ஈரக் காற்றிறைத்தவனை
நிறுத்தி,
வாய்பிளந்து சொடக்கிட்டு
முறித்த சோம்பல்
ஆவியாய் வெளியேறுவதற்கேதுவாய்
என் வீட்டின்
பின் சன்னல் திறந்தேன்
குளிர்காற்று இதழ்குவித்து
மெலிதாய் முகத்திலூத
கணநேரம் கண்கள் சொருகிப்
பின் கண் திறந்தேன்
எதிர் வீட்டு வேம்பு
தன் கைகளில்
தேக்கிவைத்திருந்த துளிகளைச்
சிறு காற்று தட்டிவிட்டுச் செல்கிறது
நீ என்ன கொடுத்தாலும்
என் வீட்டில்
உனக்கு இடம் தர இயலாது
என்ற தன் இயலாமையை
விளக்கிக்கொண்டே
மண்புழுவோடு நகர்ந்து கொண்டிருக்கிறது
நத்தை
தொட்டியைச் சுற்றிலுமிருக்கும்
குப்பைகள்
அவனால் அழைத்துச் செல்லப்பட்டு
ஆங்காங்கே கைவிடப்பட்டிருக்கின்றன
குப்பை பொறுக்குபவன்
ஒருவேளை
இன்று பட்டினி கிடக்க நேரிடலாம்
வடக்கிலிருந்து
ஒரு கரும்பொதி
உருண்டு கொண்டிருப்பதை
அண்ணாந்து பார்த்தவாறே
மடித்த கருங்குடையோடு
மஞ்சள் சுடிதாரில்
ஒருத்தி செல்கிறாள்
எனக்கான விருந்தாளி
வந்ததுகூட அறியாமல்
பிணமாகவே கிடந்திருக்கிறேன்
நேற்றிரவு முழுதும்
முற்றத்தில்தான் இனி
என் இரவுகள்.
மறவாது
வந்துவிடு விளையாட!
உழவன்
இவ்வார உயிரோசையில் இக்கவிதை வெளியாகியுள்ளது. உயிரோசையில் படிக்க இங்கே சுட்டவும்.
விருப்பமிருப்பின் இப்படைப்பை "பூக்களிலிருந்து சில புத்தகங்கள்" எனும் நூலுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்.
Monday, October 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
:-) நல்லாருக்குங்க !
vaasiththeen nanbaree
vaazhththukkal
வாழ்த்துக்கள் !
//நீ என்ன கொடுத்தாலும்
என் வீட்டில்
உனக்கு இடம் தர இயலாது
என்ற தன் இயலாமையை
விளக்கிக்கொண்டே
மண்புழுவோடு நகர்ந்து கொண்டிருக்கிறது
நத்தை//
சிறந்த கற்பனை வரிகள் அருமை...
//ஆங்காங்கே கைவிடப்பட்டிருக்கின்றன
குப்பை பொறுக்குபவன்
ஒருவேளை இன்று பட்டினி கிடக்க நேரிடலாம்//
உண்மைகளையும் ஆங்காங்கே தூவிவிட்டிருக்கிறீர்கள்.
கவிதை முழுதும் அருமை...
உயிரோசையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
பூக்களிலிருந்து சில புத்தகங்கள் பகுதிக்கு பரிந்துரைத்தேன்.
கவிதை ரொம்ப நல்லா இருக்கு பாஸ். சில வரிகள் என்னமொ பண்ணுது போங்க.
ம்ம்ம் சூப்பர் உழவரே!!
ம்ம்ம் சூப்பர் உழவரே!!
வாழ்த்துக்கள் . அவர்களும் என்ன செய்வார்கள், இவ்வளவு அழகான கவிதையை வெளியிடத்தானே வேண்டும்..
ரொம்ப பிடித்ததுங்க.
-வித்யா
மனதை உழுது தேர்ந்தெடுத்த சிந்தனை வரிகள்.ஒவ்வொரு பந்தியும் தன் இயலாமை சொன்னபடி!
