காத்துக்கிடப்பது மட்டுமல்ல...
காலடியில் கிடப்பதும் கூட
காதலில் மட்டும் தான் சுகம் !
***
உள்ளாடையைத்
தேர்ந்தெடுக்கக்கூட
இவ்வளவு நேரமா?
நீயெல்லாம்
பெண் பார்க்கப்போனால்
எத்தனை பெண்தான் பார்ப்பாயோ..
என்பார்கள் நண்பர்கள்!
அவர்களுக்கென்ன தெரியும்
பார்த்த முதல் வினாடியே
உன்னைத்
தேர்வு செய்துவிட்டேன்
என்பது!
***
தெருவே
முகம் சுழித்து
மூக்கைப்
பொத்துகிற வேளையிலும்
நான் மட்டும்
அருகினில் சென்று
ரசித்துப் படிக்கிறேன்
உன் பெயரை
குப்பை லாரியில்!
உழவன்
Tuesday, September 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
நண்பா, இதுக்கு பேர் தான் காதல் கண்ணா பின்னான்னு வருதுன்னு சொல்றதா?
//நான் மட்டும்
அருகினில் சென்று
ரசித்துப் படிக்கிறேன்
உன் பெயரை
குப்பை லாரியில்!//
:))!
தலைப்பைப் பார்த்து காதலுக்கும் லாரிக்கும், அதுவும் குப்பை லாரிக்கும் என்ன சம்பந்தம் என்றபடியே வாசித்து வந்தால்...:)! ஆம் எதுவும் பொருட்டல்ல அது வந்து விட்டால்:)!
தெருவே
முகம் சுழித்து
மூக்கைப்
பொத்துகிற வேளையிலும்
நான் மட்டும்
அருகினில் சென்று
ரசித்துப் படிக்கிறேன்
உன் பெயரை
குப்பை லாரியில்!
*****************
கடைசிப் பந்தி கலக்கல் உழவரே!!
காதல் கலக்கலா கவிதையா வந்திருக்கு!!!!
ம், அகமதி அப்டேட்ஸ் எப்பதான் போடுவீங்க ? எப்படியிருக்காங்க மேடம்.
//தெருவே
முகம் சுழித்து
மூக்கைப்
பொத்துகிற வேளையிலும்
நான் மட்டும்
அருகினில் சென்று
ரசித்துப் படிக்கிறேன்
உன் பெயரை
குப்பை லாரியில்!//
ம்ம்ம்....அப்பறம்....எங்கயாவது மாட்டிகிட்டீங்களா?
என்னமா சிந்திக்கிறாங்க...
//அவர்களுக்கென்ன தெரியும்
பார்த்த முதல் வினாடியே
உன்னைத்
தேர்வு செய்துவிட்டேன்
என்பது!//
உண்மையான வரிகள்....
எல்லமே அழகு...அன்பரே....
கவிதை அழகு. ஆமா, அவள் பெயரை குப்பை லாரியில் எழுதியது யார்?
குப்பை லாரீன்னு கூட பாக்காம அவ பெற எழுதிருக்கானே??? அவன கவனிங்க முதல்ல.
கலக்கல் கவிதைகள்.
--வித்யா
அழகாயிருக்கிறது.
//ஜெஸ்வந்தி
கவிதை அழகு. ஆமா, அவள் பெயரை குப்பை லாரியில் எழுதியது யார்? //
குட் கொஸ்டின் :-)))
லாரிக்கு ஓனர் பேரு வச்சுருக்க மாட்டாரு. ராதா, கோதா, மாதா னு ... இப்படி எதாவது ஒரு பேரு லாரியில எழுதியிருப்பாங்கள்ள..அந்தப் பேருதான்
//அமிர்தவர்ஷினி அம்மா
காதல் கலக்கலா கவிதையா வந்திருக்கு!!!!
