Wednesday, November 11, 2020

வேடிக்கை

சாமி கும்பிட்ட
பின்புதான்
சுண்டல் என்கிறாள்
அம்மா.
சுண்டல் கொடுத்தால்தான்
சாமி கும்பிடுவேன்
என்கிறது குழந்தை.
அமைதியாக
வேடிக்கை பார்க்கிறது சாமி.
வேறென்ன செய்துவிடமுடியும்
சாமியால்.

- உழவன்

No comments: