படம் இணையத்திலிருந்து...
தமிழகத்தின் மூன்றாவது மிகப் பெரும் கட்சியின் தலைவராக உருவெடுத்துள்ள விஜயகாந்த்தின் வளர்ச்சி மிகப்பெரியது. காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் இருந்தாலும் அவைகளால் தமிழகத்தின் அனைத்துத் தொகுதியிலும் தனித்து நின்று தேமுதிக வாங்கும் வாக்குகளின் அளவைக்கூட நிச்சயம் வாங்க இயலாது. அதுமட்டுமல்லாது பாமகவால் ஒரு குறிப்பிட்ட தொகுதிகளைத்தாண்டி மற்ற தொகுதிகளில் ஒரு ஓட்டுக்கூட வாங்க இயலாது. அந்த வகையில் திமுக மற்றும் அதிமுகவிற்கு அடுத்தபடியாக தேமுதிகதான் உருவெடுத்துள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே.
எனது பள்ளிக்காலத்தில், நிறைய நண்பர்கள் விஜயகாந்த் ரசிகர்களாகத்தான் இருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து நிறைய விஜயகாந்த் படங்கள் பார்த்ததால் நானும் விஜயகாந்தின் படங்களை விரும்பிப் பார்க்ககூடியவனாக இருந்தேன். பத்தாம் வகுப்பு படித்தபோது சின்னக்கவுண்டர் வந்ததாக நினைவு. அப்பொழுதெல்லாம் கல்யாணம், சடங்கு, கிரகபிரவேசம் இப்படி என்ன விஷேசமாக இருந்தாலும் வீட்டின் முன்னால் டிவி, டெக் வாடகைக்கு எடுத்து படம் போடுவதுண்டு. அப்போதெல்லாம் விஜயகாந்த் படங்கள் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். விஜயகாந்தின் அறிமுகக் காட்சியில் தேங்காய் உடைத்து சூடமேற்றியவரெல்லாம் இருக்கிறார்கள். எனக்கும் அவரின் படங்கள் பிடித்துப் போய், விஜயகாந்த் உருவம் பொறித்த டிஷர்ட் எல்லாம் வாங்கியிருக்கிறேன். (இப்போது அவரின் படங்களைப் பார்ப்பதில்லை; போஸ்டரைக் கூட:-)
பள்ளிப் படிப்பு முடித்துக் கல்லூரிக்குச் சென்றபின்புதான், ஜாதிப்பற்று/வெறி பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். கல்லூரி ஜாதிகளால் பிளவுபட்டுக்கிடந்தது. ஒருவன் யார் ரசிகனாக இருக்கிறானோ, அதை வைத்தே அவனின் ஜாதியைத் தெரிந்துகொள்ளலாம். அந்தக் காலகட்டத்தில்தான், எனது தெருக்களைச் சுற்றி இருந்த பெரும்பான்மையான நண்பர்கள் ஏன் விஜயகாந்த் ரசிகர்களாக இருந்தார்கள் என்பது புரிந்தது. இப்போதும் நாயுடு/நாயக்கர்கள் விஜயகாந்த் ரசிகர்களாத்தான் உள்ளார்கள்.
வைகோ தனியாகக் கட்சி ஆரம்பித்த பின்பு அவரின் ஜாதிக்காரர்கள் அனைவருமே வைகோவிற்குத்தான் ஆதரவாக இருந்தார்கள். எனது தொகுதியான விளாத்திகுளம் தொகுதியில் ரெட்டியார்கள்தான் அதிகம். அதற்கடுத்தபடியாக நாயக்கர்கள் இருக்கிறார்கள். விளாத்திகுளம் தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் பெரும்பாலும் ரெட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். 1996ல் நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளரான ரவிசங்கரை (சமீபத்தில் சென்னையில் வருமான வரி அதிகாரிபோல் நடித்து திருட முயலும்போது, பொதுமக்களால் பிடிபட்டு அடிபட்டு போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டவர்) எதிர்த்து வைகோ போட்டியிட்டார். (அப்போது நான் அதிமுகவிற்காக மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியிருந்தேன். சாப்பாடு போக தினம் ரூ100 கிடைத்தது என்பது தனிக்கதை) மிகக் குறைவான வாக்குகளில் வைகோ தோற்க நேர்ந்தது. வைகோவின் ஓட்டுக்கள் எல்லாம் இப்போது விஜயகாந்த் பக்கம் திரும்பியுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் விருத்தாச்சலம் தொகுதிக்கு விஜயகாந்த் எந்த அளவிற்குச் செய்திருக்கிறார் எனத் தெரியவில்லை. அந்தத் தொகுதியின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டு, இன்னமும் நற்பெயரோடு இருந்தால் மீண்டும் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில்தான் போட்டியிடுவார். இல்லையேல் தன் ஜாதி ஓட்டுக்கள் அதிகமிருக்கும் ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். அப்படிப் பார்க்கையில், விளாத்திகுளம், கோவில்பட்டி, சிவகாசி தொகுதிகளில் ஏதேனுமொன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.
உழவன்
Tuesday, March 8, 2011
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
பள்ளிப் படிப்பு முடித்துக் கல்லூரிக்குச் சென்றபின்புதான், ஜாதிப்பற்று/வெறி பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். கல்லூரி ஜாதிகளால் பிளவுபட்டுக்கிடந்தது. ஒருவன் யார் ரசிகனாக இருக்கிறானோ, அதை வைத்தே அவனின் ஜாதியைத் தெரிந்துகொள்ளலாம். அந்தக் காலகட்டத்தில்தான், எனது தெருக்களைச் சுற்றி இருந்த பெரும்பான்மையான நண்பர்கள் ஏன் விஜயகாந்த் ரசிகர்களாக இருந்தார்கள் என்பது புரிந்தது. இப்போதும் நாயுடு/நாயக்கர்கள் விஜயகாந்த் ரசிகர்களாத்தான் உள்ளார்கள்.
