Monday, June 22, 2009

ஜெமினி குதிரை - சென்னை அனுபவம்

சென்னைக்கு வந்த புதுசுல, இந்தப் பக்கம் போறதுக்குப் பதிலா, அந்தப் பக்கம் போற பஸ்சுல ஏறின அனுபவத்தைப் போன பதிவுல சொல்லிருந்தேன். படிக்க இங்கே க்ளிக்கவும்.

அண்ணா மேம்பாலக் குதிரையானது என்னை ஒருமுறை ஏமாத்துன கதைதான் இப்ப இந்தப் பதிவுல.

எங்க ஊருல பக்கத்துத் தெருக்கார ஒரு அண்ணன் இங்க ஸ்டெர்லிங் ரோட்டுல, ஒரு லாட்டரிக் கடையில வேலை பார்த்துக்கிட்டு இருந்தாரு. எனக்கு ஆபீஸ்ல பெரும்பாலும் ஷிப்ட் ஒர்க்தான். அதனால சும்மா இருக்குற நேரத்துல இந்த லாட்டரிக் கடையில வந்துதான் பொழுதப் போக்குவேன். அப்ப இந்த ஒரு நம்பர் லாட்டரி ரொமப ஃபேமஸ். காலையில டிபன்பாக்ஸ்ல சாப்பாடு எடுத்திட்டு வந்திட்டு, சாயங்காலம் வரைக்கும் ஒரு நம்பர் லாட்டரில விளையாடிட்டு, தினமும் 100, 200 சம்பாதிச்ச ஒரு சில கஷ்டமர்களையும் அங்க பார்த்திருக்கேன். அடபாவிங்களா.. இந்த அளவிற்கா லாட்டரி மோகத்துல இருக்காங்க. இதனாலதான் பல குடும்பம் நடுத்தெருவுக்கே வந்திருதுனு மனசுக்குள்ள நெனச்சிக்குவேன்..ம்ம்ம்.. அது போகட்டும்.. இப்ப மேட்டருக்கு வருவோம்.

ஒருநாளு அந்த அண்ணன்கிட்ட, இங்கிருந்து தெளசன்லைட்டு எப்படி போகுறதுனு கேட்டேன். ஏன்னா என் தம்பி ஒருத்தன் க்ரீம்ஸ் ரோட்டுல வேலை பார்த்தான். அவனப் பார்க்க போறதுக்குத்தான் கேட்டேன். தெளசன் லைட்டு இங்க இருந்து பக்கம்தான்; வள்ளுவர்கோட்டத்துல இருந்து ஒரே பஸ்சுதான்னு அவரு சொன்னாரு. பக்கம்னா எதுக்கு பஸ்சுல போய்க்கிட்டு; அப்படியே நடந்து போனா, நாலு இடத்த தெரிஞ்சிவச்சிக்கிட்ட மாதிரி இருக்குமேனு நான் சொன்னேன். அப்படியா.. அப்ப இப்படி போயி, வள்ளுவர்கோட்டத்தில இருந்து லெப்ட்ல பாம்குரோவ் வழியா ஜெமினி போயிரு. ஜெமினில இருந்து அப்படியே லெப்ட்ல போனா க்ரீம்ஸ் ரோடு வந்திரும்னு சொன்னாரு.

நானும் அப்படியேதான் போனேன். அடங் கொய்யால இதுதான் ஜெமினி பிரிட்ஜா.. எல்லா படத்துலயும் மெட்ராஸைக் காட்டும்போது, இந்த பிரிட்ஜத்தான் காட்டுவானுங்க. குதிரைவேற சும்மா கம்பீரமா இருக்கே. இந்த இடத்துலதான் நான் கொஞ்சம் அதிபுத்திசாலித்தனமா திங்க் பண்ணுனேன். டேய்.. நவநீதா.. (நவநீதகிருஷ்ணன் தான் என்னோட பேரு) நல்லா ஞாபகம் வச்சுக்கோ.. "இந்தக் குதிரையில இருந்து இடதுபக்கமா போனா தெளசன்லைட்டு". தெளிவா மனசுல ஞாபகம் வச்சிக்கிட்டு க்ரீம்ஸ் ரோடு போயிட்டேன். ஒகே..இந்த சீனு இதோட ஓவர். அப்புறம் நடந்தது வேற சீன்.

இது நடந்து முடிஞ்ச ஒரு வாரத்துலயோ, இரண்டு வாரத்துலயோ ஒரு இண்டர்வியூக்காக ராதாகிருஷ்ணன் சாலைக்கு (மயிலாப்பூர்), எப்படியோ யார் யார்ட்டயோ கேட்டு போயிட்டேன். இண்டர்வியூ முடிஞ்ச உடனே, பக்கத்துல ஒரு டீக்கடையில, அண்ணே தெளசன்லைட்டு எப்படி போகுறதுனு கேட்டேன். இங்க இருந்து 29C ல ஜெமினி போயி, அங்கயிருந்து தெளசன்லைட்டு போ ன்னு சொன்னாரு. ரொம்ப தூரம்லாம் இல்ல. நடந்தும் போகலாங்கிறதை அவர்ட்ட கன்பார்ம் பண்ணிக்கிட்டு, நடக்க ஆரம்பிச்சேன்.

