Wednesday, May 6, 2009

மண்குதிரையில் பட்டாம்பூச்சி


பதிவுலகப் பாசத்தங்கங்களே... வலையுலக வாக்காளச் சிங்கங்களே... பதிவுகளால் பலரது மனங்களில் பதிவை ஏற்படுத்தும் எனதினிய பதிவர்களே... கடந்த மாதம் நண்பர் சொல்லரசன் அவர்கள் என் வலைபூவில் ஒரு பட்டாம்பூச்சியை விட்டு, என் வலைப்பூவை அழகுபடுத்தியிருந்தார். அவருக்கு மீண்டுமொருமுறை இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பட்டாம்பூச்சியோடு விளையாடிய நாட்களை மறந்திருந்த வேளையில், அதனைப் பிடித்தும், பறக்கவிட்டும் விளையாடக் கிடைத்த வாய்ப்போ இது! வந்தமர்ந்த ஒரு பட்டாம்பூச்சியை மூன்றாக்கி, நமக்கு மட்டுமல்லாது பலராலும் தொடரப்பட்டும், பாராட்டப்பட்டும் புகழ்மாலை சூட்டிக்கொண்டிருக்கும் வலைப்பூக்களுக்குள் இந்த வண்ணத்திப்பூச்சியை பறக்கவிடவேண்டுமாம். இது நியூட்டனின் எந்த விதியோ தெரியவில்லை :-)

நான் தொடர்ந்து படிக்கும் பெரும்பான்மையான வலைப்பூக்களனைத்துமே ஏற்கனே இந்த பட்டாம்பூச்சி விருதால் கொளரவிக்கப்பட்டவைகளே. யாருக்கு இதனைக் கொடுத்துக் கொளரவிப்பது என்று முழித்துக் கொண்டிருந்தபோதுதான், என் மனம் கவர்ந்த ஒருவரின் பதிவு இன்னமும் பட்டாம்பூச்சியில்லாமலிருப்பதைக் கண்டேன். இவருக்குக் கொடுக்கக்கூடிய ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறதே என்பதையறிந்து அகமகிழ்ந்தேன்.

மூன்று பட்டாம்பூச்சிகளில் முதல் பட்டாம்பூச்சியை மண்குதிரையில் அமரவைப்பதில் மகிழ்கிறேன். இவரின் கவிதைகளைப் படிக்கும்போது, மண்குதிரை பொன்குதிரையாகவே காட்சியளிப்பதை உணரலாம். அவரது எழுத்துக்கள் அவருக்கு மேலும்மேலும் புகழ்சேர்க்க எனது இனிய வாழ்த்துக்கள்!

அடுத்த இரண்டு பட்டாம்பூச்சிகள் விரைவில் உலாவரும்...

அன்புடன்,
உழவன்

4 comments:

மண்குதிரை said...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பரே பெற்றுக்கொண்டேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்களுக்கும் மன்குதிரைக்கும் வாழ்த்துக்கள்.. சீக்கிரமா பாக்கி ரெண்டு பேரு யாருன்னு சொல்லுங்கப்பா..

"உழவன்" "Uzhavan" said...

@கார்த்திகைப் பாண்டியன்
சீக்கிரமா பாக்கி ரெண்டு பேரு யாருன்னு சொல்லுங்கப்பா//

சொல்லிருவோம் அண்ணாத்த.. :-) சொந்தமா வீட்டுல எனக்கு PC கூட இல்லை தலைவா.. ஆபீஸ் பிசி ல தான் நம்ம எல்லா வேலையையும் செய்யவேண்டிருக்கு.. அதனாலதான் லேட்டாகுது..

சொல்லரசன் said...

வாழ்த்துகள் நண்பா,மண்குதிரைக்கும் எனது வாழ்த்துகள்.