கள் ஆஸ்திரேலிய கேப்டன்களே. முதல் ஐபிஎல் போட்டியில் ஷேர்வார்னேவும், கடந்த ஐபிஎல் போட்டியில் கில்கிறிஸ்ட்டும் கேப்டன்களாக இருந்த அணிகள்தான் வெற்றிபெற்றன. (சென்னை அணிக்கு இந்த முறை ஹெய்டனை கேப்டனாக்கியிருக்கலாம்) முதல் ஐபிஎல் போட்டியில், கேப்டனாக இருந்த ஒரே வெளிநாட்டு வீரர் ஷேர்ன்வார்னேதான் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ!! இன்னும் ஒரு மாதத்திற்குத் தூக்கம் கெடப்போகிறது. பள்ளி இறுதித் தேர்வு மாணவர்கள் உஷார். ஐபிஎல் போட்டியை மூட்டை கட்டி வைத்துவிட்டு தேர்வுக்குத் தயாராகுங்கள்.
 
oOo
 
நம தமிழக முதல்வர் அவர்கள் நினைத்தது போலவே, புதிய சட்டமன்றக் கட்டிடமானது கடந்த வாரம் (13.03.2010) பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களால் திறக்கப்பட்டுவிட்டது. வழக்கம்போல பல குற்றச்சாட்டுகள் இருப்பினும், கட்டிடம் பார்ப்பதற்கு மிக பிரமாண்டமாய் உள்ளது. வரும்காலங்களில் சென்னையின் மிக முக்கியமான கட்டிடங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
 
புனித ஜார்ச் கோட்டையில் சட்டமன்றம் நடைபெறும்போது, சட்டசபையை வெளிநடப்பு செய்துவிட்டு, சாலையில் வந்தமர்ந்து மறியில் போராட்டங்களில் நம் சட்டமன்ற உறுப்பினர்கள் சில சமயங்களில் ஈடுபடுவார்கள். அதுபோல இனிமேல் போராட்டம் என்ற பெயரில், அண்ணா சாலையில் வந்து அமர்ந்துவீடாதீர்கள்.
 
உழவன்

28 comments:

நிலாரசிகன் said...

Nanjil Nadan - I missed it :(
Arumaiyana pahirvugal ulavan.

Nandri.

(Sorry for Taminglish,Some issue with Tamil fonts)

ராமலக்ஷ்மி said...

உங்கள் பெயருக்குப் பொருத்தமாக, இத்தொடருக்கு தேர்ந்தெடுத்த பெயர் ‘நெல்மணிகள்’! ரசித்தேன் தலைப்பையும் பகிர்வுகளையும்.

//கீழ்க்கண்ட ஸ்லோகனுக்கு மூன்றாவது பரிசு கிடைத்துள்ளது.//

அருமையான வாசகம். வாழ்த்துக்கள்!

"உழவன்" "Uzhavan" said...

@நிலாரசிகன்: ஏன் நிலா வரவில்லை. வரமுடியவில்லையா? அவரின் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது.
வருகைக்கு நன்றி

@ராமலக்ஷ்மி – தலைப்பை ரசித்தமைக்கு நன்றி :-)

தமிழ் உதயம் said...

புனித ஜார்ச் கோட்டையில் சட்டமன்றம் நடைபெறும்போது, சட்டசபையை வெளிநடப்பு செய்துவிட்டு, சாலையில் வந்தமர்ந்து மறியில் போராட்டங்களில் நம் சட்டமன்ற உறுப்பினர்கள் சில சமயங்களில் ஈடுபடுவார்கள். அதுபோல இனிமேல் போராட்டம் என்ற பெயரில், அண்ணா சாலையில் வந்து அமர்ந்துவீடாதீர்கள்.




ஸ்கூலுக்கு போற பிள்ளைய, "ஒழுங்கா ஸ்கூலுக்கு போடான்னு சொல்லி" அனுப்புவோம் பாருங்க. அது மாதிரி சொல்லி இருக்கீங்க. பார்ப்போம்.

