Thursday, July 23, 2009

தீபாவளி ???

லதா.. 5.30க்கு அலாரம் வச்சிருக்கேன். ஒருவேளை நான் தூங்கிட்டாலும் நீ எழுப்பி விட்டிரு.

என்னது.. 5.30க்கா? 4 மணிக்கே வைங்க. தூங்கிருவேனோனு கவலையெல்லாம் படவேண்டாம். ஒரு வாளி தண்ணிய ஊத்தியாவது நான் எழுப்பிவிட்டிருவேன்.

அடி பாவி. ரொம்ப நல்ல எண்ணம் உனக்கு.

பின்னே.. ஒருவேளை எழுந்திருக்க லேட் ஆயிடுச்சுனா அவ்ளதான். எல்லாம் பிளானும் நாசமாகிடும்.

ஏதோ கொஞ்சம் இரக்கம் காட்டுடியம்மா. ஆர்வக்கோளாருல சுடுதண்ணிய ஊத்திராதே.



டிரிங்..................

ரகு.. ரகு...மணி 4 ஆயிருச்சு. எழுந்திருங்க.

ஏய் தூக்கம் தூக்கமா வருதுடா..

தூங்குனாலாம் வேலைக்காவாது. நான் போய் டீ போடுறேன். அதுக்குள்ள ப்ரஷ் பண்ணிட்டு கெளம்புற வழியைப் பாருங்க.

அடடா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலயே.

ஏதோ முனங்கிற மாதிரி இருக்கு

ஒன்னுமில்லை ஒன்னுமில்லை.. இதோ கெளம்பிட்டேன்.

ஒருவழியா 4.30 கெல்லாம் கெளம்பியாச்சு. லதா.. நான் கொளம்புறேன். போய்ட்டு போன் பண்ணுறேன்.

ம்ம்.. வெற்றியோட திரும்பி வாங்க.

என்னடி இது? குங்குமமெல்லாம் வச்சு விடுற. விட்டா கையக் கீறி ரத்தத்துல பொட்டு வச்சு அனுப்புவ போல.

பின்னே.. நீங்க போறது எவ்வளவு முக்கியமான காரியம்.

உன் அலும்பு தாங்கல. ஓகே ஒகே.. பை.



5 மணி கூட இன்னும் ஆகல. அதுக்குள்ள இவ்வளவு பேரா!!! அடடா.. நம்மதான் லேட்டோ.. நமக்கு முன்னால எட்டு பேரு இருக்காங்களே. சரி வெயிட் பண்ணுவோம். கெடைக்காமலா போயிரும்.

எனக்கு இந்த காதல் அனுபவம் இல்லாததால, ஒரே இடத்துல உக்கார்ந்துக்கிட்டு ஒரு 3 மணி நேரத்தைப் போக்குறது ரொம்ப கஷ்டமா போச்சு. ம்ம்.. என்ன பண்ணுறது. காத்துதான ஆகனும். வேறு வழியில்லாம FM ல பாட்டுக்கேட்டுக்கிட்டே டைம்பாஸ் பண்ணுனேன்.



"சார் உங்களுக்கு பின்னால நான்; எனக்கு பின்னாலதான் நீங்க. ஹலோ சார் நீங்கெல்லாம் எங்களுக்கு பின்னாலதான் வந்தீங்க. ப்ளீஸ் பின்னால போயிடுங்க" அந்த நேரத்துல காதுல விழுந்த வசனங்கள் இதுமாதிரி நிறைய.

வரிசை நகர்ந்த அந்த 5 நிமிடங்கள் எல்லோரின் இதயத்துடிப்பும் அதிகரித்திருந்ததை உணரமுடிந்தது.

இப்ப என்னோட நிமிடங்கள்....... ... வாவ்.. தேங்க் காட் :-))

லதாவுக்கு போன் போட்டு சொல்லிருவோம். இந்த விசயத்தக் கேட்டா எவ்வளவு சந்தோசப்படுவா.
ஸ்பீடு டயலில் அவளுக்கான 3ம் எண்ணை தொடர்ந்து அழுத்த...

ஹலோ..லாதா, சக்ஸஸ்.. கெடைச்சிருச்சுடா. ஆமா ஆமா லக்கிதான். எந்த சாமி புண்ணியமோ. ஆமா கெளம்பிட்டேன். இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவேன்.



