Wednesday, July 8, 2009

உன் பெயர் என்ன?

மக்கள் கூட்டமுள்ள சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது, சற்று தூரத்தில் உங்கள் தோழர்/தோழி ஒருவரைப் பார்க்கிறீர்கள். அவரை எப்படிக் அழைப்பீர்கள்? அவசரமாக ஒரு இடத்திற்குச் செல்லவேண்டும். ஆட்டோவில் ஏறிய பின் எந்த இடத்திற்குப் போகச்சொல்லுவீர்கள்?

மேற்கண்ட இரண்டுமே மிக எளிதான கேள்விகள்தான். ஆனால் கேள்விகளின் முடிவில் ஒரு * போட்டு கண்டிஷன் அப்ளைய்டு என்று உள்ளது. அதுவென்னவெனில், "நபருக்கோ, இடத்திற்கோ எந்த பெயரும் இதுவரை வைக்கவில்லை". பெயரில்லாத ஒன்றை எப்படிச் சொல்வது என்று சிந்திக்கும் இவ்வேளையில், ஒரு பெயரின் வலிமை என்ன என்று நமக்குப் புரிந்திருக்கும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் பெயர் வைக்கும் பெற்றோர்கள், ஏதாவது ஒரு காரணத்தோடுதான் வைக்கிறார்கள். தனக்குப் பிடித்த கடவுளின் பெயரையோ, தனது முனோர்களின் பெயர்களை அவர்களின் நினைவாகவோ இப்படி ஏதாவதொரு காரணம் இருக்கும். இது ஒருபுறமிருக்க நியூமராலஜி, அது இது என்றும், ராசிப்படி நட்சத்திரப்படி இந்த எழுத்தில்தான் பெயரானது ஆரம்பிக்கவேண்டும் என்ற ஜோதிடர்களின் அறிவுரைப்படியும் பெயர்கள் வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் எந்த ஜோதிடரும் X,Y,Z... இதுபோன்ற எழுத்தில் ஆரம்பிப்பதுபோல் பெயர் வையுங்கள் என்று சொல்வதில்லை. எந்தெந்த எழுத்துகளிலெல்லாம் பெயர்கள் மலிவாகக் கிடைக்கின்றனவோ அந்த எழுத்துக்களை மட்டுமே அவர்கள் சொல்வார்கள் என்பது வேறுவிடயம். ஆனால் ஒரு குழந்தைக்கு பெயர் வைப்பதில் உள்ள கடினத்தை என் குழந்தைக்கு பெயர் வைக்கும்போதுதான் உணர்ந்தேன் :-)

இப்படி பார்த்துப் பார்த்து வைத்த பெயர்கள், இச்சமூகத்தால் வைக்கப்படுகின்ற பட்டப் பெயர்களினால் சில நேரங்களில் மங்கிப்போவதுமுண்டு. இதுபோல தனக்குத்தானே வைத்துக்கொள்ளும் புனைபெயர்களாலும் அல்லது மற்றோர்களால் வைக்கப்படும் புனைபெயர்களாலும் நம் இயற்பெயரானது சமயங்களில் மங்கிப் போவதுண்டு.

எனது ஊரில் சுப்பையா என்ற ஒருவரை, எல்லோரும் "அம்பது சுப்பையா" என்றும் சிலநேரங்களில் வெறும் "அம்பது" என்று மட்டும் கூட அழைப்பதுண்டு. அவர் தன் வாலிப வயதில் 50 இட்லிகள் சாப்பிடும் போட்டியில் பங்கேற்று வெற்றியும் பெற்றிருக்கிறார். இதனால்தான் அவருக்கு இந்தப் பெயர் வந்திருக்கிறது.

