Sunday, June 14, 2009

பட்டாம்பூச்சி விருது - சுமஜ்லாவின் "என் எழுத்து இகழேல்"

அன்பின் தோழர்களே.. தோழிகளே.. வணக்கம்!

வலையுலகிற்கு வந்த குறுகிய நாட்களிலேயே, தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த அன்புத் தோழி சுமஜ்லாவின் "என் எழுத்து இகழேல்" வலைப்பூவில் ஒரு பட்டாம்பூச்சியை அமரவைத்து, அழகு சேர்க்க வேண்டுமென ஆசைப்படுகிறேன். சிறுகதை, தொடர்கதை, கவிதை என எல்லா திறமையையும் கொண்ட ஒரு ஆல்ரவுண்டர்தான் இவர்.

இவரின் "சாயபு வீட்டு சரித்திரம்" எனும் தொடரானது "தமிழ்க்குடும்பம்" எனும் தளத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாது, இவரின் அரபு சீமையிலே எனும் தொடர், பழம் பெரும் இதழான நர்கிஸில் தொடராக வெளிவரப் போகிறது.

கவிஞர் சுமஜ்லா அவர்கள் ஒரு உடனடிக் (Instant) கவிஞரும் கூட. ஏதாவது ஒரு தலைப்பைக் கொடுத்தவுடனேயே அல்லது ஒரு புகைப்படத்தைப் பார்த்த உடனேயே அது பற்றி உடனடியாக கவி பாடுவதில் வல்லவர் என்றே கூறலாம்.

இப்படி பல சிறப்புக்களைப் பெற்றவரும், எனது வலையுலகத் தோழியுமான சுமஜ்லாவின் "என் எழுத்து இகழேல்" வலைப்பூவில், எனது இரண்டாவது பட்டாம்பூச்சியைப் பறக்கவிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

நண்பர் சொல்லரசன் அவர்களிடமிருந்து நான் பெற்ற பட்டாம்பூச்சி விருதிற்குப் பின்னர், எனது முதல் பட்டாம்பூச்சி விருதை, என் மனம் கவர்ந்த கவிஞர் மண்குதிரை அவர்களுக்குக் கொடுத்திருந்தேன். இப்போது இரண்டாவது பட்டாம்பூச்சி விருதை சுமஜ்லாவின் "என் எழுத்து இகழேல்" வலைப்பூவிற்கு அளிப்பதோடு மட்டுமல்லாமல், மேலும் மேலும் இவர்களின் எழுத்துக்கள் இவர்களுக்கு புகழ் சேர்க்கவேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.

அன்புடன்
உழவன்

(படிச்சிட்டு மட்டும் போயிறாதீங்க.. உங்க ஓட்டை தமிழ்மணம் மற்றும் தமிழிசுலயும் போட்டுட்டு போங்க)

5 comments:

SUMAZLA/சுமஜ்லா said...

விருதுக்கு நன்றிங்க! ஆனாலும் அய்யய்யோ, உங்கள் புகழ்ச்சியில் எனக்கு வெட்கமாகி விட்டது!

சகோதர பாசத்தோடு எழுதியிருப்பது குறித்து மெத்த மகிழ்ச்சி!

நான் முடித்தது M.B.A. அல்ல, M.Com ஆகும். B.A. English முடித்து விட்டு, தற்சமயம் M.A.English படித்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய ப்ளாகை என் பெற்றோர், சகோதரர்கள் உட்பட, பல உறவினர்களும் தொடர்ந்து படிக்கிறார்கள். அதனால் இதை மட்டும் திருத்தி விடுங்கள்.

ம்... என்றால் முன்னூறு கவிபாடும் காளமேகப் புலவர் ரேஞ்சுக்கு என்னை உயர்த்திட்டிங்க, வெட்கத்துடன், தேங்க்ஸ்ங்க!

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் சுமஜ்லா.

உழவன் உங்களின் செயலுக்கும் சேர்த்து.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள்.. உஙக்ளுக்கும் உங்களிடம் பெற்றவர்களுக்கும்

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்திய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் சுகைனா உங்களை புகழ ஹஜ் விளக்கம் ஒன்றே போதும்
இவ்வள்வை தெளிவாக இனி ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கும், ஈசியாக எழுதி இருக்கீங்க.