Tuesday, June 16, 2009

வயதுக்கு வராத பெண்ணுக்குத் திருமணமா?

சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுப்பொருள்களில் பெரும்பாலும் பழங்கள்தான் முதலிடம் வகிக்கின்றன. சொந்த பந்தங்களின் வீடுகளுக்குச் சென்றாலும், உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரிக்கச் சென்றாலும் அனைவரும் கட்டாயம் வாங்கிச்செல்வது இந்தப் பழங்கள்தான்.

அன்றாட உணவில் அங்கம்வகிக்கும் பழவகைகளில் கலப்படங்களும் இருக்கின்றன என்ற செய்தி அதிர்ச்சியளிக்காமல் இருக்காது. ஒரு கிலோ பழத்தை நூற்றுக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்க முடியாத நடுத்தர மக்களின் பழ ஆசையை நிறைவு செய்வது பெரும்பாலும் மாம்பழங்களே. நடுத்தர மக்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினரும் ஆசையோடு திண்ணக்கூடிய பழங்களில், முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் விளங்குவதால் இதன் தேவையானது அதிகரிக்கிறது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, சீசன் முடிவடைவதற்குள் முடிந்த அளவு சம்பாதித்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில், செயற்கை முறையில் கால்சியம் கார்பைடினால் பழுக்க வைக்கப்பட்ட போலிப் பழங்களை கலப்படம் செய்து விற்கும் கொடிய நிலை இன்று நிலவுகிறது.

வயதுக்கு வராத ஒரு பெண்ணை, வயதுக்கு வந்ததாகக் கூறி ஏமாற்றி திருமணம் செய்து வைப்பது எப்படியோ, அப்படித்தான் இயற்கையாகப் பழுக்காத மாங்காயை, கார்பைட் கற்கள் மூலம் செயற்கை முறையில் அரைகுறையாகப் பழுக்க வைத்து விற்பதும்.

இந்தப் பழங்களை உண்பதால் வயிற்றுவலி, குமட்டல் மற்றும் செரிமானக் கோளாறு உண்டாகி பெப்டிக் அல்சரும் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். குழந்தைகளூக்கு இதன் பாதிப்பு அதிகம் இருக்குமாம். தொடர்ந்து இந்த முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்டால் கேன்சர் கூட வர வாய்ப்பிருப்பதாக மருத்துவ உலகம் சொல்கிறது.

மாம்பழம் கிடைக்காததற்காக முருகப்பெருமான் கோபித்துக்கொண்டு போனான். அப்பனே முருகா... நீ இன்று இங்கிருந்தால் உனக்கு மாம்பழம் கிடைக்காததற்கு வருத்தப்பட்டிருக்க மாட்டாய். மாறாக இந்தப் போலி மாம்பழம் கிடைக்காமல்போனது கண்டு மகிழ்ந்திருப்பாய்.

மாம்பழத்தில்தான் இப்படியென்றால் ஆப்பிள் பழங்களின் மீது மெழுகு பூசுவார்களாம். மெழுகு பூசுவதால் பழங்கள் பார்ப்பதற்கு பளபள தோற்றத்துடன் இருப்பதோடு, கெட்டுப்போகாமல் நீண்ட நாட்களுக்கு வைத்திருந்து விற்கவும் முடியுமாம்.

பற்றாக்குறையைப் போக்குவதற்காக சாம்பாரிலும், ரசத்திலும் வெந்நீர் ஊற்றி உப்புப்போட்டுக் கலக்குவதில் ஆரம்பித்த கலப்படம், குடிக்கின்ற குடிநீரிலிருந்து நாம் தினமும் பயன்படுத்தும் அனைத்துப் பெரும்பான்மையான பொருட்களிலுமே இருக்கிறது என்பது வேதனையான செய்திதான்.

பழங்கள் கலப்பட தடுப்புச் சட்டம் 1954 இருந்தாலும், திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியுமா என்ன?

உழவன்

20 comments:

சொல்லரசன் said...

