Friday, June 19, 2009

அகமதி அப்டேட்ஸ்

" இப்பவே இவளோட சேட்டை தாங்கல. காலையில ஊத்துற சொட்டு மருந்தை குடிச்சிடுறா.. ஆனா சாயங்காலம் ஊத்துற சொட்டுமருந்தை தூ..தூ.. னு துப்புறா. கையை வேற தட்டி விடுறா. இப்பலாம் கன்னத்த தொட்டா போதும் உடனே நல்லா சிரிக்கிறா. நேத்து முகத்துல லேசா ஃபூ... னு ஊதுரேன்..உடனே ஒரே சிரிப்புதான்.

தொட்டில்ல போட்ட உடனே, ஒத்த கைய வெளியில நீட்டி, தொட்டில வெலக்கி விட்டு எல்லாரையும் பார்த்துக்கிட்டே இருக்கா.

ஏய்.. என்ன சொல்லுற? இரண்டரை மாதம்தான் ஆகுது. அதுக்குள்ளவா இப்படியெல்லாம் பண்ணுறா?

நீங்க வேற.. ரெண்டு நாளைக்கு முன்னாடி, நைட்டு தொட்டில விட்டு அவளாவே கீழே விழுந்திட்டா. எல்லாரும் தூங்கிக்கிட்டு இருக்கோம்; திடீர்னு இவளோட அழுகைச் சத்தம். முழிச்சிப் பார்த்தா தொட்டிலுக்கு கீழ விரிச்சிருக்கிற சாக்கு மேல கிடக்குறா. ஒரு நிமிசம் ஆடிப் போயிட்டேன். காலை உதைச்சு உதைச்சு எப்படியோ வெளியே வந்திருக்கா. சொன்னா நீங்க திட்டுனாலும் திட்டுவீங்கனுதான் சொல்லல.. யப்பா.. இப்பலாம் தொட்டில்ல போடவே பயமா இருக்கு. தொட்டிலுக்கு ரெண்டு பக்கமும் நல்லா ஊக்கு மாட்டிருவேன்.

ம்ம்ம்..

இதுமட்டுமில்ல.. காத்தாட கொஞ்சநேரம் கெடக்கட்டுமேனு கட்டில்ல போட்டிருந்தேன். சும்மா கைய கால ஆட்டிக்கிட்டு கெடந்தா. திடீர்னு பார்க்கிறேன் உருண்டு குப்புற விழுந்து கெடக்கா....."

இவையெல்லாம் அகமதியைப் பற்றி அவள் அம்மா எனக்கு தொலைபேசியில் அப்டேட் செய்தது. இதுக்கப்புறமும் என் செல்ல மகளைப் பார்க்க ஊருக்குப் போகாமல் இருக்க முடியுமா? இதோ கெளம்பியாச்சு.. இந்த வார இறுதிக் கொண்டாட்டம் அவளோடுதான். நெல்லை எக்ஸ்பிரஸில ஒரு டிக்கட் போடுங்கப்பா :-)

உழவன்

(படிச்சிட்டு மட்டும் போயிறாதீங்க.. உங்க ஓட்டை தமிழ்மணம் மற்றும் தமிழிசுலயும் போட்டுட்டு போங்க)

35 comments:

குடந்தை அன்புமணி said...

இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் உழவன்!

சென்ஷி said...

இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் உழவன்!

Anonymous said...

வாழ்த்துக்கள் குட்டிப் பொண்ணோடு கொண்டாட்டம் போடுங்க....

சந்தனமுல்லை said...

அகமதிக்கு வாழ்த்துகள்! நல்லாருக்கு பேரு!

rapp said...

:):):)

சொல்லரசன் said...

//ஏய்.. என்ன சொல்லுற? இரண்டரை மாதம்தான் ஆகுது. அதுக்குள்ளவா இப்படியெல்லாம் பண்ணுறா?//


அதானே,நல்ல சுட்டிதான் உங்க குட்டி.

ராமலக்ஷ்மி said...

//இதுக்கப்புறமும் என் செல்ல மகளைப் பார்க்க ஊருக்குப் போகாமல் இருக்க முடியுமா? //

நல்ல கேள்வி:))! சென்று வாருங்கள். மகளுடன் இனிதாகக் கழியட்டும் நாட்கள்!!

வித்யா said...

:)

நாமக்கல் சிபி said...

இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் உழவன்!

sakthi said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

SUMAZLA/சுமஜ்லா said...

//காலையில ஊத்துற சொட்டு மருந்தை குடிச்சிடுறா.. ஆனா சாயங்காலம் ஊத்துற சொட்டுமருந்தை தூ..தூ.. னு துப்புறா.//

நல்ல காமெடி தான்.

தொட்டிலுக்கு ஊக்கு மாட்டாதிங்க. அது சமயத்துல கழண்டு விட்டால் ரிஸ்க். நல்ல டைட் க்ளிப் கிடைக்கும். தொட்டில லேசா சுருட்டி, அதைப் போட்டு விடுங்க. நான் அப்படித்தான் செய்தேன், என் மகனுக்கு.

sarathy said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உழவன்...

"அகமதி" இதுவரை கேட்டிராத நல்ல பெயர்..
வாழ்த்துக்கள்.

திகழ்மிளிர் said...

இனிய பிறந்த நாள்வாழ்த்துகள்

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

" உழவன் " " Uzhavan " said...

@குடந்தை அன்புமணி
@சென்ஷி
@ நாமக்கல் சிபி
@sakthi
@திகழ்மிளிர்

//இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள் உழவன்! //

உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

" உழவன் " " Uzhavan " said...

//தமிழரசி
வாழ்த்துக்கள் குட்டிப் பொண்ணோடு கொண்டாட்டம் போடுங்க.... //

ம்ம்ம்.. போட்டிருவோம்.. நன்றி தோழி :-)

" உழவன் " " Uzhavan " said...

//சந்தனமுல்லை
அகமதிக்கு வாழ்த்துகள்! நல்லாருக்கு பேரு! //

எல்லாம் உங்களின் ஆசிகள்.. மிக்க நன்றி.. அவளின் முழு பெயர் "அகமதி வெண்பா"

" உழவன் " " Uzhavan " said...

//rapp
:):):)//

மகிழ்ச்சி :-)

" உழவன் " " Uzhavan " said...

//சொல்லரசன்
அதானே,நல்ல சுட்டிதான் உங்க குட்டி.//

அப்படித்தான் நானும் நினைக்கிறேன் தோழரே. நன்றி

" உழவன் " " Uzhavan " said...

//வித்யா
:) //

மகிழ்ச்சி தோழி :-)

" உழவன் " " Uzhavan " said...

//ராமலக்ஷ்மி
//இதுக்கப்புறமும் என் செல்ல மகளைப் பார்க்க ஊருக்குப் போகாமல் இருக்க முடியுமா? //

நல்ல கேள்வி:))! சென்று வாருங்கள். மகளுடன் இனிதாகக் கழியட்டும் நாட்கள்!! //

அப்படியே ஆகட்டும்.. நன்றி :-)

" உழவன் " " Uzhavan " said...

//SUMAZLA/சுமஜ்லா
தொட்டிலுக்கு ஊக்கு மாட்டாதிங்க. அது சமயத்துல கழண்டு விட்டால் ரிஸ்க். நல்ல டைட் க்ளிப் கிடைக்கும். தொட்டில லேசா சுருட்டி, அதைப் போட்டு விடுங்க. நான் அப்படித்தான் செய்தேன், என் மகனுக்கு.//


தங்களின் ஆலோசனைக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி.. உங்களின் ஆசிகளும் அகமதிக்குத் தேவை :-)

" உழவன் " " Uzhavan " said...

//sarathy
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உழவன்...

"அகமதி" இதுவரை கேட்டிராத நல்ல பெயர்..
வாழ்த்துக்கள். //


நன்றி.. நல்ல பெயர் என்று பலர் பாரட்டும்போது அகம் மகிழ்கிறது. மகிழ்ச்சி நண்பரே..

S.A. நவாஸுதீன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உழவன்.

அகமதி - அழகான பெயர்

ஆ.ஞானசேகரன் said...

குட்டீஸ்க்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் தோழா

அமிர்தவர்ஷினி அம்மா said...

அகமதி அப்டேட்ஸ் - அழகா எழுதியிருக்கீங்க.

தொடர்வீங்கன்னு நம்புறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மாதேவி said...

குட்டிச் சுட்டிக்கு இதமான வாழ்த்துக்கள்.

" உழவன் " " Uzhavan " said...

//அமிர்தவர்ஷினி அம்மா
அகமதி அப்டேட்ஸ் - அழகா எழுதியிருக்கீங்க.
தொடர்வீங்கன்னு நம்புறேன்//

மிக்க நன்றி அமித்துமா.. என்னதான் நான் எழுதினாலும் உங்களோட அமித்து அப்டேட்சுக்கு ஈடாகாது. உங்களுடைய அப்டேட்ஸ் தான் என்ன அகமதி அப்டேட்ஸ் எழுத வைத்தது. தொடர்வேன் என நானும் நம்புகிறேன்.

" உழவன் " " Uzhavan " said...

நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி ஞானசேகரன்
நன்றி மாதேவி

" உழவன் " " Uzhavan " said...

//அமிர்தவர்ஷினி அம்மா
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

நன்றி :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

உழவன் " " Uzhavan " said...
//அமிர்தவர்ஷினி அம்மா
அகமதி அப்டேட்ஸ் - அழகா எழுதியிருக்கீங்க.
தொடர்வீங்கன்னு நம்புறேன்//

மிக்க நன்றி அமித்துமா.. என்னதான் நான் எழுதினாலும் உங்களோட அமித்து அப்டேட்சுக்கு ஈடாகாது. உங்களுடைய அப்டேட்ஸ் தான் என்ன அகமதி அப்டேட்ஸ் எழுத வைத்தது. தொடர்வேன் என நானும் நம்புகிறேன்.


இந்த வரிகளைப் படிக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது உழவன். இந்தப் பெருமை எல்லாமே என் செல்ல மகளுக்குத் தான் போய் சேரும். அதே போல் நீங்கள் எழுதினாலும் அது அகமதிக்குத்தான் போய் சேரும்.

குழந்தைகள் தான் நம்மை உயிர்ப்போடு வைக்கின்றன

" உழவன் " " Uzhavan " said...

//அமிர்தவர்ஷினி அம்மா
இந்த வரிகளைப் படிக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது உழவன். இந்தப் பெருமை எல்லாமே என் செல்ல மகளுக்குத் தான் போய் சேரும். அதே போல் நீங்கள் எழுதினாலும் அது அகமதிக்குத்தான் போய் சேரும்.
குழந்தைகள் தான் நம்மை உயிர்ப்போடு வைக்கின்றன//

ஆமா அமித்துமா.. குழந்தைகள்தான் நம்மை உயிப்போடு வைக்கின்றன. இதை இப்போது சமீப காலமாக என்னால் உணரமுடிகிறது.
மிக்க மகிழ்ச்சி :-)

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!!

" உழவன் " " Uzhavan " said...

//அன்புடன் அருணா
பூங்கொத்து!! //

நல்ல மணமா இருக்குது.. மகிழ்ச்சி :-)