உழுது போட்ட நிலத்துக்கு
உழவன் ஊட்டுவான்
உரமாக !
இருந்த இடத்திலேயே
காய்ந்து போனால்
எரிவேன் எருவாக !
வளையல் கையால்
வழிக்கப்பட்டு
குளிர் நீரோடு
கலந்திருப்பேன்
முற்றம் தெளிக்க !
முற்றத்தின் முதுகினிலே
இருவிரலால் மலரெழுதிய
கவிதையாம்
மாக்கோலத்தின் மையத்தில்
அமர்ந்திருப்பேன்
பூசணிப்பூ தாங்கும் கையாக !
கம்பு சோளக்
கதிர்கள் காயும்
களத்திலெழும் புழுதிபடிய
கரிசல்காட்டான்
கரைத்திருப்பான்
களம் தெளிக்க !
வீட்டுத்தோட்டத்தில் நட்டிய
முருங்கைக் கட்டைக்கு
மூதாட்டி வைத்திருப்பாள்
மருதாணியாக !
பிடித்து வைத்து
அருகம்புல் செருகிவைத்தால்
ஆவேன்
அவசர சாமியாக !
இப்படியெல்லாம் மட்டுமல்லாது
எப்படி எப்படியோ
பயன்பட்டிருப்பேன்
பட்டிக்காட்டில் பிறந்திருந்தால் !
மாநகரச் சாலை
ஓரத்தில் பிறந்ததாலே
உதிர்ந்துபோன
மரத்தின் முடிகளோடும்
கசக்கிப்போட்ட
மரத்தின் பேத்திகளோடும்
குப்பை வண்டியிலே
பயணற்றுப் பயணிக்கிற
மாட்டுச் சாணம் நான்
மனமுடைந்து புலம்புகிறேன்
மறுபிறவியாவது
பட்டிக்காட்டில் வேண்டுமென்று !
உழவன்
Sunday, July 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
மாட்டுசானத்தின் மனம் பேசும் மொழிகள் அருமை உழவரே
அருமை
நல்ல கற்பனை நண்பா
//S.A. நவாஸுதீன்
மாட்டுசானத்தின் மனம் பேசும் மொழிகள் அருமை உழவரே//
//திகழ்மிளிர்
அருமை//
நன்றி நண்பரே.
இடம் மாறிப் போனதில் அதன் இயல்புத் தன்மையே மாறிவிடுகிறது...
நல்லாருக்கு தோழரே.
வித்தியாசமான சிந்தனை உழவரே
வாழ்த்துக்கள்
//குப்பை வண்டியிலே
பயணற்றுப் பயணிக்கிற
மாட்டுச் சாணம் நான்
மனமுடைந்து புலம்புகிறேன்
மறுபிறவியாவது
பட்டிக்காட்டில் வேண்டுமென்று !//
ஆகா... அருமை நல்லாயிருக்கு தோழா
//ஜகதீஸ்வரன்
கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.
நன்றி... //
நன்றி நண்பா.. நிச்சயம் உங்கள் தளத்திற்கு வருகிறேன்.
//குடந்தை அன்புமணி
இடம் மாறிப் போனதில் அதன் இயல்புத் தன்மையே மாறிவிடுகிறது...
நல்லாருக்கு தோழரே. //
//கார்த்திகைப் பாண்டியன்
நல்ல கற்பனை நண்பா //
நன்றி தோழர்களே :-)
சாணிக்கும் முக்கியத்துவமா !
நல்ல கவிதை
//sakthi
வித்தியாசமான சிந்தனை உழவரே
வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கு நன்றி தோழி.
//ஆ.ஞானசேகரன்
ஆகா... அருமை நல்லாயிருக்கு தோழா //
நன்றி நண்பா.
அருமை.அருமை.
மனித மனம் மட்டுமில்லை.மாட்டின் சாணம் கூட மறுபிறவி எடுக்க நினைப்பதே பட்டிக்காட்டின் பெருமை.
//அமிர்தவர்ஷினி அம்மா
சாணிக்கும் முக்கியத்துவமா !
நல்ல கவிதை //
என்ன அமித்துமா இப்படி சொல்லிட்டீங்க. :-)
சாணி நம்ம வாழ்க்கையில எவ்வளவு முக்கியமான ஒன்னு. சாணி பற்றி ஒரு தனிப் பதிவே போடலாமே.
//துபாய் ராஜா
அருமை.அருமை.
மனித மனம் மட்டுமில்லை.மாட்டின் சாணம் கூட மறுபிறவி எடுக்க நினைப்பதே பட்டிக்காட்டின் பெருமை. //
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
மிக மிக அருமை.வாழ்த்துக்கள்.
//உமா
மிக மிக அருமை.வாழ்த்துக்கள். //
நன்றிங்க :-)
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
//Starjan ( ஸ்டார்ஜன் )
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் //
மிக்க மகிழ்ச்சி நண்பர் ஸ்டார்ஜன் அவர்களே..
உங்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
வெகு நன்று.
//மறுபிறவியாவது
பட்டிக்காட்டில் வேண்டுமென்று !//
உண்மைதான், பட்டிக்காட்டில் கொண்டாடப் படுவது பட்டணத்தில் கேட்பாரற்று. நல்ல கவிதை.
அழகு..
Post a Comment