அதோ
இருக்கிறதே
அவ்வீதிக்குள்
செல்கிறீர்களா
எதிர்ப்படும்
குழந்தைகளிடம்
புன்னகைத்துவிடாதீர்கள்.
மூக்கொழுகி
நிற்கும் அக்குழந்தைக்கு
முட்டாசுக்
கடையில் வாங்கி வந்த
கருப்பட்டி
மிட்டாயின் கவரைப் பிரித்து
ஒரு
துண்டு எடுத்துக் கொடுத்துவிடாதீர்கள்.
தெருமுனையில்
நின்று
தேம்பி
அழும் குழந்தையின் கையில்
ஒரு
பொரி உருண்டையைத்
திணித்துவிட
எண்ணிவிடாதீர்கள்.
இக்கோடையில்
சூரியனின்
கைகைளைப் பற்றி
விளையாடும்
குழந்தைகளைக்
கண்டும்
காணாததுபோல்
சென்றுவிடுங்கள்
மீறி
கைநிறைய
ஆரஞ்சு மிட்டாய்களை அள்ளி
ஆளுக்கொன்றாய்
எடுத்துக்
கொடுத்தால்
உங்கள்
உடல்
கூரிய
வாளால் கிழிக்கப்படும்.
உழவன்
1 comment:
அருமை அண்ணாச்சி
Post a Comment