Friday, July 20, 2018

கையறு


குழந்தை எப்படிப் பிறக்கும்
என்ற கேள்விக்கு
முத்தம் கொடுத்தால் பிறந்துவிடும்
என்ற பதிலை
எந்த ஐயமுமில்லாமல் ஏற்றுக்கொண்டு
பிடித்த பிங்க் வண்ணப் பொம்மையைக்
கட்டியணைத்துத் தூங்கும்
குழந்தைக்கு
எப்படிச் சொல்லித்தரப் போகிறேன்
உன்னைத் தொட
நீளும் விரல்களில்
எந்த விரல்
விந்தைக் கக்கப் போகிறதென.

- உழவன்

படம்: இணையம் 

No comments: