Wednesday, July 20, 2016

ஒரு கொலை இரு கொலையாளி


ஒரு கொலை செய்தல்
அவ்வளவு எளிது.
அக்கொலையைப்
பார்த்தும் பாராததுபோல்
கடப்பது அதனைவிட எளிது.

கொலைக் கத்தியின் கூர்நுனி
தன் வயிற்றையும் கிழித்துவிடும்
என்கிற பயத்தைவிடவும்
இந்த ரயிலை விட்டுவிட்டால்
அலுவலகத்திற்கு அரைமணிநேரம்
தாமதமாகிவிடுமே என்கிற
பயத்தை நினைக்கும்போது
பார்த்தும் பாராததுபோல்
கடப்பது அதனைவிட எளிதே.


- உழவன்

1 comment:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை....
வலி இருந்தாலும் இன்றைய நிலமையில் எல்லாரும் அப்படித்தானே...