அருமையான கவிதை உழவன். அத்தனை வரிகளையும் ரசித்தேன்.
வாழ்த்துக்கள்!
அழகாக இருக்கு வாழ்த்துகள் நண்பா
//தொட்டியைச் சுற்றிலுமிருக்கும்
குப்பைகள்
அவனால் அழைத்துச் செல்லப்பட்டு
ஆங்காங்கே கைவிடப்பட்டிருக்கின்றன
குப்பை பொறுக்குபவன்
ஒருவேளை
இன்று பட்டினி கிடக்க நேரிடலாம்//
ஹ ஹ ஹா
நல்ல எதிர்மறை...
ரசித்துப் படித்தேன் அத்தனையும் தேன்....
வாழ்த்துகள் நண்பா...:-)))))
சந்தனமுல்லை
:-) நல்லாருக்குங்க !//
மிக்க நன்றி முல்லைஜி
மண்குதிரை
vaasiththeen nanbaree
vaazhththukkal//
நன்றி நண்பரே.. கடந்த வாரம் உங்களின் கவிதையை உயிரோசையில் கண்டேன். மகிழ்ச்சி
அமிர்தவர்ஷினி அம்மா
வாழ்த்துக்கள் !//
நன்றி அமித்துமா. என்ன வெறும் வாழ்த்துக்களோடு நிறுத்திக்கொண்டீர்கள்? :-)
க.பாலாஜி
கவிதை முழுதும் அருமை...
உயிரோசையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
பூக்களிலிருந்து சில புத்தகங்கள் பகுதிக்கு பரிந்துரைத்தேன்.//
மகிழ்ச்சி தோழா.. நன்றி
S.A. நவாஸுதீன்
கவிதை ரொம்ப நல்லா இருக்கு பாஸ். சில வரிகள் என்னமொ பண்ணுது போங்க.//
அப்படியா? :-)
ஷஃபிக்ஸ்/Suffix
ம்ம்ம் சூப்பர் உழவரே!!//
நன்றி suffi
வாழ்த்துக்கள் . அவர்களும் என்ன செய்வார்கள், இவ்வளவு அழகான கவிதையை வெளியிடத்தானே வேண்டும்..
ரொம்ப பிடித்ததுங்க.
-வித்யா//
எல்லாம் உங்கள் ஆசி. :-)
ஹேமா
மனதை உழுது தேர்ந்தெடுத்த சிந்தனை வரிகள்.ஒவ்வொரு பந்தியும் தன் இயலாமை சொன்னபடி!//
நன்றி ஹேமாஜி
ராமலக்ஷ்மி
அருமையான கவிதை உழவன். அத்தனை வரிகளையும் ரசித்தேன்.
வாழ்த்துக்கள்!//
நன்றி. உடம்ப பார்த்துக்கோங்க
ஆ.ஞானசேகரன்
அழகாக இருக்கு வாழ்த்துகள் நண்பா//
என்ன நண்பா.. நலமா? விடுமுறை எப்படி இருந்தது?
பிரியமுடன்...வசந்த்
//தொட்டியைச் சுற்றிலுமிருக்கும்
குப்பைகள்
அவனால் அழைத்துச் செல்லப்பட்டு
ஆங்காங்கே கைவிடப்பட்டிருக்கின்றன
குப்பை பொறுக்குபவன்
ஒருவேளை
இன்று பட்டினி கிடக்க நேரிடலாம்//
ஹ ஹ ஹா
நல்ல எதிர்மறை...
வருகைக்கு நன்றி தோழா.
தமிழரசி
ரசித்துப் படித்தேன் அத்தனையும் தேன்....//
தேனா?? மழை இல்லையா? :-)
என் மின்னஞ்சலுக்கு ரிப்ளை பண்ணவும்.
கார்த்திகைப் பாண்டியன்
வாழ்த்துகள் நண்பா...:-)))))//
மகிழ்ச்சி பாண்டியா :-)
அழகு கவிதை! சுவை அபாரம்!!!!
Post a Comment