நாளும் நலமே விளையட்டும் said...

எல்லா மொழிகளும் செம்மொழினு எப்படி சொல்வாரு?
எல்லா பிள்ளைகளும் பிள்ளைகள் தான்!
வரையறை என ஒன்று உண்டு எல்லாவற்றுக்கும்.
இங்கிலீஷ் செம்மொழி அல்ல என்பதை எல்லோரும் அறிவர்.
செம்மொழிக்கான வரைமுறை மாற்றாதவரை எல்லா மொழியும் செம்மொழி ஆகாது.
நம் மக்களிடம் இது ஒரு தொல்லை. "எல்லாவற்றையும் நிரவுவது". எப்படிங்க இது சரி?

Chitra said...

என்னுடைய கீழ்க்கண்ட ஸ்லோகனுக்கு மூன்றாவது பரிசு கிடைத்துள்ளது. நிர்வாகத்திற்கு எனது நன்றி.

........... வாழ்த்துக்கள்!
பதிவு அருமையாக உள்ளது.

'பரிவை' சே.குமார் said...

மூன்றாம் பரிசுக்கு பாராட்டுக்கள்.

நல்ல பதிவு.

நம்ம ஆளுங்க அண்ணாசாலைக்கு வரமாட்டாங்களா என்ன?. மறியலில் ஈடுபடாத அரசியல்வாதி உண்டா இங்கே. பார்க்கலாம் அண்ணாசாலையின் நிலையை.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

தலைப்பு சூப்பர். பதிவும் மனிகலாகத்தான் இருக்கிறது.
Post a comment தெளிவாக இல்லை. Light green என்பதால் தெரியவில்லை. ஆவன செய்யுங்கள். எனக்கும் இதே பிரச்சனை இருந்தது. Lay out யை மாற்றிவிட்டேன்.

"உழவன்" "Uzhavan" said...

//தமிழ் உதயம்
ஸ்கூலுக்கு போற பிள்ளைய, "ஒழுங்கா ஸ்கூலுக்கு போடான்னு சொல்லி" அனுப்புவோம் பாருங்க. அது மாதிரி சொல்லி இருக்கீங்க. பார்ப்போம்.//
 
நான் சொல்லத் தவறியதை நீங்கள் தான் அழகாக சொல்லியுள்ளீர்கள். கருத்துக்கு நன்றி

"உழவன்" "Uzhavan" said...

தமிலிஷில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி

"உழவன்" "Uzhavan" said...

@நாளும் நலமே விளையட்டும்
 
இது உங்களுடைய எண்ணம். அது நாஞ்சில் நாடன் அவர்களின் எண்ணம். எண்ணங்களும் கருத்துகளும் ஒருவருக்கொருவர் மாறுபடலாம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

"உழவன்" "Uzhavan" said...

@Chitra
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

"உழவன்" "Uzhavan" said...

@சே.குமார்
 
அண்ணா சாலைக்கும் வருவார்கள். அவர்களுக்கென்ன மக்களைப் பற்றிய கவலை.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

"உழவன்" "Uzhavan" said...

@ஜெஸ்வந்தி
 
தலைப்பை ரசித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. அதன் கலரை மாற்ற முயல்கிறேன்.

ச.முத்துவேல் said...

NELMANIKAlUKKU VAAZHTHUKAl.KALANJIYAMAY KUVIYUNGKAl, VARUM NATKAlIL.

T.V.ராதாகிருஷ்ணன் said...

தெரிந்திருந்தால் நானும் வந்திருப்பேன்..ஆமாம்..நாஞ்சில் நாடனின் 'நீலமணி டீச்சர்' சிறுகதைப் பற்றி என் பதிவை படித்தீர்களா?

ஹுஸைனம்மா said...

எல்லாமே சுவாரசியமான விஷயங்கள். ஸ்லோகனும் நல்லாருக்கு.

