ஆடி மாத
அம்மன் கோவில்
பொங்கல் விழா!
பொழைக்க வந்த
பூமி விட்டு
பொறந்த பூமிக்கு
போகுற நேரமிது!
மாலையில ஏறிய ரயிலு வண்டி
மறுநாள் காலையில இறக்கிவிட
பெத்தவ(ள்) இருக்கும்
பக்கத்து ஊருக்குப் போக
மொத்தமா நாங்க காத்திருக்க
'கரிசல் குயில்' னு ஒட்டிய ஸ்டிக்கரோடு
கலர்புல்லா வந்தது மினி பஸ்!
கொண்டு வந்த உடைமையோடு
முண்டியடிச்சு உள்ளே ஏற
வண்டிக்குள்ள இடமில்லாம
ஏணி பிடிச்சு ஏறினோம் பஸ் மேல!
ஆடிக் காத்து லேசா அடிக்க
ஆனை போல அசைஞ்சு போறோம்
ஆண்டு ஒன்னு கழிஞ்சு போச்சு
ஆத்தா அப்பன பார்க்கப் போறோம்!
பனையோலைச் சத்தம் கேக்கும்போது
பதநீ குடிச்ச ஞாபகம்
சுடுகாடு வரும்போது
சுருக்குப்பை காசு தந்த
சுப்பம்மா பாட்டி ஞாபகம்
ஊருணி வந்திருச்சு
ஊருவாசம் அடிச்சிருச்சு
ஊரு எல்லை அய்யனாரை
உள்ளுக்குள்ள வணங்கியாச்சு!
ஆயிரம் நினைவுகள்
அரை நொடியில் வந்து போனாலும்
அவ நெனப்பு மட்டும்
அடி மனசுல தங்கிருச்சு!
அம்மனுக்குப் பொங்கல் வைக்க
எம்புள்ள வந்துட்டான்னு
பெத்தவ(ள்) அவ நினைக்க
ஏனிங்கு வந்தேன்னு
எனக்குத் தான தெரியும்!
போன வருஷப் பொங்கலுக்கு
மஞ்சத் தண்ணி ஊத்தி நனைச்சா
எம் மனசை ஈரமாக்கி
ஒரு வருஷமா தவிக்க வைச்சா!
நாளைக்கும் நீ ஊத்தனும்னு
மனசு கெடந்து தவிக்குது
உன் மஞ்சளுக்கு
என் சட்டை கெடந்து ஏங்குது!
உழவன்
நன்றி: யூத்ஃபுல் விகடன்
Wednesday, June 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
31 comments:
அழகான நடை.
//அம்மனுக்குப் பொங்கல் வைக்க
எம்புள்ள வந்துட்டான்னு//
அய்யோ பாவம் ஆத்தா:)!
அருமையான கவிதை உழவன்.
அருமை!
நாணயம் விகடன், அவள் விகடன் மாதிரி நன்றி விகடன் புதுசா இருக்கே!
பதிவுகள்...
//நாளைக்கும் நீ ஊத்தனும்னு
மனசு கெடந்து தவிக்குது
உன் மஞ்சளுக்கு
என் சட்டை கெடந்து ஏங்குது!
//
ரொம்ப நல்லா இருக்கு நண்பா
நல்லாயிருக்கு தல..,
அருமை
வாழ்த்துகள்
அருமையான கவிதை உழவன்...;-))
அருமையான கவிதை உழவன்...;-))
//ராமலக்ஷ்மி
அழகான நடை.
//அம்மனுக்குப் பொங்கல் வைக்க
எம்புள்ள வந்துட்டான்னு//
அய்யோ பாவம் ஆத்தா:)!
அருமையான கவிதை உழவன். //
தாங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கு மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள்.
//பழமைபேசி
அருமை!//
நன்றி தோழா..
//நாமக்கல் சிபி
நாணயம் விகடன், அவள் விகடன் மாதிரி நன்றி விகடன் புதுசா இருக்கே! //
:-) நன்றி
//மயாதி
பதிவுகள்... //
என்ன சொல்றீங்கனு தெரியல? அது சரி கவிதையை எங்கேனு கேக்குறீங்களா?