இதுபோல, இன்னொரு பெண்மணியை எல்லோரும் "கம்மாத்தண்ணி" என்றுதான் அழைப்பார்கள். சமீபத்தில் நான் வீட்டிற்குச் சென்றபோது, கம்மாத்தண்ணி மகளுக்கு பரிசம் போடுறாக போய்ட்டுவாரேன் என்று பாட்டி சொன்னதும், அது யாரென உடனடியாக ஞாபகத்திற்கு வராத்தால் குழப்பத்துடன் முழித்தேன். "புழுங்கரிசி" வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்காரி எனப் பாட்டி சொன்னதும்தான் நினைவுக்கு வந்தது. அந்தப் பெண்மணி கண்மாயில் குளித்துக்கொண்டிருக்கும்போது, பள்ளத்தில் மூழ்கி நிறைய தண்ணீர் குடித்துவிட்டாராம். அக்கரையில் குளித்துக்கொண்டிருந்த ஒரு சிலர் இவரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அன்றிலிருந்து இவரை எல்லோரும் "கம்மாத்தண்ணி" என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த "புழுங்கரிசி" எனும் பெயர்க்காரர், பள்ளிப்பருவத்தில் எப்போதும் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அதைத் தன் ட்ரவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு தின்றுகொண்டே இருப்பாராம். இதுதான் இந்தப் பெயருக்கான காரணம். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், அம்பது சுப்பையா என்று ஒருவரைச் சொன்னேனே, அவரின் மகனைக்கூட எல்லோரும் இப்போது "சின்ன அம்பது" என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர். இப்படி எனது கிராமத்தில் முட்டைசேகர், கோழிக்குஞ்சு, கம்பரிசி, எட்டு சுப்பிரமணி... என்று பல பெயர்கள் உள்ளன.

ஊர்ப்பெயர்களைக்கூட ஏதோ ஒரு சில காரணங்களுக்காக அரசாங்கமே மாற்றியமைத்துள்ளன என்பதும் யாமறிந்ததே.

ஒருவரின் செயல்பாடுகள் மற்றோரைவிட வேறுபட்டு, அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, புகழையும் பெற்றுத்தந்தால் அப்புகழானது அவர்களின் பெயர்கள் மீது மகுடமாய் அமர்ந்துகொள்ளும். இவனென்ன அரிச்சந்திரனா? இவளென்ன கண்ணகியா?... ஏதாவது ஒன்றின் சிறப்பைக் கூறும்போது, நாம் இப்படிப் பலரின் பெயரைப் பயன்படுத்துவதுண்டு.

என்னதான் பெயர்களை நமக்குப் பெற்றோர்கள் வைத்தாலும், மற்றோர்கள் வைத்தாலும், இல்லை நமக்கு நாமே வைத்துக்கொண்டாலும் அப்பெயர் நமக்கோர் அடையாளத்தைத் தரவேண்டுமெனில், நாம் நமக்கு விருப்பமான ஏதாவதொன்றில் சாதனை செய்து அப்பெயருக்குப் புகழைப் பெற்றுத்தரவேண்டும்!

சாதிப்போம்.. சரித்திரத்தில் பெயரினைப் பதிப்போம்!

அன்புடன்
"உளறல்கள்" உழவன்


(உங்களின் கருத்துகளும், வாக்குகளுமே பதிவிற்கான அங்கீகாரமும், எழுதுபவனுக்கான ஊக்கமும்)


இந்தப் பதிவை குட் ப்ளாக் பகுதியில் வெளியிட்ட இளமைவிகடனுக்கு நன்றி.

இக்கட்டுரை "வெள்ளிநிலா" மார்ச் 2010 மாத இதழில் இடம்பெற்றுள்ளது.

50 comments:

அ.மு.செய்யது said...
This comment has been removed by the author.
அ.மு.செய்யது said...

பெய‌ரில் இவ்வ‌ளவு ஆராய்ச்சியா ?? அருமை உழவன்.

பெய‌ர் என்ற‌தும் நினைவுக்கு வ‌ருவ‌து சுஜாதா ஒருமுறை எழுதியிருந்தார்.

ஸ்ரீர‌ங்க‌த்தின் தெருக்க‌ளில் வ‌ர‌த‌ராஜ‌ன் என்று கூப்பிட்டால் குறைந்த‌ ப‌ட்ச‌ம் நான்கு பேராவது திரும்பி பார்ப்பார்க‌ள்.

வித்யா said...

நல்ல பதிவு.

குடந்தை அன்புமணி said...

//தமிழ்நாட்டில் எந்த ஜோதிடரும் X,Y,Z... இதுபோன்ற எழுத்தில் ஆரம்பிப்பதுபோல் பெயர் வையுங்கள் என்று சொல்வதில்லை.//

உண்மையோ உண்மை. நல்ல பதிவு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல பதிவுங்க

ஆனால் கேள்விகளின் முடிவில் ஒரு * போட்டு கண்டிஷன் அப்ளைய்டு என்று உள்ளது.

