கல்லூரியில் நடைபெற்ற
கவிதைப் போட்டியில்
எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு
முத்தம்.
குருடனாய்ப் பிறந்தவனுக்கு
ஓவியம் எனும் தலைப்புப் போல
நிசப்த இருளில் எதையே தேடினேன்
எண்ணெய் தடவி
முற்றிலும் கறக்கப்பட்டுவிட்ட மடியில்
வாய்வைக்கும் கன்று போல
ஏமாற்றத்தை இப்படி எழுதினேன்.
"நடுவர்களே...
முத்தம் எனும் தலைப்பை
அம்மா இல்லாத போட்டியாளனுக்குக்
கொடுத்துவிடாதீர்கள்.
அப்படிக் கொடுப்பின்
அவன் எழுதுவது
கண்ணீர் பற்றிய
கவிதையாக மட்டுமே இருக்கும்.
இப்படிக்கு
முத்தமே பெறாதவன்"
- உழவன்
கவிதைப் போட்டியில்
எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு
முத்தம்.
குருடனாய்ப் பிறந்தவனுக்கு
ஓவியம் எனும் தலைப்புப் போல
நிசப்த இருளில் எதையே தேடினேன்
எண்ணெய் தடவி
முற்றிலும் கறக்கப்பட்டுவிட்ட மடியில்
வாய்வைக்கும் கன்று போல
ஏமாற்றத்தை இப்படி எழுதினேன்.
"நடுவர்களே...
முத்தம் எனும் தலைப்பை
அம்மா இல்லாத போட்டியாளனுக்குக்
கொடுத்துவிடாதீர்கள்.
அப்படிக் கொடுப்பின்
அவன் எழுதுவது
கண்ணீர் பற்றிய
கவிதையாக மட்டுமே இருக்கும்.
இப்படிக்கு
முத்தமே பெறாதவன்"
- உழவன்
1 comment:
அம்மாவிடம் பெறுவது ஆனந்தம்தான்
ஆயினும் அவளிடம் பெறுவதற்கு
வாழ்த்துக்கள்
Post a Comment