//போராட்டம் என்ற பெயரில், அண்ணா சாலையில் வந்து அமர்ந்து//

இனி அதான் நடக்கும்!! சும்மாவே அங்கங்க ட்ராஃபிக்கை நிப்பாட்டி வப்பாங்க; இனி இது வேற!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நெல்மணிகள் - தலைப்பு ரொம்ப அழகு, அருமை + பொருத்தமும் கூட.

நாஞ்சில் நாடன் : மிகப் பிடித்த எழுத்தாளர். கலந்துகொள்ளமுடியாத வருத்தம் :(

இது என்ன பரிசு வருஷமா, அலுவலகத்துலயும் வாங்க ஆரம்பிச்சுட்டீங்க.

வாழ்த்துக்கள் உழவன் @ அகமதி அப்பா.

"உழவன்" "Uzhavan" said...

நன்றி ச.முத்துவேல்.. உங்களது பின்னூட்டம் மிக்க மகிழ்வைத் தருகிறது :-)

"உழவன்" "Uzhavan" said...

@T.V.ராதாகிருஷ்ணன்
 
நாஞ்சில் நாடன் வருகிறார் என்று தெரியாதா? எனக்கும் கேணி அமைப்பிலிருந்து வந்த குறுஞ்செய்தி மூலம்தான் அவர் வருகிறார் என்று தெரிந்துகொண்டேன்.
உங்களின் நீலவேணி டீச்சர் பதிவைப் படித்தேன்.
 
அருமையான கதை. நானும் விகடனில் படித்தேன்.
இக்கதைக்கு நாஞ்சில் அவர்கள் வைத்த பெயர் "தெரிவை". விகடன் அவரது அனுமதியுடன் ஏதோ ஷகிலா பட டைட்டில் போன்று "நீலவேணி டீச்சர்" என்று வைத்துவிட்டது.
இதை நாஞ்சில் நாடன் அவர்கள் தான் சொன்னார். :-)

"உழவன்" "Uzhavan" said...

மிக்க நன்றி ஹுஸைனம்மா. உங்களின் தொடர் வருகைக்கு மகிழ்ச்சி.

"உழவன்" "Uzhavan" said...

@அமிர்தவர்ஷினி அம்மா
 
எதிர்பாராமல் தற்செயலாய் வைத்த தலைப்பு அது. எல்லோரும் பாராட்டும்போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
 
//நாஞ்சில் நாடன் : மிகப் பிடித்த எழுத்தாளர். கலந்துகொள்ளமுடியாத வருத்தம் :(//
 
உங்களுக்கும் தெரியாதா? :-(
 
//இது என்ன பரிசு வருஷமா, அலுவலகத்துலயும் வாங்க ஆரம்பிச்சுட்டீங்க.

வாழ்த்துக்கள் உழவன் @ அகமதி அப்பா//
 
மிக்க நன்றி :-))

"உழவன்" "Uzhavan" said...

அடுத்த மாத கேணிக் கூட்டத்திற்கு (11.04.2010) தமிழ்ச்செல்வன் அவர்கள் வருகிறார் என்பதை இதன்மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

தமிழ் மதுரம் said...

நெல்மணிகள் நெகிழ வைக்கிறது.... தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.

'பரிவை' சே.குமார் said...

எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html


மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

நட்புடன்,

சே.குமார்.

பித்தனின் வாக்கு said...

ஊர் விமர்சனம் நல்லா இருக்கு. உழவனின் செய்திக்குறிப்புகள் என்று போடலாம். மிக்க நன்றி.

பா.ராஜாராம் said...

எவ்வளவு பொருத்தமான தலைப்பு உழவரே!

அருமையான பகிரல்.

"உழவன்" "Uzhavan" said...

நன்றி கமல்
 
நன்றி சே.குமார்
 
நன்றி பித்தனின் வாக்கு

நன்றி பா.ராஜாராம்