கேட்டுக்கு முன்னால பைக்க நிறுத்திட்டு, உள்ளே போறேன். எதிர்ல லதா ஆரத்தி தட்டோட நிக்குறா.

ஹே.. என்னடி ஆரத்தியெல்லாம் எடுக்குற? ஆச்சரியத்துடன் நான் கேட்க

பின்னே.. இது பெரிய சாதனை இல்லையா?

என்னது சாதனையா?? தீபாவளிக்கு ஊருக்குப் போக ட்ரெய்ன்ல டிக்கெட் புக் பண்ணிட்டு வந்ததெல்லாம் பெரிய சாதனையா?

சாதனை இல்லாம பின்னே என்னவாம். காலையிலேயே எல்லா சேனல்லயும் ப்ளாஷ் நியூஸ். எட்டு நிமிஷத்துல எல்லா ட்ரெய்னும் ஃபுல் ஆயிடுச்சாம். நீங்க போன் பண்ணி சொன்னவுடனே நான் எவ்ளோ சந்தோசப்பட்டேன் தெரியுமா. இந்த சந்தோசத்தைக் கொண்டாட கேசரி வேற பண்ணிருக்கேன்.

ஓ.. இது வேறயா!!! தீபாவளிக்கு ஊருக்குப் போக டிக்கெட் கிடைச்சாலே, அதை ஒரு பண்டிகையாக் கொண்டாட வேண்டிய நிலைமை சென்னைவாசிகளுக்கு வந்திருச்சா!!
என்ன கொடுமை சார் இது!


உழவன்

21 comments:

சொல்லரசன் said...

ஏங்க டிக்கெட்டுக்கு மேல ஜம்பது நுறொ கொடுத்தால் டிராவல் ஏஜென்ட்யிடம்
கிடைக்குமாம் உண்மையா?

ஐந்திணை said...

ரொம்ப கொடுமைதான் :(

ஆ.ஞானசேகரன் said...

//ஓ.. இது வேறயா!!! தீபாவளிக்கு ஊருக்குப் போக டிக்கெட் கிடைச்சாலே, அதை ஒரு பண்டிகையாக் கொண்டாட வேண்டிய நிலைமை சென்னைவாசிகளுக்கு வந்திருச்சா!!
என்ன கொடுமை சார் இது!//

இப்படியும் ஒரு கொடுமையா??????

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் பாதி கதைல ஸ்கூல் அட்மிஷன் க்யூவா இருக்கும்னு நெனச்சிக்கிட்டேன் உழவன்.

கடைசியிலதான் தெரியுது. சிரிப்பு வந்தாலும் இதுதானே இப்ப நடக்குது.

"உழவன்" "Uzhavan" said...

//சொல்லரசன்
ஏங்க டிக்கெட்டுக்கு மேல ஜம்பது நுறொ கொடுத்தால் டிராவல் ஏஜென்ட்யிடம்
கிடைக்குமாம் உண்மையா? //

ஐம்பதா??? அப்படினாதான் பரவாயில்லையே.. டிக்கட்ட விட 300, 400 அதிகாம கொடுக்க வேண்டியிருகும் நண்பா. அதுவும் கிடைக்காது.

"உழவன்" "Uzhavan" said...

//ஐந்திணை
ரொம்ப கொடுமைதான் :( //

என்ன பண்ணுறது? எல்லாம் நேரக் கொடுமை சார்.

"உழவன்" "Uzhavan" said...

ஆ.ஞானசேகரன்
இப்படியும் ஒரு கொடுமையா?????? //

ஆமா நண்பா.. உங்களுக்கெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல :-)

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா
நான் பாதி கதைல ஸ்கூல் அட்மிஷன் க்யூவா இருக்கும்னு நெனச்சிக்கிட்டேன் உழவன்.
கடைசியிலதான் தெரியுது. சிரிப்பு வந்தாலும் இதுதானே இப்ப நடக்குது.//

அடமிசனை நினச்சா இப்பவே வயிறு கலங்குது அமித்துமா. நீங்க வேற இப்ப அத வேற ஞாபகப்படுத்தி விட்டுட்டீங்க :-))
அமிக்குட்டிக்கு ஸ்கூலெல்லாம் பார்த்துட்டீங்களா?

அகரம் அமுதா said...

என்னக் கொடுமை சரவணா இது.


பைதபை கதை அருமை. வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நாட்டு நிலைமை அப்படித்தாங்க இருக்கு! [கதைக்கு ‘க்யூ’ சரிதான் என்றாலும் ஒரு கேள்வி. நீங்க irctc.co.in மூலமா முயற்சிப்பதில்லையா?]