டீக்கடைக்காரர் சொன்ன மாதிரி, சோழா ஓட்டல் தாண்டுன உடனே, ஜெமினி பிரிட்ஜ் கண்ணுல பட்டது. அட.. அன்னிக்கு பார்த்த குதிரை. குதிரையில இருந்து இடது பக்கமா போனா தெளசன்லைட்டுனு நாந்தான் ஏற்கனவே மைண்டுல ஏத்தி வச்சிருக்கேனே..அப்படியே இடதுபக்கமா போறேன். கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம்தான் மைல்டா டவுட் வர ஆரம்பிச்சது. க்ரீம்ஸ் ரோடு போக இவ்வளவு தூரம் போகவேண்டியதில்லையே; சரி.. இது எந்த இடம்னு பார்போம்னு பார்த்தா DMS தாண்டிட்டேன்.

இந்தக்கூத்து நடந்ததுக்கு பின்னாலதான், அண்ணா மேம்பாலத்துக்கு ரெண்டு பக்கமும் குதிரை சிலை இருக்குங்கிற மேட்டரையே தெரிஞ்சிக்கிட்டேன்.

(படிச்சிட்டு மட்டும் போயிறாதீங்க.. உங்க ஓட்டை தமிழ்மணம் மற்றும் தமிழிசுலயும் போட்டுட்டு போங்க)

உழவன்

26 comments:

துளசி கோபால் said...

:-)))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தக்கூத்து நடந்ததுக்கு பின்னாலதான், அண்ணா மேம்பாலத்துக்கு ரெண்டு பக்கமும் குதிரை சிலை இருக்குங்கிற மேட்டரையே தெரிஞ்சிக்கிட்டேன்.

சொன்னா நம்புங்க உழவன், உங்களோட இந்தப் பதிவ படிச்சப்புறம் தான் எனக்கு தெரிகிறது குதிரை சிலை ரெண்டு பக்கமும் இருப்பது !!!

என்னத்த சொல்ல, சென்னைவாசி நானுன்னு.

ராமலக்ஷ்மி said...

நல்ல கூத்துதான்:)!

S.A. நவாஸுதீன் said...

ரெண்டு குதிரையும் சேர்ந்து உங்களுக்கு லாடம் கட்டிடுச்சு போங்க. ஹா ஹா ஹா.

சொல்லரசன் said...

நல்லாதான் மைன்டுல் ஏத்தி வைச்சிருக்கிங்க‌.

குடந்தை அன்புமணி said...

அட! இத்தனை நாள் பேருந்தில் போய் வந்தும் இதை கவனிச்சதில்லையே... நிஜம்தானா நவீன்?

sakthi said...

இந்தக்கூத்து நடந்ததுக்கு பின்னாலதான், அண்ணா மேம்பாலத்துக்கு ரெண்டு பக்கமும் குதிரை சிலை இருக்குங்கிற மேட்டரையே தெரிஞ்சிக்கிட்டேன்.

அப்படியா உழவெரே...

தகவலுக்கு நன்றி...

sakthi said...

அடங் கொய்யால இதுதான் ஜெமினி பிரிட்ஜா.. எல்லா படத்துலயும் மெட்ராஸைக் காட்டும்போது, இந்த பிரிட்ஜத்தான் காட்டுவானுங்க. குதிரைவேற சும்மா கம்பீரமா இருக்கே. இந்த இடத்துலதான் நான் கொஞ்சம் அதிபுத்திசாலித்தனமா திங்க் பண்ணுனேன். டேய்.. நவநீதா.. (நவநீதகிருஷ்ணன் தான் என்னோட பேரு) நல்லா ஞாபகம் வச்சுக்கோ..

நல்லா ஞாபகம் வைத்துகொண்டீர்கள் தானே....

பிரவின்ஸ்கா said...

அப்படியா ?
எனக்கும் தெரியாது ..
நல்லா எழுதியிருக்கீங்க.

ஊருக்கு போயிட்டு வந்தாச்சா ?
மகள் சுகம் தானே ?

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

ஆ.ஞானசேகரன் said...

நல்லா இருக்கே... எனக்கு சென்னை அனுபவம் பத்தாது நண்பா

"உழவன்" "Uzhavan" said...

