Wednesday, June 24, 2009

டீ ... காபி ...

தெருவெங்கும் டீ கடை
தேடாமல் கிடைக்கும் கடை !

விருந்தாளி வந்தாலும்
விருந்தாளியா நீ
போனாலும்
டீயோ காபியோ நிச்சயம் !
இது
யாரும் மறுக்காத சத்தியம் !

கரிசல் காட்டில்
களை எடுத்தாலும்
டைடல் பார்க்கில்
கோடு அடித்தாலும்
டீ குடிக்காத நாள்
இருந்ததில்லை
கதை பேசாமல்
குடித்ததுமில்லை !

டீ கடை பெஞ்சும்
தினத்தந்தி பேப்பரும்
இல்லாத ஊரு
இருக்குதா இங்க !
காபியிலதான்
பொழுதே விடியுது
பாருங்க !

ஸ்ட்ராங்குனு சொல்றான்..
லைட்டுனு சொல்றான்..
எத்தனை
வகையோ இருக்கு !
வடையோடு குடித்தால்
தனிச்சுவையே இருக்கு !

கருப்பட்டி உடைத்து
இஞ்சி தட்டி
பக்குவமாய்
பாட்டி கொடுத்த காபி
பட்டணத்தில்
எங்கே இருக்கு !

தேனீர் விருந்து
தேசத்தின் விருந்தோ !
தேசமே குடிப்பதால் -இது
தேசிய பானமோ !!

உழவன்

நன்றி: யூத்ஃபுல் விகடன்

39 comments:

முரளிகண்ணன் said...

அருமை

Anonymous said...

ஆஹா பொது நலக்கவிதை....டீ எல்லாத் தரத்தினரையும் பொதுவாக்கிய பெருமை இதைச் சேரும்....

அமிர்தவர்ஷினி அம்மா said...

தேசிய பானமா ஆக்கிட்டா போச்சு !!!

நல்லா இருக்கு கவிதை

நையாண்டி நைனா said...

வாங்களேன்... ஒரு டி குடிச்சிகிட்டே பேசுவோம்... அப்படியே உங்க கவிதையையும் அலசுவோம்.

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு உழவன்.

நர்சிம் said...

யூத்துக்கு வாழ்த்துக்கள்.
கவிதை அருமை.

ராமலக்ஷ்மி said...

//கருப்பட்டி உடைத்து
இஞ்சி தட்டி
பக்குவமாய்
பாட்டி கொடுத்த காபி
பட்டணத்தில்
எங்கே இருக்கு !//

இல்லைதான், கருப்பட்டிக்கு எங்கு போவது?

//தேனீர் விருந்து
தேசத்தின் விருந்தோ !
தேசமே குடிப்பதால் -இது
தேசிய பானமோ !!//

ஆமாம், தேசிய பானம் ஆக்கிட வேண்டியதுதான்:)!

நல்ல கவிதை உழவன்!

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு:)

"உழவன்" "Uzhavan" said...

//முரளிகண்ணன்
அருமை//

முதன் முதலா வந்துருக்கீங்க.. மகிழ்ச்சி

"உழவன்" "Uzhavan" said...

//தமிழரசி
ஆஹா பொது நலக்கவிதை....டீ எல்லாத் தரத்தினரையும் பொதுவாக்கிய பெருமை இதைச் சேரும்.... //

பொது நலக்கவிதை :-)

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா
தேசிய பானமா ஆக்கிட்டா போச்சு !!!
நல்லா இருக்கு கவிதை//

அரசியல் சித்து வேலைகளெல்லாம் டீ பார்ட்டிலதான மேடம் நடக்குது.. நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//நையாண்டி நைனா
வாங்களேன்... ஒரு டி குடிச்சிகிட்டே பேசுவோம்... அப்படியே உங்க கவிதையையும் அலசுவோம். //

அலசுறதுதான் அலசுறீங்க தாமிரபரணித் தண்ணியில போட்டு அலசுங்க :-)

"உழவன்" "Uzhavan" said...

