Friday, January 6, 2012

தலைப்பு வைக்கமுடியாதது

இந்த இடத்தை வெறும் இருபதாயிரம் ரூபாய்க்கு ஒருத்தன் கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கான்; ஒரு இருபதாயிரம் இல்லாம வாங்காம விட்டிருக்கிறார். லூசு அப்பா.. இப்ப அந்த இடத்தோட மதிப்பு 25 லட்சம். இப்படி இப்ப நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

இந்த இடத்தை வெறும் இருபத்தைந்து லட்சத்துக்குஒருத்தன் கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கான்; ஒரு இருபத்தைந்து லட்சம் இல்லாம வாங்காம விட்டிருக்கிறார். லூசு அப்பா.. இப்ப அந்த இடத்தோட மதிப்பு 25 கோடி. இப்படி நாளைக்கு என் புள்ளை சொல்லும்.

***

டிபன் கேரியரில் கொண்டு வந்த சாப்பாட்டை முழுவதும் சாப்பிடமுடியாததால், சிறிது சாப்பாட்டை அப்படியே கேரியரில் வைத்து மூடினார் நண்பரொருவர். அருகிலிருந்த இன்னொரு நண்பர், "அதை அள்ளிப்போட்டு கழுவ வேண்டியதானே; சாய்ந்திரம் வீட்டுக்குப் போவதற்குள் கெட்டுப்போகுமே" என்றார். அதற்கு அவர், "கெட்டுப்போனா என்ன. நாய்க்குப் போடவேண்டியதுதான்" என்றார். அப்போதுதான் எனக்கு எப்போதோ படித்தது நினைவிற்கு வந்தது "சாப்பாடு நாறிய பின்புதான் நமக்கு நாய் நினைவே வருகிறது"

***

சென்னையைச் சுற்றிலும் எங்கு ப்ளாட் போட்டு யார் விற்றாலும் எனக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும். யாராவது அவர்களிடம் போய் நான் இப்போது சென்னையில் இல்லை எனச் சொல்லுங்களேன்; உங்களுக்குப் புண்ணியமா போகும் :-)

6 comments:

ராமலக்ஷ்மி said...

முகப்புத்தகப் பகிர்வுகளை தொகுத்து வழங்கும்படி ரொம்ப காலமாகக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்:)! நல்ல ஆரம்பம். ஒவ்வொரு வாரமும் வரட்டும்!

Prabu Krishna said...

ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க. முகப்புத்தக பகிர்வுகளா இவை? ம்‌ம் அடிக்கடி வலைப்பூவிலும் பதிவாக இடவும்.

நம்பிக்கைபாண்டியன் said...

நன்றாக இருக்கிறது! உங்கள் பதிவுகள் அனைத்தும்!

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html