கருத்த வானவெளியைத்
துழாவிக்கொண்டே
மண்மேல் புரண்டு
நிர்வாண மேனியெங்கும்
பரவிய காமம் போல
பொட்டல் தரையெங்கும்
மேடு பள்ளங்களைத் தழுவி
கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே
என்ற ஏக்கத்தோடு
கடைவீதியின் வழியாய்
பாலித்தீன் கவர்களையும்
பேப்பர் கப்புகளையும்
மட்டுமே சுமந்துகொண்டு
புன்முறுவலற்று
சவம்போல்
சென்றுகொண்டிருந்தது
நேற்றைய
மாலை மழைநீர்.
உழவன்
இக்கவிதை வம்சி பதிப்பகத்தாரின் "கிளிஞ்சல்கள் பறக்கின்றன" என்கிற கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
Monday, September 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
‘நச்’ன்னு நெற்றிப் பொட்டில் அறைந்தார்ப்போல் இருக்கு கவிதை...
hmm....
சின்ன வலியோடு கூடிய பட்டாசு கவிதை..
//நிர்வாண மேனியெங்கும்
பரவிய காமம் போல
பொட்டல் தரையெங்கும்
மேடு பள்ளங்களைத் தழுவி//
அழகான புனைவு...
//கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே
என்ற ஏக்கத்தோடு//
‘நச்’ வரிகள்...
முழுதும் முடிக்கையில் வலிக்கத்தான் செய்கிறது...
நிர்வாண மேனியெங்கும்
பரவிய காமம் போல
பொட்டல் தரையெங்கும்
மேடு பள்ளங்களைத் தழுவி
****************
மிக அருமை உழவரே
அருமை
திரு. பாலாஜியின் பின்னூட்டத்தினை வழிமொழிகிறேன்
கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே
என்ற ஏக்கத்தோடு
*******************
உழவரின் பன்ச். அருமை
சமூக அக்கறை நிறைவாய் மனதை அரித்துச் செல்கிறது மழை.
புன்முறுவலற்று
சவம்போல்
சென்றுகொண்டிருந்தது
நேற்றைய
மாலை மழைநீர்.
இயல்பான நிகழ்வு. ஆனால் நெகிழ வைத்துவிட்டீர் நண்பா
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
நல்ல உவமானங்களோடு பல அவலங்களைச் சொல்கிறது கவிதை. நன்றாக இருக்கிறது உழவரே!
தலைவரே, கலக்கிட்டீங்க. உணர்வுகளை உயிர்ப்பித்து, அவலங்களை சாடி, அழகா சொல்லிட்டிங்க.
அறிவும் அவலமும் உழப்பட்டு இருக்கிறது உழவனால்...
//கடைவீதியின் வழியாய்
பாலித்தீன் கவர்களையும்
பேப்பர் கப்புகளையும்
மட்டுமே சுமந்துகொண்டு
புன்முறுவலற்று
சவம்போல்
சென்றுகொண்டிருந்தது
நேற்றைய
மாலை மழைநீர்.//
அருமை.... நச்சுன்னு சொல்லிடீங்க
good, keep it up
கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே
***************************
என்னை மிகவும் பாதித்த வரிகள். உண்ன்மையிலேயே சூப்பர்.
//கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே
என்ற ஏக்கத்தோடு//
உங்கள் மன ஆழ்த்தின் ஏக்கம் உங்கள் கவிதைகளில் நிறைய பிரதிபலிக்கிறது1
உழவன்,
இந்தக் கவிதை மிகவும் அழகாக வந்திருக்கிறது.
தலைப்பும் மிக அருமை.
வாழ்த்துக்கள்.
சந்தனமுல்லை
hmm....//
வருகைக்கு நன்றி முல்லை
குடந்தை அன்புமணி
‘நச்’ன்னு நெற்றிப் பொட்டில் அறைந்தார்ப்போல் இருக்கு கவிதை...
கார்த்திகைப் பாண்டியன்
சின்ன வலியோடு கூடிய பட்டாசு கவிதை.. //
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பர்களே
க.பாலாஜி
//நிர்வாண மேனியெங்கும்
பரவிய காமம் போல
பொட்டல் தரையெங்கும்
மேடு பள்ளங்களைத் தழுவி//
அழகான புனைவு...
//கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே
என்ற ஏக்கத்தோடு//
‘நச்’ வரிகள்...
முழுதும் முடிக்கையில் வலிக்கத்தான் செய்கிறது...
அமிர்தவர்ஷினி அம்மா
அருமை
திரு. பாலாஜியின் பின்னூட்டத்தினை வழிமொழிகிறேன்//
முன்மொழிந்தமைக்கும் வழிமொழிந்தமைக்கும் மற்றும் தங்களின் பாராட்டுதல்களூக்கும் என்றும் நன்றியிடையேன்.
S.A. நவாஸுதீன்
கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே
என்ற ஏக்கத்தோடு
*******************
உழவரின் பன்ச். அருமை
நிர்வாண மேனியெங்கும்
பரவிய காமம் போல
பொட்டல் தரையெங்கும்
மேடு பள்ளங்களைத் தழுவி
****************
மிக அருமை உழவரே
புன்முறுவலற்று
சவம்போல்
சென்றுகொண்டிருந்தது
நேற்றைய
மாலை மழைநீர்.