//S.A. நவாஸுதீன்
நல்லா இருக்கு உழவன்//

நன்றி.. எது உங்களுக்குப் பிடிக்கும்? டீயா காபியா :-)

"உழவன்" "Uzhavan" said...

//நர்சிம்
யூத்துக்கு வாழ்த்துக்கள்.
கவிதை அருமை//

வாங்க தலைவா.. உங்க மொளசு பாயிண்டர் முதன்முதால நம்ம வலையில வந்திருக்கு. வாழ்த்துக்கு நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி has left a new comment on your post "டீ ... காபி ...":
இல்லைதான், கருப்பட்டிக்கு எங்கு போவது?
ஆமாம், தேசிய பானம் ஆக்கிட வேண்டியதுதான்:)!
நல்ல கவிதை உழவன்! //

அதான.. கருப்பட்டிக்கு எங்க போறது? பனை ஏறுவதற்கு ஆள் கிடைக்காத்தால், கிராமங்களில் கூட இப்ப கருப்பட்டிக்கு தட்டுப்பாடு வந்திருச்சு.
பாராட்டுக்கு நன்றி அக்கா :-)

"உழவன்" "Uzhavan" said...

//வித்யா
நல்லாருக்கு:)//

என்னது நல்லாருக்கு? டீ யா இல்ல காபியா? நன்றி தோழி :-)

SUMAZLA/சுமஜ்லா said...

//ஸ்ட்ராங்குனு சொல்றான்..
லைட்டுனு சொல்றான்..//

ஆமாமா எப்பேர்ப்பட்ட பட்டிக்காட்டுலயும் இந்த ரெண்டு ஆங்கில வார்த்தை புழக்கத்துல இருக்கே!

கவிதை, சூடா ஒரு டீ குடிச்ச மாதிரி இருக்கு!

sakthi said...

தேனீர் விருந்து
தேசத்தின் விருந்தோ !
தேசமே குடிப்பதால் -இது
தேசிய பானமோ !!

superb ulavare

Ungalranga said...

தேனீரின் அருமையை அழகாக சொல்லி இருக்கீங்க..

எந்த மாநிலத்திலும் எளிதில் கிடைக்கும் பானம்..
தேனீர்..

அழகான நேர்த்தியான வரிகள்.. வாழ்த்துக்கள்!!

கலையரசன் said...

அருமையா எழுதுறீங்களே, அட மெய்யாலுமே!
தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!

ஓட்டும் போட்டாச்சு..

ஆ.ஞானசேகரன் said...

//விருந்தாளி வந்தாலும்
விருந்தாளியா நீ
போனாலும்
டீயோ காபியோ நிச்சயம் !
இது
யாரும் மறுக்காத சத்தியம் !//

ரசிக்கக் கூடியது

ஆ.ஞானசேகரன் said...

நன்றாக இருக்கு நண்பா

"உழவன்" "Uzhavan" said...

//SUMAZLA/சுமஜ்லா
//ஸ்ட்ராங்குனு சொல்றான்..
லைட்டுனு சொல்றான்..//
ஆமாமா எப்பேர்ப்பட்ட பட்டிக்காட்டுலயும் இந்த ரெண்டு ஆங்கில வார்த்தை புழக்கத்துல இருக்கே!
கவிதை, சூடா ஒரு டீ குடிச்ச மாதிரி இருக்கு! //

ம்ம்ம்.. அப்ப நான் நல்லா டீ போடுறேனா?? :-)

"உழவன்" "Uzhavan" said...

//sakthi
superb ulavare //

மகிழ்ச்சியும் நன்றியும் :-)

"உழவன்" "Uzhavan" said...