இப்போதைய ட்ரெண்டை சரியாக உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள் :)-


நாம் நமக்கு விருப்பமான ஏதாவதொன்றில் சாதனை செய்து அப்பெயருக்குப் புகழைப் பெற்றுத்தரவேண்டும் //

கண்டிப்பாக. அதுதான் ஆத்ம திருப்தியும் கூட.

S.A. நவாஸுதீன் said...

நல்லதொரு பதிவு.

எங்கள் ஊரிலும் இதுபோன்று சிலரை அழைப்பதுண்டு (பட்டப்பேர்னு சொல்லுவோம்). தலைப்பாகட்டி (எப்போதும் தலைப்பாகை கட்டி இருப்பார்), "நெல்லுக்குள்ள அரிசி வீடு, புளியானக்கார வீடு, இப்படி பல.

ராமலக்ஷ்மி said...

இது மாதிரியான வேடிக்கையான பட்டப் பெயர்கள் நிறையவே எல்லோரும் எதிர்கொண்டிருப்போம்:)!

ஒருசில: வாயில் பல் இல்லாததால் ‘பொக்கு பொக்கு’ ஆச்சி, பேரப்பிள்ளைகளுக்கு விளையாட்டுக் காட்ட ‘கொக்கரக்கோ’ எனக் கூவியதால் ‘கொக்கரக்கோ’ ஆச்சி..!

//விருப்பமான ஏதாவதொன்றில் சாதனை செய்து அப்பெயருக்குப் புகழைப் பெற்றுத்தரவேண்டும்!//

இது பேச்சு. செய்திடுவோம்:)!

கலையரசன் said...

எனக்கு கூட நீங்க சொல்றத பார்த்து..
ஃபங்கு குமார், மின்னல் ராதா, வெள்ளை மணி, பிளேடு சேகர் எல்லாம் ஞயாபகத்துல வர்றாங்க!

ஆ.முத்துராமலிங்கம் said...

அருமையான எழுத்து+பதிவு.

நையாண்டி நைனா said...

அப்படியா....??? சேதி....!!!

"அகநாழிகை" said...

உழவன்,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
சிந்தனையூட்டும் பதிவு.
மிகவும் பிடித்திருக்கிறது.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

" உழவன் " " Uzhavan " said...

//அ.மு.செய்யது
பெய‌ரில் இவ்வ‌ளவு ஆராய்ச்சியா ?? அருமை உழவன்.
பெய‌ர் என்ற‌தும் நினைவுக்கு வ‌ருவ‌து சுஜாதா ஒருமுறை எழுதியிருந்தார்
ஸ்ரீர‌ங்க‌த்தின் தெருக்க‌ளில் வ‌ர‌த‌ராஜ‌ம் என்று கூப்பிட்டால் குறைந்த‌ப‌ட்ச‌ம் நான்கு பேராவது திரும்பி பார்ப்பார்க‌ள்.//
 
ஆராய்ச்சி என்றெல்லாம் சொல்லமுடியாது தோழா.. பட்டப்பேரு என்ற தலைப்பிலே ஒரு கொசுவத்தி பதிவு எழுத ஆரம்பித்து, பிறகு திரிந்து இப்படி முடிந்தது :-)

" உழவன் " " Uzhavan " said...

//வித்யா
நல்ல பதிவு.//
 
சொற்களை மிகச் சிக்கனமாக மட்டுமே பயன்படுத்துவதை உங்களிடன் கண்டேன் :-)) நன்றி தோழி

" உழவன் " " Uzhavan " said...

//குடந்தை அன்புமணி
//தமிழ்நாட்டில் எந்த ஜோதிடரும் X,Y,Z... இதுபோன்ற எழுத்தில் ஆரம்பிப்பதுபோல் பெயர் வையுங்கள் என்று சொல்வதில்லை.//
உண்மையோ உண்மை. நல்ல பதிவு.//
 
இல்லேனா அவங்க பொழப்பு என்னாவது அன்பு? :-)

" உழவன் " " Uzhavan " said...