குடந்தை அன்புமணி said...

தீபாவளி என்று தலைப்பு கொடுத்துவிட்டதால் என்னால் யூகிக்க முடிந்தது. தலைப்பு வேற (சாதனை)கொடுத்திருந்தால் இன்னமும் சுவாரசியம் கூடியிருக்கும். நாட்டு நடப்பை அருமையாக சொன்னது சிறுகதை.

"உழவன்" "Uzhavan" said...

//அகரம்.அமுதா
என்னக் கொடுமை சரவணா இது.
பைதபை கதை அருமை. வாழ்த்துக்கள். //

வாழ்த்துக்கு நன்றி. ஒரு வெண்பா மூலம் வாழ்த்து சொல்லியிருக்கலாம் :-))

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
நாட்டு நிலைமை அப்படித்தாங்க இருக்கு! [கதைக்கு ‘க்யூ’ சரிதான் என்றாலும் ஒரு கேள்வி. நீங்க irctc.co.in மூலமா முயற்சிப்பதில்லையா?] //

irctc.co.in மூலம்தான் எப்போதும் ரிசர்வ் செய்வேன். 8 மணிக்கு ஆரம்பமாகி அடுத்த 7, 8 நிமிடங்களிலேயே எல்லா ட்ரெயின்லயும் வெயிட்டிங் லிஸ்ட் வந்துருது. சில சமயங்களில் ஆன் லைன்ல பண்ணும்போது server errorனு வரும். இதுல வேற கிரிடிட் கார்டு டீடெல்ஸ் குடுத்தபிறகு, அது அந்த அப்புறம் விசா சைட்டுக்கு போயி 3D secure la வெரிபிகேசன் வேர பண்ணும்.. இதெல்லாம் எதுக்குனுதான் க்யூகு போனேன் மேடம். :-)

ராமலக்ஷ்மி said...

irctc-யுடன் இத்தனை பாடு நானும் படுவேன்:))! ஆனாலும் க்யூவிற்கு பரவாயில்லைன்னு விடாது முயற்சித்து எடுத்திடுவேன்:)!

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
irctc-யுடன் இத்தனை பாடு நானும் படுவேன்:))! ஆனாலும் க்யூவிற்கு பரவாயில்லைன்னு விடாது முயற்சித்து எடுத்திடுவேன்:)! //
ம்ம்.. அப்ப இந்த குற்றால சீசனுக்கு டிக்கெட் புக் பண்ணிடீங்களா? சீசன் களை கட்டிருக்கு.. சீக்கிரம் கெளம்பி வாங்க :-)

SUFFIX said...

அது சரி:::::)))))))))

"உழவன்" "Uzhavan" said...

குடந்தை அன்புமணி
தீபாவளி என்று தலைப்பு கொடுத்துவிட்டதால் என்னால் யூகிக்க முடிந்தது. தலைப்பு வேற (சாதனை)கொடுத்திருந்தால் இன்னமும் சுவாரசியம் கூடியிருக்கும். நாட்டு நடப்பை அருமையாக சொன்னது சிறுகதை. //
 
மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பா. தலைப்பில் எனக்கும் உடன்பாடு இல்லை. என்னகொடுப்பது என்ற ஒரு தெளிவு வராததால் அப்படியே விட்டுவிட்டேன். நன்றி :-)

"உழவன்" "Uzhavan" said...

ஷஃபிக்ஸ்
அது சரி:::::)))))))))
எங்க சென்னைவாசிகளோட நிலைமையைப் பார்த்தா உங்களுக்கு சிரிப்பா வருதா :-))

PPattian said...

நல்லாருக்கு கதை.. :)

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

கதை நல்ல இருக்கு . குமுதம் அல்லது குங்குமத்திற்கு அனுப்புங்கள்.. நிச்சயம் பிரசுரம் ஆகும். வாழ்த்துக்கள்!

"உழவன்" "Uzhavan" said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்
கதை நல்ல இருக்கு . குமுதம் அல்லது குங்குமத்திற்கு அனுப்புங்கள்.. நிச்சயம் பிரசுரம் ஆகும். வாழ்த்துக்கள்! //

அப்படியா சொல்றீங்க.. இப்படி சொல்லி உசுப்பேத்தி விடலயே? :-))
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. அனுப்ப முயற்சி செய்கிறேன்.