Tuesday, March 1, 2011

முத்தச் சில்லுகள் - உயிரோசை


சருமம் உறிந்ததுபோக மீந்த முத்தங்கள்
படுக்கையெங்கும் பனித்துளியாய் மின்னுகின்றன.
போர்வை உதறலில் தெறித்து விழுந்த சில முத்தங்கள்
கண்ணாடிச் சில்லுகளாய்ச் சிதறுவது
குழந்தையின் சிரிப்பை ஒத்திருக்க
கருவறை நிறைந்திட்ட பூரிப்பில்
அடிவயிற்றில் கைவைத்தவாறே செல்கிறாள்.

உழவன்

இவ்வார (28.02.2011) உயிரோசையில் இடம் பெற்றுள்ளது. உயிரோசைக்கு நன்றி

11 comments:

Anonymous said...

thaaimaiyai rasitha kannottam azhagu krishna..

rvelkannan said...

உயிரோசையில் படித்தேன் மிகவும் ரசித்தேன் நண்பா

Chitra said...

அருமை. உயிரோசையில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்!

Ashok D said...

நல்லாயிருக்கு உழவன் :)

"உழவன்" "Uzhavan" said...

//தமிழரசி
thaaimaiyai rasitha kannottam azhagu krishna..//

பின்ன.. தாய்மையைக் கொண்டாடாமல் இருக்கமுடியுமா! நன்றி தமிழ்

"உழவன்" "Uzhavan" said...

//Vel Kannan
உயிரோசையில் படித்தேன் மிகவும் ரசித்தேன் நண்பா//

நீங்கள் ரசித்தீர்களேயானால், அதுவே அக்கவிதைக்குப் பெருமைதான் :-)

"உழவன்" "Uzhavan" said...

//Chitra
அருமை. உயிரோசையில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்!//

நன்றிங்க :-)

"உழவன்" "Uzhavan" said...

//D.R.Ashok
நல்லாயிருக்கு உழவன் :)//

நன்றி டாக்டர் :-)

இராஜராஜேஸ்வரி said...

உயிரோசையில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்!

"உழவன்" "Uzhavan" said...

//இராஜராஜேஸ்வரி

உயிரோசையில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்!//

ரொம்ப நன்றிங்க

CS. Mohan Kumar said...

கவிதை அருமை.

தங்களை பற்றி ராமலட்சுமி கூறியது வலை சரத்தில் வாசித்தேன். விகடனில் இந்த வாரம் வந்த இரண்டாவது கவிதை (குழந்தை பற்றியது) மிக அருமை. வாழ்த்துகள்.

தங்கள் பதிவை இன்று முதல் தொடர்கிறேன்.