//ஆ.ஞானசேகரன்
//நாளைக்கும் நீ ஊத்தனும்னு
மனசு கெடந்து தவிக்குது
உன் மஞ்சளுக்கு
என் சட்டை கெடந்து ஏங்குது!
//
ரொம்ப நல்லா இருக்கு நண்பா //
உங்களின் தொடர் வருகைக்கு மகிழ்ச்சி தோழரே..
//SUREஷ் (பழனியிலிருந்து)
நல்லாயிருக்கு தல.., //
தங்களின் முதல வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் பல.
//திகழ்மிளிர்
அருமை
வாழ்த்துகள்//
ரொம்ப நன்றி தலைவா!
//கார்த்திகைப் பாண்டியன்
அருமையான கவிதை உழவன்...;-)) //
ரொம்ப நன்றி நண்பா.. அலைபேசியின் மூலம் தாங்கள் அளித்த ஆலோசனைக்கு மிக்க நன்றி.. இனிமேல் தவறாது எனக்கு ஒரு ஓட்டும் போட்டுருங்க :-)
கவிதையே அருமையான பதிவு என்றேன்...
அருமை
உழவன் வாழ்த்துக்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
முதலில் வாழ்த்துக்கள் பா.....
எங்களயும் திருவிழாக்கு கூட்டிட்டு போன நிறைவு....
மஞ்சள் தண்ணி ஊத்தி மனசு நனைந்தது....ரொம்ப நல்லாயிருக்கு.....
கிராமத்து சூழல் மணம் எல்லாம் குடியிருந்தது இந்த கவியில்.....
என்னோட எல்லாமே இங்கு கேள்விகள் தான் அதுவும் விகடனில் வந்துள்ளதுப்பா.....
//மயாதி
கவிதையே அருமையான பதிவு என்றேன்... //
மிக்க நன்றி.
//அமுதா
அருமை//
வணக்கம். எதிர்பாராத உங்களின் பின்னூட்டம் மகிழ்வைத் தருகிறது. தொடர்ந்து வாருங்களேன்
//"அகநாழிகை"
உழவன் வாழ்த்துக்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்//
மகிழ்ச்சியும் நன்றியும்!
//தமிழரசி
முதலில் வாழ்த்துக்கள் பா.....
எங்களயும் திருவிழாக்கு கூட்டிட்டு போன நிறைவு....
மஞ்சள் தண்ணி ஊத்தி மனசு நனைந்தது....ரொம்ப நல்லாயிருக்கு.....
கிராமத்து சூழல் மணம் எல்லாம் குடியிருந்தது இந்த கவியில்.....
என்னோட எல்லாமே இங்கு கேள்விகள் தான் அதுவும் விகடனில் வந்துள்ளதுப்பா..... //
மஞ்சள் தண்ணியில் உங்களின் மனசும் நனைந்தது கண்டு ரொம்ப மகிழ்ச்சி தமிழ்.
இளமை விகடனைக் குத்தகைக்கு எடுத்துவிட்டீர்கள் போல :-).. வாழ்த்துக்கள். போட்டுத்தாக்குங்க
அருமையாக இருக்கிறது .
வாழ்த்துக்கள்.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
அழகா எழுதியிருக்கீங்க உழவன்.
ரொம்ப நல்லா இருக்கு.
அண்ணே... அடி தூள்....ணே
//அருமையாக இருக்கிறது .
வாழ்த்துக்கள்.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா//
நன்றி பிரவின்ஸ்கா
//அமிர்தவர்ஷினி அம்மா
அழகா எழுதியிருக்கீங்க உழவன்.
ரொம்ப நல்லா இருக்கு//
உங்க பாராட்டுக்கு நன்றி.
//நையாண்டி நைனா
அண்ணே... அடி தூள்....ணே//
நைனா.. என்ன இந்தப்பக்கம்.. அடிக்கடி வாங்கப்பா :-)
Post a Comment