Monday, May 14, 2012

"காதல் இயக்குநர்" - இது தேவையா?




வழக்கு எண் 18/9 படம் பார்த்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. மசாலா படங்களுக்கு மத்தியில், இப்படி ஒரு படம் வந்திருப்பது தமிழ் சினிமாவிற்குப் பெருமைதான்.

இப்படிப்பட்ட படத்தை எடுத்துவிட்டு, இது ஓடுமா ஓடாதா என்ற சந்தேகம் இயக்குநருக்கு எப்படி வந்தது எனத் தெரியவில்லை. அப்படி ஒரு சந்தேகம் வந்ததினால்தான், "காதல் இயக்குநர்" பாலாஜி சக்திவேலின் "வழக்கு எண் 18/9" என்று விளம்பரம் போடுகிறார்கள். இப்படி விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

"நல்ல படத்தில் யார் நடித்தாலென்ன? யார் இயக்கினாலென்ன? யார் தயாரித்தாலென்ன? இதுவும் ஒரு நல்ல திரைப்படம்" என்று மட்டும் டைட்டில் கார்டு போட்டுவிட்டு, யாருடைய பெயரையும் போடாமல், நேரடியாக படத்திற்குள் வந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. இப்படி போடுகின்ற தைரியம் வந்திருக்கவேண்டும். இனிமேலாவது யாருக்காவது வருகிறதா எனப் பார்க்கலாம்.

கோவை யமுனா திரையரங்கில் அரங்கு நிறையாத காட்சியில்தான் பார்த்தேன். ஆனால் படம் பார்த்து முடித்தபின்பு மனம் நிறைந்திருந்தது.

வழக்கு எண் - நம்பர் 1

உழவன்

5 comments:

ராமலக்ஷ்மி said...

/கோவை யமுனா திரையரங்கில் அரங்கு நிறையாத காட்சியில்தான் பார்த்தேன். ஆனால் படம் பார்த்து முடித்தபின்பு மனம் நிறைந்திருந்தது./

அழகான இவ்வரிகள் அரங்குகளை நிறைய வைக்கட்டுமாக!

'பரிவை' சே.குமார் said...

அடுமையான படம்...

Anonymous said...

aama neenga oru dappa pathivu eluthittu unga padathayae podum pothu, oru vetri padaththa kastapattu eduththavaru peyara potta ennavam...?

செய்தாலி said...

நல்ல படம் சார்
கண்டிப்பா பார்க்கணும்

Anandhan Rajaraman said...

தமிழ் கவிதைகள் மற்றும் உலகம் தோன்றியது முதல் இன்று வரை நடந்த வரலாற்று சுவடுகளை அறிந்திட நம்ப ப்ளாக் வாங்க http://tamilkavithais.blogspot.in/