மெயின் ரோட்டின் இடப்புறம்
விதவிதமான ஸ்டைலில் இருந்த
திருமண வாழ்த்து ப்ளெக்ஸ் போர்டில்,
மாப்பிள்ளையைவிட அஜித்
அழகாக சிரித்துக்கொண்டிருந்தார்.
அதனருகிலேயே வைக்கப்பட்டிருந்த
இன்னொரு போர்டில்
விஜய் தன் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டிருந்தார்.
இவைகளுக்கு எதிர்ப்பக்கமாய்
பெரிதான ப்ளெக்ஸ் போர்டு ஒன்றைக்
கட்டிக்கொண்டிருந்தார்கள்.
கண்ணீர் அஞ்சலி என எழுதியிருந்தது.
என்ன இதில் விஜய் படமோ
அஜித் படமோ இல்லை.
உழவன்
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
இன்று நாடே இப்படித்தான் ஆகிவிட்டாது...
உண்மையும் கூட...
மகிழ்ச்சியில் வருபவர் யாரும் துக்கத்தில் வருவதில்லை...
கவிதை அருமை..
நல்ல கவிதை.
அருமை ...........
ஊரில் நடப்பதை, அப்படியே படம் பிடித்து காட்டும் கவிதை.
சில நேரம் பிளக்ஸ் போர்டை பார்த்தால் யாருக்கு கல்யாணம் என்பது தெரிய முடிவதில்லை.
.
:) நல்லாருக்கு எதார்த்தமா..
@ கவிதை வீதி # சௌந்தர்
@ ராமலக்ஷ்மி
@ பலே பிரபு
@ Chitra
@ Rathnavel
@ விக்னேஷ்வரி
அனைவருக்கும் நன்றி.
போஸ்டர் கலாச்சாரம், இப்ப ஃப்ளக்ஸ் போர்டா முன்னேறியிருக்கு. :-((((
அருமை
மகிழ்வுக்கு தானே கலைஞர்கள்ன்னு இருக்குமோ..
அப்புறம் இவனுங்க கல்யானத்துக்கு அவங்க அப்பா அம்மா போட்டோதானே நியாமா போடனும்
@ ச.முத்துவேல்
@ ஹுஸைனம்மா
@ ஆ.ஞானசேகரன்
@ D.R.Ashok
அனைவருக்கும் நன்றி:-)
Post a Comment