இயல்பான நிகழ்வு. ஆனால் நெகிழ வைத்துவிட்டீர் நண்பா //
மகிழ்ச்சி நண்பரே. நன்றி
ஹேமா
சமூக அக்கறை நிறைவாய் மனதை அரித்துச் செல்கிறது மழை.
ஜெஸ்வந்தி
நல்ல உவமானங்களோடு பல அவலங்களைச் சொல்கிறது கவிதை. நன்றாக இருக்கிறது உழவரே! //
மகிழ்ச்சி ஹேமா மற்றும் ஜெஸ்வந்தி அவர்களே.. மிக்க நன்றி:-)
ஷஃபிக்ஸ்
தலைவரே, கலக்கிட்டீங்க. உணர்வுகளை உயிர்ப்பித்து, அவலங்களை சாடி, அழகா சொல்லிட்டிங்க.
தமிழரசி
அறிவும் அவலமும் உழப்பட்டு இருக்கிறது உழவனால்...
ஆ.ஞானசேகரன்
அருமை.... நச்சுன்னு சொல்லிடீங்க
PITTHAN
good, keep it up //
நால்வருக்கும் நன்றிகள்
மகேஷ்வரன் ஜோதி
கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே
***************************
என்னை மிகவும் பாதித்த வரிகள். உண்ன்மையிலேயே சூப்பர்.//
தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே.
SUMAZLA/சுமஜ்லா
//கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே
என்ற ஏக்கத்தோடு//
உங்கள் மன ஆழ்த்தின் ஏக்கம் உங்கள் கவிதைகளில் நிறைய பிரதிபலிக்கிறது.//
ஆஹா.. தெரிஞ்சுபோச்சா :-) நன்றி
"அகநாழிகை" பொன்.வாசுதேவன்
உழவன்,
இந்தக் கவிதை மிகவும் அழகாக வந்திருக்கிறது.
தலைப்பும் மிக அருமை.
வாழ்த்துக்கள்.//
மகிழ்ச்சி நண்பரே. மிக்க நன்றி
இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து
http://www.srilankacampaign.org/form.htm
அல்லது
http://www.srilankacampaign.org/takeaction.htm
என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புணித செயலில் ஈடுபடுத்துங்கள்
என்ன அருமையான பெயர் இந்த உழவன்!முதலில் அதுக்கு வணக்கம் வாத்யாரே!
//புன்முருவலற்று
சவம் போல்
சென்றுகொண்டிருந்தது
நேற்றைய மாலை
மழை நீர்//
அப்பா!ரொம்ப நல்லா இருக்கு உழவன்!
எப்படி உங்களை இவ்வளவு காலம் miss
பண்ணேன்.எப்படியா,கிடைத்தீர்களே.நன்றி!
வணக்கம் நண்பரே ,
வலைப்பதிவர் பட்டறைக்கு பின்பு தான் தங்கள் வலைப்பக்கம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது
பிறகு தான் தோன்றியது ஒரு நல்ல வலைபக்கத்தை இத்தனை நாள் பார்வை இடாமல் போனது, வாழ்த்துக்கள் நண்பா. முழு பதிவுகளையும் படித்து விட்டு பின்னுட்டதுடன் வருகிறேன்
நல்ல கவிதை உழவன்.
//கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே//
எத்தனை ரசனையான விஷயங்களைத் தொலைத்தபடி இருக்கிறது இந்தத் தலைமுறை:(!
wow romba nalla irukkungka
adaleru
வணக்கம் நண்பரே ,
வலைப்பதிவர் பட்டறைக்கு பின்பு தான் தங்கள் வலைப்பக்கம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது
பிறகு தான் தோன்றியது ஒரு நல்ல வலைபக்கத்தை இத்தனை நாள் பார்வை இடாமல் போனது, வாழ்த்துக்கள் நண்பா. முழு பதிவுகளையும் படித்து விட்டு பின்னுட்டதுடன் வருகிறேன்//
தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பா.. தொடர்ந்து வாருங்கள், தங்களது வெளிப்படையான விமர்சனங்களைத் தாருங்கள் :-)
//ராமலக்ஷ்மி
நல்ல கவிதை உழவன்.
எத்தனை ரசனையான விஷயங்களைத் தொலைத்தபடி இருக்கிறது இந்தத் தலைமுறை:(! //
பாராட்டுக்கு மிக்க நன்றி மேடம் :-)
அன்பின் பா.ராஜாராம் அவர்களே.. வணக்கம்
தங்களின் பின்னூட்டம் கண்டு மிக மகிழ்வாய் உணர்கிறேன். மிக்க நன்றி.
தங்களின் வருகை தொடர வேண்டுகிறேன்
அன்புடன்
உழவன்
மண்குதிரை
wow romba nalla irukkungka //
மிக்க மகிழ்ச்சி :-)
//கணிணி விளையாட்டுத் தெரிந்த
குழந்தைகளுக்கு
காகிதக் கப்பல் செய்யத்
தெரியாமல் போனதே
என்ற ஏக்கத்தோடு//
இக்காலத்திய ஏக்கம் எங்களுக்கும் உண்டு
வரிகள் அருமை
//அன்புடன் மலிக்கா
இக்காலத்திய ஏக்கம் எங்களுக்கும் உண்டு
வரிகள் அருமை //
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
தொடர்ந்து வாங்க.
Post a Comment