//வயதுக்கு வராத ஒரு பெண்ணை, வயதுக்கு வந்ததாகக் கூறி ஏமாற்றி திருமணம் செய்து வைப்பது எப்படியோ,//

நல்ல உவமை,இந்த கலப்படத்தை தடுக்க உள்ளுர் நிர்வாகத்தினர் கவனம்செலுத்தவேண்டும்

Anonymous said...

எது எதால் எப்படி எப்படியோ ஏமாற்றப்பட்டு வருகிறோம் நினைத்தால் மிகவும் வருத்தமே மிஞ்சுகிறது...

கலையரசன் said...

கண்டிப்பாக நாளை உலகம்
மாறும் தோழா!

ஓட்டும் போட்டாச்சு!!

Senthilkumar said...

Anybody knows how to find the carbonate stone is used in the mango?

அமிர்தவர்ஷினி அம்மா said...

அன்றாட உணவில் அங்கம்வகிக்கும் பழவகைகளில் கலப்படங்களும் இருக்கின்றன //

பழங்களில் மட்டுமா கலப்படம், நெறைய உணவுப்பொருட்களில் கலப்படம் இருக்கிறது.

தனியா, கசகசா, கடுகு என நிறைய அன்றாட உபயோகப்பொருட்கள். சில மட்ட ரக காபிப்பொடியில், புளியங்கொட்டையை அரைத்து சேர்த்து விடுவார்களாம். சொல்லக்கேள்வி.

ம், ஆமா, ஏன் பதிவுக்கு இப்படியொரு தலைப்பு ?

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு உழவன். என்ன செய்வது, எல்லாம் தெரிந்தும் பழங்களை வாங்காமல் இருக்கவும் முடியவில்லை. இதையெல்லாம் தடுக்க என்ன வழி என்பதும் தெரியவில்லை:(!

அமுதா said...

/*நல்ல பதிவு உழவன். என்ன செய்வது, எல்லாம் தெரிந்தும் பழங்களை வாங்காமல் இருக்கவும் முடியவில்லை. இதையெல்லாம் தடுக்க என்ன வழி என்பதும் தெரியவில்லை:(!
*/
ரிப்பீட்டு. செய்திகளை அறிந்து நாமும் பாதுகாப்பாகவும் மற்றவர்களுக்கும் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை [அட!! பழம் எல்லாம் தோல் இல்லாமல் சாப்பிடணும்னு சொல்றேன் :-(]

ஆ.ஞானசேகரன் said...

//வயதுக்கு வராத ஒரு பெண்ணை, வயதுக்கு வந்ததாகக் கூறி ஏமாற்றி திருமணம் செய்து வைப்பது எப்படியோ, அப்படித்தான் இயற்கையாகப் பழுக்காத மாங்காயை, கார்பைட் கற்கள் மூலம் செயற்கை முறையில் அரைகுறையாகப் பழுக்க வைத்து விற்பதும்.//
என்ன கோடுமை நண்பா, இப்படிப்பட்ட கும்பளை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். இதற்காண சட்டத்தையும் கடுமையாக்க வேண்டும். அதைவிட நீஙகள் சொல்வதைபோல் நமக்கும் பொருப்புணர்வு வேண்டும்

"உழவன்" "Uzhavan" said...

//சொல்லரசன்
//வயதுக்கு வராத ஒரு பெண்ணை, வயதுக்கு வந்ததாகக் கூறி ஏமாற்றி திருமணம் செய்து வைப்பது எப்படியோ,//
நல்ல உவமை,இந்த கலப்படத்தை தடுக்க உள்ளுர் நிர்வாகத்தினர் கவனம்செலுத்தவேண்டும்//

நன்றி சொல்லரசன்.. சென்னையில் இப்படிப்பட்ட மாம்பழங்களைக் கண்டுபிடித்து பெரும்பான்மையான பழங்களை அழித்ததாகவும் செய்திகள் வந்தன

"உழவன்" "Uzhavan" said...