//ரங்கன்
தேனீரின் அருமையை அழகாக சொல்லி இருக்கீங்க..
எந்த மாநிலத்திலும் எளிதில் கிடைக்கும் பானம்..
தேனீர்..
அழகான நேர்த்தியான வரிகள்.. வாழ்த்துக்கள்!! //

ஆமாங்க எல்லா இடத்திலேயும் எளிதில் கிடைக்கககூடியது. தலைவலினாலே எல்லாரும் டீ யைத்தான தேடுறோம். நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//கலையரசன்
அருமையா எழுதுறீங்களே, அட மெய்யாலுமே!
தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!
ஓட்டும் போட்டாச்சு.. //

உங்கள் பாராட்டுக்கும், ஒட்டுக்கும் மிக்க நன்றி தோழா..

"உழவன்" "Uzhavan" said...

//ஆ.ஞானசேகரன்
நன்றாக இருக்கு நண்பா

ரசிக்கக் கூடியது //

ரசிக்கக்கூடியது அல்ல.. குடிக்கக்கூடியது :-))

குடந்தை அன்புமணி said...

கவிதை சூப்பர்(டீ)! பருவ காலத்துக்கு ஏற்றமாதிரி சுக்கு டீ, மல்லி டீ, இஞ்சி டீ கருப்பட்டி டீ... அட அடடா! எத்தைன வகை!

சொல்லரசன் said...

//விருந்தாளி வந்தாலும்
விருந்தாளியா நீ
போனாலும்
டீயோ காபியோ நிச்சயம் !//

அப்ப உங்களை பார்க்கவந்த டீ,காப்பியோடு அனுப்பிவிடுவிங்க.
கவிதை நல்ல சுவை

பிரவின்ஸ்கா said...

அருமை .
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

"உழவன்" "Uzhavan" said...

//குடந்தை அன்புமணி
கவிதை சூப்பர்(டீ)! பருவ காலத்துக்கு ஏற்றமாதிரி சுக்கு டீ, மல்லி டீ, இஞ்சி டீ கருப்பட்டி டீ... அட அடடா! எத்தைன வகை! //

பல ஃபிலேவர் டீ டேஸ்ட் பண்ணியிருகீங்க போல.. நன்றி :)

"உழவன்" "Uzhavan" said...

//சொல்லரசன்
அப்ப உங்களை பார்க்கவந்த டீ,காப்பியோடு அனுப்பிவிடுவிங்க.
கவிதை நல்ல சுவை//

டீ காபி மட்டும்தானா.. தலை வாழை இலைச் சாப்பாட்டே உண்டு :-)

"உழவன்" "Uzhavan" said...

//பிரவின்ஸ்கா
அருமை//

வங்க நண்பா.. நலமா? நம்ம கடையில் வந்து டீ குடித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

உழவன் டீ கடை என்றாலே (கவுண்டமணி, வடிவேலு, விவேக் ) காமடி சீன்கள் தான் ஞாபகம் வருது.

"உழவன்" "Uzhavan" said...

//Jaleela
உழவன் டீ கடை என்றாலே (கவுண்டமணி, வடிவேலு, விவேக் ) காமடி சீன்கள் தான் ஞாபகம் வருது. //
 
காமடி படமாத்தான் பார்ப்பீங்களோ.. மிக்க நன்றி :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்குதுங்க..:) டீபாட்டு

பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் அவர் எனர்ஜி..

"உழவன்" "Uzhavan" said...

//முத்துலெட்சுமி/muthuletchumi
நல்லா இருக்குதுங்க..:) டீபாட்டு
பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் அவர் எனர்ஜி..//

ஓ.. உங்க ஃபேவரைட் பூஸ்ட்டா.. உங்க பாராட்டும் பூஸ்ட் குடிச்ச ஒரு ஃபீலைக் குடுக்குது. மகிழ்ச்சி உங்களின் வருகைக்கு.

SUFFIX said...

கவிதை சூப்பர் 'டீ'லக்ஸ்!!

"உழவன்" "Uzhavan" said...

//ஷ‌ஃபிக்ஸ்
கவிதை சூப்பர் 'டீ'லக்ஸ்!!//
நன்றி.