ம், அகமதி அப்டேட்ஸ் எப்பதான் போடுவீங்க ? எப்படியிருக்காங்க மேடம். //
ஆஹா..ரொம்ப ஆவலோடு எதிர்பார்துக்கிட்டு இருக்கீங்க போல :-)
எனக்கும் அகமதி அப்டேட்ஸ் போடனும்னு ஆசையாத்தான் இருக்குது. ஆனா என்ன போட, எப்படிப் போடனு ஒன்னுமே தோண மாட்டிக்குதுமா. மேடம் நல்லா இருக்காங்க. இப்பத்தான் கொஞ்சம் வால்தனம் ஆரம்பிச்சுருக்கு மேடம்க்கு :-)
//ரசித்துப் படிக்கிறேன்
உன் பெயரை
குப்பை லாரியில்!//
ஹிஹிஹி...
நல்லா இருக்குங்க...
உழவன்,
காதல் கவிதையா
இல்ல குப்பைக்கவிதையா
இல்ல குப்பை மேட்டுக் காதலா!அதெப்படி
உங்க காதலி பேர் குப்பை லாரில.
ஒருவேளை
அவங்கதான் வாகன ஓட்டுனரோ !
/ தெருவே
முகம் சுழித்து
மூக்கைப்
பொத்துகிற வேளையிலும்
நான் மட்டும்
அருகினில் சென்று
ரசித்துப் படிக்கிறேன்
உன் பெயரை
குப்பை லாரியில்!//
எங்கன இருந்தா என்ன நைனா நமக்கு நம்ப டாவுதான் முக்கியம், அப்பால ஏஞ்சாமி குப்பலாறி ஓட்டுறவர் பெண்ணா உங்க டாவுனு யாரும் கேக்கக் கூடாது, நம் மனமே ஒரு குப்பைனு கருத்து கந்தசாமி ஆகிடுவம்.
//Vidhoosh
குப்பை லாரீன்னு கூட பாக்காம அவ பெற எழுதிருக்கானே??? அவன கவனிங்க முதல்ல.
கலக்கல் கவிதைகள்.
--வித்யா //
வாங்க மேடம். தங்களின் முதல் வருகைக்கு மகிழ்ச்சி.. மிக்க நன்றி.
தொடர்ந்து வாரீர் வாரீர் என அழைக்கிறேன் :-)
//ஷஃபிக்ஸ்/Suffix
நண்பா, இதுக்கு பேர் தான் காதல் கண்ணா பின்னான்னு வருதுன்னு சொல்றதா?//
ஆமா நண்பா.. கண்மூடித்தனமா வரும் J
//ராமலக்ஷ்மி
தலைப்பைப் பார்த்து காதலுக்கும் லாரிக்கும், அதுவும் குப்பை லாரிக்கும் என்ன சம்பந்தம் என்றபடியே வாசித்து வந்தால்...:)! ஆம் எதுவும் பொருட்டல்ல அது வந்து விட்டால்:)!//
பின்னே.. குப்பை நாற்றமெல்லாம் ஒரு பொருட்டா :-)
//S.A. நவாஸுதீன்
கடைசிப் பந்தி கலக்கல் உழவரே!!//
மற்ற ரெண்டும் வேஸ்ட்டுனு எனக்கே தெரியும் தலைவா :-)
//எல்லமே அழகு...அன்பரே....//
நன்றி பாலாஜி
//அழகாயிருக்கிறது.//
நன்றி வித்யாஜி்
நல்லாயிருக்குங்க.
குப்பை லாரியின் பின்னால் சென்று ரசித்துப் படித்துவிட்டு, பக்கத்தில் உங்கள் பெயரை எழுதவில்லையா?
நன்றி வசந்த்
நன்றி அமுதா
நன்றி ஹேமா
நன்றி பித்தனின் வாக்கு
நன்றி நாடோடி இலக்கியன்
நன்றி செல்வக்குமார்
காதலில் நனைந்து தோய்ந்த வரிகள்
//தெருவே
முகம் சுழித்து
மூக்கைப்
பொத்துகிற வேளையிலும்
நான் மட்டும்
அருகினில் சென்று
ரசித்துப் படிக்கிறேன்
உன் பெயரை
குப்பை லாரியில்!//
இது காதலித்தபோதா? அல்லது இப்பவும் அப்படிதானா?
Post a Comment