பார்ட்டி.. பார்ட்டி.. பார்ட்டி. எதற்கெடுத்தாலும் பார்ட்டி. கல்யாணமானாலும் பார்ட்டி கருமாதியானாலும் பார்ட்டி. காலையில் தேநீர்க் கடைகள் திறப்பதற்கு முன்பாகவே, மதுக்கடைகள் திறக்கப்படும் நிலையில் நாடு இப்போது உள்ளது மிகவும் வேதனையான ஒன்றுதான். ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிகரித்துக்கொண்டே போவதும் யாவருமறிந்ததே.
அத்தி பூத்தாற்போல, எப்போதாவது நண்பர்களோடு சிறிதளவு மது அருந்தி வாழ்க்கையை அனுபவிப்பவர்களும் உண்டு; இப்போது குடித்தே ஆகவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, தினமும் மட்டையாகும் அளவிற்கு குடித்தே அழிபவர்களும் உண்டு. இவர்களால்தான் குடும்பமே நிம்மதியிழந்து, பொருளாதாரத்தில் சீர்குலைந்து நடுத்தெருவிற்கே வந்துவிடும் நிலையும் ஏற்படுவதுண்டு.
ஏதோ ஒரு சில காரணங்களுக்காக குடிக்க ஆரம்பித்து, நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, அதிலிருந்து மீளவேண்டும் என்ற எண்ணம் இருந்தும் மீளமுடியாமல் இருப்பவர்கள், குடிப்பழக்கத்தைக் கைவிடுவதெப்படி?
இவர்களின் குடிப்பழக்கத்தைப் போக்குவதற்காக தங்களுடைய அனுபவங்களையும், ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள் குடிப்பழக்கத்தை அறவே அகற்றிய "முன்னாள் குடிகாரர்கள்".
ஒருகாலத்தில் முழுநேரக் குடிகாரர்களாக இருந்து, இப்போது முழுமையாக குடிப்பழக்கத்திலிருந்து வெளிவந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்புதான் "ALCOHOLICS ANONYMOUS". இவர்களின் "Public Information Meeting" ஆனது வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

அமைப்பு தொடங்கிய மூன்றாவது ஆண்டில், மூன்றாவது முறையாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக இதன் அமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள " முனைவர் எம்.ரமணிசுகுமார் " அவர்களிடம் பேசுகையில், குடிப்பழக்கமுள்ளவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டாலே, நாமும் இப்பழக்கத்தைக் கைவிடவேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.
இச்செய்தியை மக்களிடம் பரப்புவோம். அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட உதவுவோம்.
மதுவினால் அழிவோரைத் தடுப்போம்! போதையிலிருந்து நாட்டை மீட்போம்!!
அன்புடன்
உழவன்
tamil.uzhavan@gmail.com

34 comments:
நல்ல செய்தி! நல்ல பதிவு! நிச்சயம் மக்களிடம் இச்செய்தியை பரப்புவோம்.
உங்களின் இந்தப் பதிவுக்குஎன் வலையில் இணைப்பு கொடுத்தாயிற்று...
நல்ல செய்தி!!
கடைகள் மூடும் காலம் வராதோ!
பார்ட்டி.. பார்ட்டி.. பார்ட்டி. எதற்கெடுத்தாலும் பார்ட்டி. கல்யாணமானாலும் பார்ட்டி கருமாதியானாலும் பார்ட்டி. ///
பார்ட்டி!! பார்ட்டி நல்ல பார்ட்டிதான்!!
நல்ல செய்தியுடன் நல்ல பதிவு..
நன்று பாராட்டுகள்
மதுவினால் அழிவோரைத் தடுப்போம்! போதையிலிருந்து நாட்டை மீட்போம்!!
அரசே மதுக்கடை நடத்தும்போது இந்த கோரிக்கை எடுபடுமா?
நல்ல பதிவு உழவன்!
பலர் குடியைக் கெடுக்கும் குடியைப் பற்றி வல்லிம்மா அவர்களின் [தொடர்]கதையின் நிறைவுப் பாகம்:
http://naachiyaar.blogspot.com/2009/05/blog-post_20.html
உழவன், மது எத்தனையோ வீடுகளில் அவலங்களை நிறைவேற்றி வருகிறது.
இதில் ஆ.அ.வின் தொண்டு சிறப்பானது.
1930 லிருந்து இயங்குகிறார்கள் அல்லவா.
இதுவே அவர்களுக்கு ஒரு கடவுள், மதம் என்று ஆகிவிடுகிறது.