//தமிழரசி
எது எதால் எப்படி எப்படியோ ஏமாற்றப்பட்டு வருகிறோம் நினைத்தால் மிகவும் வருத்தமே மிஞ்சுகிறது... //

என்ன செய்வது தமிழ்? நாம் ஏமாறவே பிறந்திருக்கிறோம் போல :-(

"உழவன்" "Uzhavan" said...

//கலையரசன்
கண்டிப்பாக நாளை உலகம்
மாறும் தோழா!
ஓட்டும் போட்டாச்சு!! //

மாறினால் மகிழ்ச்சி நண்பா.. உங்கள் ஓட்டுக்கு நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

//Senthilkumar
Anybody knows how to find the carbonate stone is used in the mango?//

கண்டுபிடிப்பதற்கான வழிமுறையை அறிய முயற்சிக்கிறேன். நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா
ம், ஆமா, ஏன் பதிவுக்கு இப்படியொரு தலைப்பு ? //

சரியா தவறா என்றெல்லாம் யோசிக்கவில்லை. சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் வைத்ததுதான். ஆனால் உங்களின் கேள்விக்குப் பிறகு இப்படி தலைப்பு வைத்தது சரியா என்று மனதில் ஒரு சின்ன நெருடல் இருக்கிறது. உரிமையோடு கேட்டமைக்கு மிக்க நன்றி அமித்துமா.

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
நல்ல பதிவு உழவன். என்ன செய்வது, எல்லாம் தெரிந்தும் பழங்களை வாங்காமல் இருக்கவும் முடியவில்லை. இதையெல்லாம் தடுக்க என்ன வழி என்பதும் தெரியவில்லை:(! //

நம்மால் என்ன செய்ய முடியும்? மக்களின் உயிரோடும் உடல்நிலையோடும் விளையாடும் வியாபார்களைத் தண்டிக்கும் சட்டம் கடுமையாக்கப் படவேண்டும்.

"உழவன்" "Uzhavan" said...

//அமுதா
/*நல்ல பதிவு உழவன். என்ன செய்வது, எல்லாம் தெரிந்தும் பழங்களை வாங்காமல் இருக்கவும் முடியவில்லை. இதையெல்லாம் தடுக்க என்ன வழி என்பதும் தெரியவில்லை:(!
*/
ரிப்பீட்டு.

- நம்மால் என்ன செய்ய முடியும்? மக்களின் உயிரோடும் உடல்நிலையோடும் விளையாடும் வியாபார்களைத் தண்டிக்கும் சட்டம் கடுமையாக்கப் படவேண்டும். / ரிப்பீட்டு :-)

//செய்திகளை அறிந்து நாமும் பாதுகாப்பாகவும் மற்றவர்களுக்கும் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை [அட!! பழம் எல்லாம் தோல் இல்லாமல் சாப்பிடணும்னு சொல்றேன் :-(] //

வாழைப்பழத்தை தோல் இல்லாம சாப்பிடலாம்.. கிரேப்ஸை தோல் இல்லாம சாப்பிட முடியுமா? :-)

"உழவன்" "Uzhavan" said...

//ஆ.ஞானசேகரன்
என்ன கோடுமை நண்பா, இப்படிப்பட்ட கும்பளை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். இதற்காண சட்டத்தையும் கடுமையாக்க வேண்டும். அதைவிட நீஙகள் சொல்வதைபோல் நமக்கும் பொருப்புணர்வு வேண்டும்//

ஆம் நண்பரே.. கருத்துக்கு நன்றி

sarathy said...

நல்ல பதிவு..
தலைப்பு தான் ஏடாகூடமாக இருக்கு.

ஒரு நாள் முன்னதாகவே
உழவருக்கு என் உள்ளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

பிரவின்ஸ்கா said...

நல்ல பதிவு
நல்லா எழுதியிருக்கீங்க .
வாழ்த்துக்கள்..

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

"உழவன்" "Uzhavan" said...

நன்றி பிரவின்ஸ்கா

"உழவன்" "Uzhavan" said...

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கு நன்றி sarathy