......பொழுது போக்கு மற்றும் ரசிப்புத் தன்மைக்கும் ஜாதி தெரிய வேண்டுமா? அவ்வ்வ்.....
//விஜயகாந்த் உருவம் பொறித்த டிஷர்ட் எல்லாம் வாங்கியிருக்கிறேன்.//
இதைச் சொன்ன உங்க நேர்மையப் பாராட்டுகிறேன்:))!
நடிகர் என்ற தகுதியைத் தவிர அரசியலில் அவருக்கான தகுதி மிகவும் குறைவு தான், விஜயகாந்து அரசியலுக்கு வரும் போது அவர் மீதான ஒரு எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் குடும்ப அரசியல், அவர்களது கட்சிக் காரர்களின் அடவாடித்தனம், கொள்கை சிதைவு, கூட்டணி ஏலம் என்று அனைத்துமே அவர் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துவிட்டது. ஆந்திர வம்சாவளியினர் அதிகம் வாழும் விளாத்திக்குளத்தில் நிச்சயம் அவர் வென்றுவிடுவார். ஆனால் சாதிப் பார்த்து மட்டும் ஒருவரை தேர்ந்தெடுப்பது என்பது ஜனநாயக ஆணிவேரையே பிடுங்கி எரிவது போலாகும்....... என்பதால் பெரிதாக சொல்லிக் கொள்ள ஒன்றுமே இல்லை எனலாம் ..........
//பொழுது போக்கு மற்றும் ரசிப்புத் தன்மைக்கும் ஜாதி தெரிய வேண்டுமா?//
அதே கேள்வியைத்தான் நானும் கேட்கிறேன்.
Nanba,
Where are you from? I am from Nagalapuram. Great to see someone from a place nearby mine on blogs. :)
Bharathiraja
VILAATHIKULAM IS IN INDIA, NOT IN OTHER COUNTRY!! THEN WHY BOTHER ABOUT THE PLACES?? THE PRIME AIM IS TO DEFEAT THE D M K PARTY, THAT IS ALL!!!
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது என்பது இது தானோ!
ஆந்திர வம்சாவளியினர் அதிகம் வாழும் விளாத்திக்குளத்தில் நிச்சயம் அவர் வென்றுவிடுவார்.
எனது தொகுதியான விளாத்திகுளம் தொகுதியில் ரெட்டியார்கள்தான் athigamga irunthaarkal anal ipolthu nayaker samuthayam than athigamana ottuvangiyaga irukirargal.நாயக்கர்கள் இருக்கிறார்கள். விளாத்திகுளம் தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் பெரும்பாலும் ரெட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர்gal mattum Illai N.C KANAGAVALLI ORU NAYAKARTHAN AVRUM ITHE THOGUTHIL NINNU JAITHAR ALLAVA.SUMMA INTHA THOGUTHIYAI REDDIYA THOTHI ENA KATCHI MELIDATHIL KURI VARUGIRARGAL.ENAVE IPPOTHAYA ADMK KUTTANIEL ENTHA NAYAKAR NINNALUM KANDIPPAGA JAITHUVIDUVAR ITHI 100% UNMAI. ENDRUM ANBUDAN ADMK VISUVASA THONDAN
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
49 .additional properties after semmuzi coimbatore farm house
50. broke bond land in coimbatore (given to rental for RMKV silks)
extra extra extra extra
இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.
வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்!!!
//Chitra & சே.குமார்
......பொழுது போக்கு மற்றும் ரசிப்புத் தன்மைக்கும் ஜாதி தெரிய வேண்டுமா? அவ்வ்வ்.....//
என்ன இப்படி கேட்டுட்டீங்க? ஜாதி தெரியலேனா இங்க எல்லாருக்கும் தூக்கம் வராதாக்கும் :-)
//ராமலக்ஷ்மி
//விஜயகாந்த் உருவம் பொறித்த டிஷர்ட் எல்லாம் வாங்கியிருக்கிறேன்.//
இதைச் சொன்ன உங்க நேர்மையப் பாராட்டுகிறேன்:))!//
வாழ்க்கையில் நடந்த சில காமடிகளைச் சொல்லாமல் இருக்கமுடியா :-)
//இக்பால் செல்வன்
நீங்க சொல்றது சரிதான்.. அதனால குடும்ப அரசியல், அவர்களது கட்சிக் காரர்களின் அடவாடித்தனம், கொள்கை சிதைவு, கூட்டணி ஏலம் என எதுவுமே இல்லாத கட்சிக்கு இம்முறை ஓட்டு போடுங்க.
// Bharathiraja
Nanba,
Where are you from? I am from Nagalapuram. Great to see someone from a place nearby mine on blogs. :)
Bharathiraja//
நண்பா.. எனக்கு விளதைதான்.. உங்க மெயில் ஐடி குடுங்க. மிக்க மகிழ்ச்சி.
// lcnathan
VILAATHIKULAM IS IN INDIA, NOT IN OTHER COUNTRY!! THEN WHY BOTHER ABOUT THE PLACES?? THE PRIME AIM IS TO DEFEAT THE D M K PARTY, THAT IS ALL!!!//
D M K மேல கொல வெறில இருக்கீங்க போல.. மனசுக்கு சந்தோசமா இருக்கு :-)
//"குறட்டை " புலி
குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது என்பது இது தானோ!//
அப்படினா?
இன்று இப்படி இல்லை என் நினைக்கிறேன்.
உங்கள் கவிதைகளை விகடனில் படித்தேன். அருமை, வாழ்த்துகள்!!!.
Post a Comment