நல்வழியில் எல்லோரும் .இணைந்து மது அரக்கனை விரட்டட்டும்.
நன்றி.
பயனுள்ள பதிவு...பரப்பவேண்டிய பதிவும் கூட....உண்மையை உரைக்கும் அளவு சொல்லியிருக்கீங்க....
@குடந்தை அன்புமணி
//நல்ல செய்தி! நல்ல பதிவு! நிச்சயம் மக்களிடம் இச்செய்தியை பரப்புவோம்//
//உங்களின் இந்தப் பதிவுக்குஎன் வலையில் இணைப்பு கொடுத்தாயிற்று...//
மிக்க மகிழ்ச்சி நண்பரே. இதுபோல் இன்னும் பல பதிவுலக தோழர்களும் தோழிகளும் இச்செய்தியை மக்களிடம் கொண்டுசேர்க்க முயல்வீராக. முடிந்தால் இந்நிகழ்ச்சியில் பதிவர்கள் கலந்துகொண்டு, கலந்துரையாடலில் ஈடுபட்டு, அதனைப்பற்றிய கருத்துக்களைப் பதிவிட முயலாம்.
நன்றி
உழவன்
@thevanmayam
நல்ல செய்தி!!
கடைகள் மூடும் காலம் வராதோ! //
நிச்சயம் வரும் தோழரே.. நாம் தான் வரவைக்கவேண்டும். நன்றி
@thevanmayam
//பார்ட்டி.. பார்ட்டி.. பார்ட்டி. எதற்கெடுத்தாலும் பார்ட்டி. கல்யாணமானாலும் பார்ட்டி கருமாதியானாலும் பார்ட்டி. ///
பார்ட்டி!! பார்ட்டி நல்ல பார்ட்டிதான்!!//
ஆமா நண்பரே.. இப்ப எதற்கெடுத்தாலும் பார்ட்டி கேட்கிற நிலைமை வந்திருச்சு. புது ட்ரெஸ் எடுத்தாக்கூட பார்ட்டி கேக்குறாங்க :-)
@ஆ.ஞானசேகரன்
//நல்ல செய்தியுடன் நல்ல பதிவு..
நன்று பாராட்டுகள்//
மகிழ்ச்சி.
@சொல்லரசன்
//பயனுள்ள பதிவு//
பத்து பேராவாது இதன்மூலம் பயனடைந்தால்தான் நண்பரே இது பயனுள்ளதாக இருக்கும் :-)
@சொல்லரசன்
//மதுவினால் அழிவோரைத் தடுப்போம்! போதையிலிருந்து நாட்டை மீட்போம்!!
அரசே மதுக்கடை நடத்தும்போது இந்த கோரிக்கை எடுபடுமா?//
எடுபடவைக்க வேண்டியதுதான். முதலில் டாஸ்மார்க் கடைக்கு செல்லுவோரின் எண்ணிக்கையை குறைக்க முயலுவோம்
@ராமலக்ஷ்மி
//நல்ல பதிவு உழவன்! //
நன்றி மேடம் :-)
@ராமலக்ஷ்மி
//பலர் குடியைக் கெடுக்கும் குடியைப் பற்றி வல்லிம்மா அவர்களின் [தொடர்]கதையின் நிறைவுப் பாகம்:
http://naachiyaar.blogspot.com/2009/05/blog-post_20.html //
இப்பதிவை நிச்சயம் படிக்கிறேன். தகவலுக்கு நன்றி
@வல்லிசிம்ஹன்
//உழவன், மது எத்தனையோ வீடுகளில் அவலங்களை நிறைவேற்றி வருகிறது.
இதில் ஆ.அ.வின் தொண்டு சிறப்பானது.
1930 லிருந்து இயங்குகிறார்கள் அல்லவா.
இதுவே அவர்களுக்கு ஒரு கடவுள், மதம் என்று ஆகிவிடுகிறது.
நல்வழியில் எல்லோரும் .இணைந்து மது அரக்கனை விரட்டட்டும்.
நன்றி.//
முடிந்தவரை மது அரக்கனை விரட்ட முயலுவோம் வல்லிமா அவர்களே. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@தமிழரசி
//பயனுள்ள பதிவு...பரப்பவேண்டிய பதிவும் கூட....உண்மையை உரைக்கும் அளவு சொல்லியிருக்கீங்க.... //
நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை என் தளத்தில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழி
நல்ல செய்தி! நல்ல பதிவு! நிச்சயம் மக்களிடம் இச்செய்தியை பரப்புவோம்.
நல்லதொரு பகிர்வு உழவன்
ம்ஹூம், போனவருஷம் இல்லனா குறைந்தபட்சம் ஜனவரி முதல் வாரம் கொடுத்திருந்தா கூட எனக்கு உபயோகப்பட்டிருக்கும்.
என் மாமா இந்த பாழும் குடியால தான் ஜனவரி 19 அன்றுதான் இறந்தார்.
அவரின் குடிப்பழக்கத்தால் நாங்கள் பட்ட வேதனை சொல்லி மாளாது.
very good.
Please have a look at my blog at
http://www.bharathinagendra.blogspot.com whenever you find time.
@கார்த்திகைப் பாண்டியன்
//நல்ல செய்தி! நல்ல பதிவு! நிச்சயம் மக்களிடம் இச்செய்தியை பரப்புவோம்.//
பரப்புங்கள் நண்பர்களே...
@அமிர்தவர்ஷினி அம்மா
ஐயோ..மதுவிற்கு ஒரு உயிரையே பலி கொடுத்திருக்கிறீர்கள். மிகவும் வேதனையாக உள்ளது. இதிலிருந்து சமூகத்தைக் காக்கவேண்டும் அமிமா..
குடிப்பவர்கள் அனைவருக்குமே இதன் கேடுகள் நன்கு தெரியும். இருந்தாலும் அதிலிருந்து வெளிவர முடியாது இருப்பதுதான் வேதனையான ஒன்று.
இச்செய்தியை பலருக்கும் தெரியச்செய்யுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
@Nagendra Bharathi
//very good.
Please have a look at my blog at
http://www.bharathinagendra.blogspot.com whenever you find time//
நன்றி. நிச்சயம் உங்கள் தளத்தைப் பார்க்கிறேன்
நம் நாட்டில் நிறைய பேர்களிடம் இந்த குடி பழக்கம் இருக்கிறது.
பார்ட்டி.. பார்ட்டி.. பார்ட்டி. எதற்கெடுத்தாலும் பார்ட்டி. கல்யாணமானாலும் பார்ட்டி கருமாதியானாலும் பார்ட்டி. ///
ஆனால் இந்த மது அவர்கள் உயிரை குடிப்பது மட்டும் அல்லாமல் அந்த குடும்பத்தையே நிலைகுலைய செய்கிறது.
இதை எல்லோரும் படித்து செயல்படவேண்டும்
நல்ல கருத்து சொன்னதற்கு நன்றி.....

//மது அவர்கள் உயிரை குடிப்பது மட்டும் அல்லாமல் அந்த குடும்பத்தையே நிலைகுலைய செய்கிறது.
இதை எல்லோரும் படித்து செயல்படவேண்டும்
நல்ல கருத்து சொன்னதற்கு நன்றி.....//
repeatey!
very useful information. Please keep it up.
@மோனிபுவன் அம்மா
//நல்ல கருத்து சொன்னதற்கு நன்றி..... //
நன்றி மேடம். உங்களுக்குத் தெரிந்த யாரேனும் மதுப்பழக்கத்திற்கு உட்பட்டிருந்தால், இத்தகவலைத் தெரிவியுங்கள்
@சென்ஷி
முதல் வருகைக்கு மகிழ்ச்சி. நன்றி
@Nagendra Bharathi
//very useful information. Please keep it up. //
Thx a lot dear friend. Please spread this msg
எனது பதிவுகளிலேயே, இப்பதிவிற்குத்தான் அதிகமான பின்னூட்டங்கள் கிடைத்துள்ளன என்பதை அறியும்போது, இதுபோன்ற சமூக மேம்பாட்டுக்கான செயல்களில், பதிவர்கள் அதிக ஆர்வமாக உள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. மகிழ்ச்சி.
இந்த "ALCOHOLICS ANONYMOUS" அமைப்பு நடத்தும் "Public Information Meeting"ல் பங்குபெரும் முனைவர் எம்.ரமணிசுகுமார் அவர்கள் எனது நெருங்கிய நண்பராவார். அவர் ஒரு மிகச் சிறந்த உளவியல் நிபுனர். ஆதலால், இது சம்பந்தமாக யாருக்கேனும் எந்த உதவியும் தேவைப்பட்டால் எனது மின்னஞ்சலுக்குத் தொடர்புகொள்ளுங்கள். என்னால் முடிந்ததை நிச்சயமாகச் செய்கிறேன்.
அனைவருக்கும் நன்றி!
உழவன்
Post a Comment