//துளசி கோபால்
:-))))) //

:-))

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா
சொன்னா நம்புங்க உழவன், உங்களோட இந்தப் பதிவ படிச்சப்புறம் தான் எனக்கு தெரிகிறது குதிரை சிலை ரெண்டு பக்கமும் இருப்பது !!!
என்னத்த சொல்ல, சென்னைவாசி நானுன்னு//

//குடந்தை அன்புமணி
அட! இத்தனை நாள் பேருந்தில் போய் வந்தும் இதை கவனிச்சதில்லையே... நிஜம்தானா நவீன்? //

நீங்கள்லாம் சொல்றத பார்த்தா, எனக்கும் இப்ப மைல்டா டவுட் வருது.. ரெண்டு இருக்கா இல்லை ஒன்னுதான் இருக்கானு..:-)

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
நல்ல கூத்துதான்:)! //

ஆமா மேடம்.. கூத்தாதான் போச்சு :-)

"உழவன்" "Uzhavan" said...

//S.A. நவாஸுதீன்
ரெண்டு குதிரையும் சேர்ந்து உங்களுக்கு லாடம் கட்டிடுச்சு போங்க. ஹா ஹா ஹா//

:-))

"உழவன்" "Uzhavan" said...

//சொல்லரசன்
நல்லாதான் மைன்டுல் ஏத்தி வைச்சிருக்கிங்க‌//

ஏத்தி வச்சு ஒரு புரோஜனமும் இல்ல :-)

"உழவன்" "Uzhavan" said...

//sakthi
நல்லா ஞாபகம் வைத்துகொண்டீர்கள் தானே....//

ம்ம்ம்.. இப்ப நல்லா ஞாபகம் இருக்கு :-)

"உழவன்" "Uzhavan" said...

//sakthi
அப்படியா உழவெரே...
தகவலுக்கு நன்றி... //

அப்படித்தான்.. நீங்க சென்னை வந்தது இல்லையா?? வந்து பாருங்க :-)

"உழவன்" "Uzhavan" said...

//பிரவின்ஸ்கா
ஊருக்கு போயிட்டு வந்தாச்சா ?
மகள் சுகம் தானே ?//

சுகம் தோழா சுகம்.. மிக்க நன்றி :-)

அப்புறம் பிரவின்ஸ்கா.. கடந்த முறை என்னால் யுகமாயினிக்கு வரமுடியவில்லை. காரணம் காலை என்பதால்தான். ஞாயிறென்றாலே எழுவதற்கு 9 மணி ஆகிவிடுகிறது. வந்திருந்தால் மீண்டுமொருமுறை நாம் சந்தித்திருக்கலாம்.

"உழவன்" "Uzhavan" said...

//ஆ.ஞானசேகரன்
நல்லா இருக்கே... எனக்கு சென்னை அனுபவம் பத்தாது நண்பா//

வாருங்கள்.. சென்னையைச் சுத்திப்பார்க்கலாம் :-)

துபாய் ராஜா said...

''//இந்தக்கூத்து நடந்ததுக்கு பின்னாலதான், அண்ணா மேம்பாலத்துக்கு ரெண்டு பக்கமும் குதிரை சிலை இருக்குங்கிற மேட்டரையே தெரிஞ்சிக்கிட்டேன்.'//

தெரிந்த இடம்.தெரியாத தகவல்.

"உழவன்" "Uzhavan" said...

//துபாய் ராஜா
தெரிந்த இடம்.தெரியாத தகவல்.//

என்னங்க.. எல்லாருமே இப்படி சொல்றீங்க.. ஒரே பீலிங்ஸா இருக்கு :-)

வல்லிசிம்ஹன் said...

ஆஹா ஹா;)))

"உழவன்" "Uzhavan" said...

//வல்லிசிம்ஹன்
ஆஹா ஹா;))) //
ம்.. உங்களுக்கு சிரிப்பா இருக்குல :-)

Jaleela Kamal said...

///அடங் கொய்யால இதுதான் ஜெமினி பிரிட்ஜா.. எல்லா படத்துலயும் மெட்ராஸைக் காட்டும்போது, இந்த பிரிட்ஜத்தான் காட்டுவானுங்க. குதிரைவேற சும்மா கம்பீரமா இருக்கே. //


ஹா ஹா ஹா

"உழவன்" "Uzhavan" said...

//Jaleela
///அடங் கொய்யால இதுதான் ஜெமினி பிரிட்ஜா.. எல்லா படத்துலயும் மெட்ராஸைக் காட்டும்போது, இந்த பிரிட்ஜத்தான் காட்டுவானுங்க. குதிரைவேற சும்மா கம்பீரமா இருக்கே. //
ஹா ஹா ஹா //
 
உங்களின் மனம் திறந்த சிரிப்புக்கு மிக்க நன்றி.. மற்ற பதிவுகளையும் பார்வையிடுங்கள்.

சாந்தி மாரியப்பன் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_07.html