கோடையே வா வா...
கழுத்து முதல் கால் வரை உடல் முழுவதும் மறைத்து ஆடை அணிந்து வந்த வெள்ளைக்காரர்கள் இப்போது ஆடையின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கத் தொடங்கியுள்ளனர். ஷூக்கள் இல்லாத கால்களையே பார்க்க முடியாமல் இருந்தது. இப்போது பெண்களிடம் விதவிதமான மாடர்ன் செப்பல்களைப் பார்க்க முடிகிறது. ஆம். கோடை துவங்கிவிட்டது. கோடை துவங்கியதின் மகிழ்ச்சியை இவர்களின் முகத்தில் காணமுடிகிறது.
ஆண்டின் பெரும்பாலான நாட்களில் குளிர் நிலவும் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் உடம்பில் விதவிதமான டிசைன்களை பச்சை குத்திக்கொள்கிறார்கள். சூரிய ஒளிக்காக ஏங்கும் இவர்கள், கோடை வர ஆரம்பித்த உடன், சூரியக் குளியலுக்காக ஆடைகளைக் குறைத்துக் கொள்கிறார்கள். இதில் ஆண் பெண் என்கிற வேறுபாடே இல்லை. அப்படி வெளிக்காட்டும் உடல் அழகாகத் தெரியத்தான் நாம் நினைத்துக் கூடப் பார்க்காத இடத்திலெல்லாம் டாட்டூக்களை வரைந்து கொள்கிறார்கள். இந்த டாட்டூக்களை காட்டுவதற்காகவே பெண்கள் குட்டைப் பாவாடை அணிவார்கள் போலும்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட்டுதான் இங்கு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை. குளிருக்கான பிரத்யேக ஆடைகள் இல்லாமல் நம்மூர் குழந்தைகளைப்போன்று ஆடையணிந்து பள்ளிக்குச் செல்கிறார்கள்.
அதிகாலை நான்கரைக்கெல்லாம் சூரியன் வந்துவிடுகிறான். இரவு சுமார் ஒன்பதுமணி வரை மக்களை மகிழ்விக்கிறான். சூரியனைப் பார்த்து நேரம் சொல்வதெல்லாம் இங்கு ஆகாது. காரின் மேல்பகுதியைத் திறந்துவிட்டு ஜாலியாகக் காரில் செல்கிறார்கள்.
இங்கு ஆண்கள், பெண்கள் என எல்லோரும் மது அருந்துவதற்கு காரணம் குளிர்தான். இவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். அப்படியெனில் இந்தக் கோடைகாலத்தில் மது விற்பனை குறைந்துவிடுமா?. நிச்சயம் இருக்காது என்றே தோன்றுகிறது. நம்மூரில் "இந்த வெயிலுக்கு ஜில்லுனு ஒரு பியர் அடிச்சா நல்லாருக்கும்" என்று சொல்லிக் குடிக்கிறார்கள். இவர்கள் குளிருக்காக பியர் குடிக்கிறேன் என்கிறார்கள். அப்படியெனில் பியர் எந்த சீதோஷண நிலைக்குக் குடிப்பது? குளிருக்கா இல்லை வெயிலுக்கா?.
சமீபத்தில் வாட்டர் தீம் பார்க் சென்றிருந்தேன். முழுக்க முழுக்க தண்ணீருக்குள் சறுக்கி விளையாடும் விளையாட்டுகள். ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில் அங்கு போட்டோ எடுக்க அனுமதியே இல்லை. இந்த ஊரிலும் இப்படியா என ஆச்சரியமாகப் பட்டது. குளிர் இருந்த சமயத்திலேயே கூட்டம் அதிகமாக இருந்தது. இனி கேட்கவா வேண்டும். கூட்டம் கூட்டமாகப் படையெடுப்பார்கள். கோடையே வா..வா.. கொண்டாடுவோம் வா..வா..
பின்குறிப்பு: இப்பதிவில் இணைத்துள்ள இப்படம் இணையத்தில் இருந்து இறக்குமதி செய்தது. இதுபோன்ற படங்களை இங்கு தாராளமாக எடுக்கமுடியும் என்றபோதிலும் நாகரிகம் கருதி எடுக்கவில்லை.
#இங்கிலாந்து_பயணம் #UK_Trip
https://m.facebook.com/story.php?story_fbid=1440176172705165&id=100001383893870

No comments:
Post a Comment