நேற்று திருமணத்திற்குச் சென்றிருந்தேன்.
எனக்கு அழைப்பு வராது
என்றுதான் நினைத்திருந்தேன்.
சாடைமாடையாயாவது சொல்லியிருக்கலாம்
சம்பிரதாயத்துக்காகத்தான் அழைக்கப்பட்டதை.
மணமேடையிலேறி பரிசுப்பொருளைக் கொடுக்க இயலவில்லை
மண்டப வாசலிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
பிரித்துப் பார்க்கவேண்டும் என்பதற்காக
என் பெயரைக்கூட அதில் எழுதவில்லை.
எப்படியும் அவளின் கைக்குச் சென்றிருக்கும்
பிரித்தும் பார்த்திருக்கக்கூடும்;
என் பெயரைப் பரிசுப் பொருளும் சொல்லியிருக்கும்.
இருப்பினும்
இது யாருடையது எனத் தெரியவில்லையே
என்பதுதான் அங்கு பதிலாக இருக்கும்
ஆனாலும் இதனைத் தூக்கியெறிய இயலாது.
அது காஸ்ட்லியானதும் கூட.
உழவன்
9 comments:
அருமையான கவிதை.
கடைசியில் வைத்த பஞ்ச்..
//ஆனாலும் இதனைத் தூக்கியெறிய இயலாது. அது காஸ்ட்லியானதும் கூட.//
நச்:)!
வசன கவிதையில் வலிகளோடு கூடிய நினைவுகளத் தத்ரூபமான பரிசுப் பொருள் ஐடியா மூலம் விழி நிமிர்த்தி வியக்கும் வண்ணம் படைத்துள்ளீர்கள்.
நல்ல கவிதை..! 'இது யாருடையதுன்னு தெரியலியே' என்ற பொய் சொல்வதை கணித்தது வலி சேர்க்கிறது..!
-
DREAMER
என்னமோ போங்க உழவன்.. எதெதோ ஞாபகம் வருது...
ரொம்ப பிடிச்சிருக்கு இயல்பை படம் பிடித்ததாய்... ராமலஷ்மி பாலாசி கருத்தையும் ரீப்பீட்டு...
நினைவுகளை
பகிர்வதும்
நினைப்பதும்
இப்படிதானோ...
விசித்திரமாய் வழங்கப்பட்ட
விலைமதிப்பில்லாப் பரிசின் வழியே
விதிக்கப்படுகிறதோ ஒரு
விநோத தண்டனை?
கவிதை யதார்த்தம் உணர்த்துகிறது.
@ராமலக்ஷ்மி
@நிரூபன்
@DREAMER
@க.பாலாசி
@தமிழரசி
@கதிரவன்
@கீதா
அனைவருக்கும் அன்பும் நன்றியும்..
Post a Comment