இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. நேற்றுதான் மஞ்சள் பையைத் தூக்கிக்கொண்டு சென்னைக்கு வேலைதேடிச் சென்றதுபோல் உள்ளது. 1997 மே மாதம் 24 ம் தேதி சென்னைக்கு கிளம்பியதாக ஞாபகம். 26 ம் தேதி இன்டர்வியூ க்குப் போய், 27 ம் தேதியிலிருந்து வேலைக்குச் சென்றிருப்பேன் என எண்ணுகிறேன். 1200 ரூபாய் என் முதல் மாதச் சம்பளம்.
எனக்கு முதன்முதலாக வேலை கொடுத்த UCS நிறுவனத்தையும், என்னை சிபாரிசு செய்த கருப்பசாமி அண்ணனையும் Ashwin Raju இன்றும் நன்றியுணர்வோடு நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன்.
இந்த இருப்பது ஆண்டுகளில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே மாறி, இப்போது நான்காவது நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எந்த நிறுவனத்தோடும் முரண்பட்டு, சண்டைபோட்டு மனக் கசப்போடு வந்ததில்லை. எல்லோரும் வாழ்த்தியே வழியனுப்பி வைத்துள்ளார்கள்.
இந்த என் குறுகிய வரலாற்றில் ஒரேயொரு நிறுவனத்தைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை. அது என் மூன்றாவது நிறுவனமாக இருந்திருக்கவேண்டும். ஒரேயொரு நாள் மட்டுமே வேலை பார்த்ததால் அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பும்போதே, இது நமக்கு செட் ஆகாது என முடிவெடுத்து விட்டேன். ஏதோ குருட்டுப் போக்கில் எடுத்த முடிவு அது. அதுதான் என் வாழ்வில் முக்கிய முடிவாகவும், நல்ல முடிவாகவும் அமைந்தது.
இடையில் ஜெயா டிவியில் பகுதிநேர செய்தி வாசிப்பாளனாக பணியாற்றியது ஒரு நினைவாக மட்டுமே இப்போது இருக்கிறது. மொபைல் போன் இல்லாத காலம் அது. ஒரு போட்டோ, வீடியோ என எதுவுமே இல்லாதது மட்டுமே ஒரு குறையாகத் தெரிகிறது.
சென்னையிலிருந்து கோவைக்கு குடிபெயர்வேன் என நினைத்துப் பார்த்தது கூட இல்லை. ஆனால் இமைப் பொழுதில் அது நடந்துவிட்டது. ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன. ஓடட்டும் வாழ்க்கை அதன்போக்கில் ஓடட்டும். அதன்போக்கிலேயே வாழ்வையும் கொண்டாடுவோம்.
முதல் அலுவலகத்தில் பணிபுரிந்தபோது எடுத்த படமும், இப்போது பணிபுரியும் அலுவலகத்தில் எடுத்த படமுமே இவைகள்.
#நினைவுகள்
https://m.facebook.com/story.php?story_fbid=1444039035652212&id=100001383893870

No comments:
Post a Comment