//அமிர்தவர்ஷினி அம்மா
நல்ல பதிவுங்க
ஆனால் கேள்விகளின் முடிவில் ஒரு * போட்டு கண்டிஷன் அப்ளைய்டு என்று உள்ளது.
இப்போதைய ட்ரெண்டை சரியாக உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள் :)-
நாம் நமக்கு விருப்பமான ஏதாவதொன்றில் சாதனை செய்து அப்பெயருக்குப் புகழைப் பெற்றுத்தரவேண்டும் //
கண்டிப்பாக. அதுதான் ஆத்ம திருப்தியும் கூட. //
 
மிக்க மகிழ்ச்சி அமித்துமா. சாதனை புரிய வாழ்த்துக்களும் கூட :-)
 

" உழவன் " " Uzhavan " said...

//S.A. நவாஸுதீன்
நல்லதொரு பதிவு.
எங்கள் ஊரிலும் இதுபோன்று சிலரை அழைப்பதுண்டு (பட்டப்பேர்னு சொல்லுவோம்). தலைப்பாகட்டி (எப்போதும் தலைப்பாகை கட்டி இருப்பார்), "நெல்லுக்குள்ள அரிசி வீடு, புளியானக்கார வீடு, இப்படி பல.//
 
ஓ அப்படியா. உங்களின் பகிர்வுக்கும் மகிழ்ச்சி. எல்லா ஊரில் மட்டுமா, ஏன் உங்களுக்கும் எனக்கும் கூட இருக்கும் :-)

" உழவன் " " Uzhavan " said...

//ராமலக்ஷ்மி
இது மாதிரியான வேடிக்கையான பட்டப் பெயர்கள் நிறையவே எல்லோரும் எதிர்கொண்டிருப்போம்:)!
ஒருசில: வாயில் பல் இல்லாததால் ‘பொக்கு பொக்கு’ ஆச்சி, பேரப்பிள்ளைகளுக்கு விளையாட்டுக் காட்ட ‘கொக்கரக்கோ’ எனக் கூவியதால் ‘கொக்கரக்கோ’ ஆச்சி..!
//விருப்பமான ஏதாவதொன்றில் சாதனை செய்து அப்பெயருக்குப் புகழைப் பெற்றுத்தரவேண்டும்!//
இது பேச்சு. செய்திடுவோம்:)! //
 
இதுபோன்ற நிறைய பெயர்களை நாம் எல்லோருமே எதிர்கொண்டிருப்போம் சகோதரி. உங்களின் பகிர்வும் மகிழ்ச்சியளிக்கிறது. உங்களின் சாதனைகளூக்கும் வாழ்த்துக்கள்:-)

" உழவன் " " Uzhavan " said...

//கலையரசன்
எனக்கு கூட நீங்க சொல்றத பார்த்து..
ஃபங்கு குமார், மின்னல் ராதா, வெள்ளை மணி, பிளேடு சேகர் எல்லாம் ஞயாபகத்துல வர்றாங்க! //
 
என்ன கலை. ஒரே ரவுடிங்க பெயரா சொல்றீங்க. பதிவை படிகிறவங்க பயந்துரக்கூடாதுல :-)

சொல்லரசன் said...

//இப்படி பார்த்துப் பார்த்து வைத்த பெயர்கள், இச்சமூகத்தால் வைக்கப்படுகின்ற பட்டப் பெயர்களினால்//


இப்ப‌டித்தான் என்னுடைய‌ சிறுவ‌ய‌து ப‌ள்ளிதோழிக்கு தேவி என்று அழ‌கான‌ பெய‌ர்வைத்தார் அவ‌ங்க அப்பா முத்து.நான்காவ‌து ப‌டிக்கும்போது எங்க‌ வ‌குப்பில் இர‌ண்டு தேவி இருந்த‌தால் என‌துதோழியை மு.தேவி என்று அழைக்க‌ ஆர‌ம்பித்து பின்னாளில் மூதேவியாகி இப்போதுகூட‌ என் ந‌ண்ப‌ர்க‌ள் அவளை குறிப்பிடும்போது எல்லாம் மூதேவி என்றுதான் சொல்கிறார்க‌ள்

" உழவன் " " Uzhavan " said...

//ஆ.முத்துராமலிங்கம்
அருமையான எழுத்து+பதிவு.//
 
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கவிஞரே!

" உழவன் " " Uzhavan " said...

//"அகநாழிகை"
உழவன்,
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
சிந்தனையூட்டும் பதிவு.
மிகவும் பிடித்திருக்கிறது.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்//
 
மிகவும் மகிழ்வாக உணர்கிறேன். நன்றி :-)

" உழவன் " " Uzhavan " said...

//நையாண்டி நைனா
அப்படியா....??? சேதி....!!! //
 
ஆம நைனா :-)

" உழவன் " " Uzhavan " said...

//சொல்லரசன்
//இப்படி பார்த்துப் பார்த்து வைத்த பெயர்கள், இச்சமூகத்தால் வைக்கப்படுகின்ற பட்டப் பெயர்களினால்//
இப்ப‌டித்தான் என்னுடைய‌சிறுவ‌ய‌து ப‌ள்ளிதோழிக்கு தேவி என்று அழ‌கான‌பெய‌ர்வைத்தார் அவ‌ங்க அப்பா முத்து.நான்காவ‌து ப‌டிக்கும்போது எங்க‌வ‌குப்பில் இர‌ண்டு தேவி இருந்த‌தால் என‌துதோழியை மு.தேவி என்று அழைக்க‌ஆர‌ம்பித்து பின்னாளில் மூதேவியாகி இப்போதுகூட‌என் ந‌ண்ப‌ர்க‌ள் அவளை குறிப்பிடும்போது எல்லாம் மூதேவி என்றுதான் சொல்கிறார்க‌ள்//

ஓ அப்படியா. உங்களின் பகிர்வுக்கும் மகிழ்ச்சி

அன்புடன் அருணா said...

நல்ல அலசல்!

செந்தழல் ரவி said...

கலக்குறீங்க உழவன்...!!!!!!!!!!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

உண்மையான பெயருக்கு பதிலா பட்டப்பெயருக்கு நல்லா மதிப்புண்டு .

ஒருத்தற உண்மையான பேரச் சொல்லி கூப்பிட்டா திரும்ப மாட்டாங்க .


ஆனா பட்டபெயரை சொன்ன உடனே திரும்பிடுவாங்க .


வாங்க என் பக்கத்துக்கு ...

ஆ.ஞானசேகரன் said...

பெயரில் அருமையான பதிவு, நன்றாக இருக்கு நண்பா

நசரேயன் said...

பதிவு நல்லா இருக்கு

sakthi said...

அசத்தலான அலசல் உழவரே..

" உழவன் " " Uzhavan " said...

//அன்புடன் அருணா
நல்ல அலசல்!//
 
நன்றி தோழி.

" உழவன் " " Uzhavan " said...

//செந்தழல் ரவி
கலக்குறீங்க உழவன்...!!!!!!!!!! //
 
உங்களைப் போன்றோரின் ஆசீர்வாதம்தான். மகிழ்ச்சி தோழா :-)

" உழவன் " " Uzhavan " said...

//Starjan ( ஸ்டார்ஜன் )
உண்மையான பெயருக்கு பதிலா பட்டப்பெயருக்கு நல்லா மதிப்புண்டு .
ஒருத்தற உண்மையான பேரச் சொல்லி கூப்பிட்டா திரும்ப மாட்டாங்க .
ஆனா பட்டபெயரை சொன்ன உடனே திரும்பிடுவாங்க .
வாங்க என் பக்கத்துக்கு ...//
 
ரொம்ப நன்றி. நிச்சயம் வாரேன் நண்பா.

" உழவன் " " Uzhavan " said...

//ஆ.ஞானசேகரன்
பெயரில் அருமையான பதிவு, நன்றாக இருக்கு நண்பா //
 
தொடர்ந்து தாங்கள் தரும் ஊக்கம்தான் காரணம் நண்பா.

" உழவன் " " Uzhavan " said...

//நசரேயன்
பதிவு நல்லா இருக்கு//
 
நன்றி :-)

" உழவன் " " Uzhavan " said...

//sakthi
அசத்தலான அலசல் உழவரே..//
 
தங்களின் தொடர்வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி தோழி:-)

" உழவன் " " Uzhavan " said...

இந்தப் பதிவை குட் ப்ளாக் பகுதியில் வெளியிட்ட இளமைவிகடனுக்கு நன்றி.

விக்னேஷ்வரி said...

அப்பெயர் நமக்கோர் அடையாளத்தைத் தரவேண்டுமெனில், நாம் நமக்கு விருப்பமான ஏதாவதொன்றில் சாதனை செய்து அப்பெயருக்குப் புகழைப் பெற்றுத்தரவேண்டும்! //

அழகான அர்த்தமுள்ள வரிகள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல சிந்தனை.. அருமையா இருக்கு நண்பா

லிங்காபுரம்-சிவா said...

Nice Post

" உழவன் " " Uzhavan " said...

விக்னேஷ்வரி
அப்பெயர் நமக்கோர் அடையாளத்தைத் தரவேண்டுமெனில், நாம் நமக்கு விருப்பமான ஏதாவதொன்றில் சாதனை செய்து அப்பெயருக்குப் புகழைப் பெற்றுத்தரவேண்டும்! //
அழகான அர்த்தமுள்ள வரிகள். //
 
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தோழி.

" உழவன் " " Uzhavan " said...

//கார்த்திகைப் பாண்டியன்
நல்ல சிந்தனை.. அருமையா இருக்கு நண்பா//
 
நன்றி பாண்டியா..

" உழவன் " " Uzhavan " said...

//லிங்காபுரம்-சிவா
Nice Post //
 
Thx a lot :-)

SUMAZLA/சுமஜ்லா said...

ம்..அருமையான அர்த்தமுள்ள பதிவு. என் முழுப்பெயர், ஆசியா சுஹைனா ஷிஹ்னாஸ். ஆனா, ஸ்கூலில் எல்லாரும் ஏஷ்யானு தான் கூப்பிடுவாங்க. சில பேர் ஏஷ்யா காண்டினெண்ட்னு கூட!

" உழவன் " " Uzhavan " said...

//SUMAZLA/சுமஜ்லா
ம்..அருமையான அர்த்தமுள்ள பதிவு. என் முழுப்பெயர், ஆசியா சுஹைனா ஷிஹ்னாஸ். ஆனா, ஸ்கூலில் எல்லாரும் ஏஷ்யானு தான் கூப்பிடுவாங்க. சில பேர் ஏஷ்யா காண்டினெண்ட்னு கூட! //

ஹா ஹா.. ஏஷ்யா காண்டினெண்ட் இதுவும் நல்லாதான் இருக்கு :-)
பெயர் முக்கியமல்ல அமைச்சரே.. வரலாறுதான் முக்கியம் :-)

தமிழரசி said...

வார்த்தை நிலத்தை செவ்வனே உழுது நல்ல பதிவு விதைகளை அவ்வண்ணமேயிடுகிறீர்கள்...

ஆம் எனக்கு முதல்ல வைத்த பெயர் செங்கவி....பெயருக்கும் பொருள் சொன்ன மேதையே வாழ்க...வளர்க உம்பணி..

பாச மலர் said...

நல்ல ஆராய்ச்சி....சின்ன விஷயம் போலத் தோன்றினாலும் மிகவும் பெரியதுதான்..

முனைவர் சே.கல்பனா said...

நல்ல பதிவு.

" உழவன் " " Uzhavan " said...

//தமிழரசி
வார்த்தை நிலத்தை செவ்வனே உழுது நல்ல பதிவு விதைகளை அவ்வண்ணமேயிடுகிறீர்கள்...
ஆம் எனக்கு முதல்ல வைத்த பெயர் செங்கவி....பெயருக்கும் பொருள் சொன்ன மேதையே வாழ்க...வளர்க உம்பணி.. //
 
நன்றி செங்கவி :-)

" உழவன் " " Uzhavan " said...

//பாச மலர்
நல்ல ஆராய்ச்சி....சின்ன விஷயம் போலத் தோன்றினாலும் மிகவும் பெரியதுதான்..//
 
தங்களின் முதல்வருகை. கருத்துக்கு மிக்க நன்றி.

" உழவன் " " Uzhavan " said...

//முனைவர் சே.கல்பனா
நல்ல பதிவு.//
 
மகிழ்ச்சி முனைவர் அவர்களே :-)