Monday, May 8, 2017

இங்கிலாந்து_பயணம் - 1

முதல் முறையாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து 92 நாட்கள் இருக்கப் போகிறேன். இது ஒரு நீண்ட பிரிவுதான். இதுவரையில் இப்படி இருக்கும் சூழ்நிலை உருவாகவில்லை. அலுவலகத்தில் இருந்து மாலை வீட்டிற்கு வருவதற்கு சில நாட்கள் மிகத் தாமதமாகிப் போகும். அந்த நாட்களிலெல்லாம், அகமதியும் யாழ்மதியும் பைக் சத்தம் கேட்கும்  போதெல்லாம் கதவைத் திறந்து நீங்கள்தானா என்று பார்ப்பதாக மனைவி சொல்வார்.

இந்த நாட்களில் இங்கு எந்த வித அசம்பாவித சூழலும் நடைபெற்றுவிடக் கூடாது என்றே மனம் வேண்டிக்கொண்டிருக்கிறது. இப்போது போலவே ஒரு வழக்கமான வாழ்க்கைச் சூழலே இருக்க மனம் ஆசைப்படுகிறது. இந்த மூன்று மாதத்திற்கே இப்படி என்றால், ஆண்டுக் கணக்கில் வெளிநாடுகளில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் செல்வோர்களின் மனநிலையை எண்ணிப் பார்க்கிறேன். எவ்வளவு கொடுமையானது.

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்களை வழியனுப்பி விட்டுவிட்டு, அவர்களின் போனுக்காக வீட்டு ஓனரின் லேண்ட் லைன் முன்னால் காத்துக் கிடைத்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது. அதுவும் முதல்முறை செல்கிற நண்பர்களை வழியனுப்ப ஒட்டு மொத்த சொந்தமும் வந்து மீனம்பாக்கத்தில் காத்துக் கிடைக்கும். ஆனால் இன்று தாத்தா வீட்டிலிருந்து வீடியோ காலிங்கில் பை சொல்லி வழியனுப்புகிறார்கள் மகள்கள். இந்த இணைய வளர்ச்சியே இப்போது ஆறுதல் தருகிறது.

இன்றைய விடியல் கோவையில். நாளைய விடியல் லண்டனில். வாழ்தல் எவ்வளவு அழகானது. வாழ்வோம்!

#இங்கிலாந்து_பயணம் #UK_Trip

1 comment:

Yaathoramani.blogspot.com said...

தற்போது அமெரிக்காவில்
இங்கிலாந்தில் சில முக்கிய
இடங்களைப் பார்க்கும்
எண்ணம் இருக்கிறது
நிச்ச்யம் தங்கள் பயணக்கட்டுரை
அந்த நாடு குறித்து புரிந்து கொள்ள
உதவும் என நினைக்கிறேன்

துவக்கம் வெகு சுருக்கம் ஆயினும்
வெகு சுவாரஸ்யம்

பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்