Thursday, February 24, 2011

ஆடுகளம் போல் சீடனும் மொக்கையா?

தனுஷின் சீடனுக்கு முந்தைய படமான ஆடுகளத்தை நிறைய பேர் அப்படி இப்படி என ஓகோவென புகழ்ந்து தள்ளினார்கள். வெற்றிமாறன் மதுரையை மல்லாக்கப் போட்டுக் காட்டினார்; திருப்பரங்குன்றத்தைத் திருப்பிப் போட்டுக் காட்டினார் என்றெல்லாம் எழுதினார்கள். படம் பார்த்த பின்புதான் தெரிந்தது அதன் லட்சணம். ஒரு ஓகே ரகம் படத்தை ஏன் தான் இப்படி சொன்னார்களெனத் தெரியவில்லை. அட போடவைக்கும் காட்சிகளெல்லாம் ஆடுகளத்தில் இல்லை.
 
ஆடுகளம் படத்திற்கு ஹீரோயினே தேவையில்லை என நண்பரொருவரிடம் சொன்னபோது, எந்தப் படத்திற்குத்தான் ஹீரோயின் தேவை. ஒரு படத்திற்கும் தேவையேயில்லை என்று சொன்னார். அவர் சொன்னதும் சரிதான். கார்த்திக்கு மூடு ஏற்றத்தானே தமன்னா சிறுத்தையில் தேவைப்பட்டார். ஹீரோயின்கள் கவர்ச்சிக்காக மட்டுதான் தேவைப்படுகிறார்கள். ஆனால் அதுகூட ஆடுகளத்தில் இல்லை. அப்படி இருந்திருந்தால் கூட, ஏதோ கொடுத்த காசிற்கு சமாதானம் ஆகியிருக்கலாம்.
 
நானும் பள்ளிக்காலத்தில், சேவல்க்கட்டு நிறையப் பார்த்திருக்கிறேன். சேவலின் காலில் அதற்கென இருக்கும் ஒரு கத்தியைக் கட்டிவிட்டுதான் சண்டைபோட விடுவார்கள். ஆடுகளத்தில் அந்தக் கத்தி பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. சன் பிக்சர்ஸ் ரிலீஸ் செய்ததால் தப்பித்தார் வெற்றிமாறன்.
 
ஆடுகளத்தின் விளம்பரம்கூட இன்னும் சன் டிவியில் ஓயவில்லை. அதற்குள்ளாகவே சீடன் வெளிவருகிறான். எப்படி இருக்கப்போகிறது எனத் தெரியவில்லை. எல்லோருக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். பலரின் சினிமா பற்றிய பதிவுகளை மட்டுமே படித்துவிட்டு, படத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். எப்போதுமே பதிவுலகம் சாராத உங்களது நண்பர்களிடமும் கேட்டுவிட்டு பொறுமையாக முடிவெடுங்கள் திரையரங்கிற்குச் செல்வதா வேண்டாமா என.
 
oOo
 
நேற்று நடந்த அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தபோது, குடிகாரனும், ஊற்றிக்கொடுத்தவரும் கைகோர்த்துவிடுவார்கள் போலத்தான் தெரிகிறது. அம்மாவிற்கு விஜயகாந்த் பூங்கொத்து அனுப்பி பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். கோவில் குளமெங்கும் அம்மாவிற்காக சிறப்பு பூஜைகள், பால் குடம் பன்னீர்க்குடம் என அம்மாவின் அடிவருடிகள் கோவிலைச் சுற்றி உருண்டார்கள். ஆண்டவன் என்ன நினைத்திருக்கிறானோ தெரியவில்லை. ஒருவேளை அம்மா ஆட்சியைப் பிடித்தால், அதிமுகவினர் நேராகத் திகார் ஜெயிலுக்குச் சென்றுதான் நன்றி சொல்லவேண்டும்.
 
oOo
 
இந்தக் கல்மாடி கல் மாதிரி ஊரெல்லாம் சுற்றிவருகிறார். முதலில் ஷீலாதீட்சித்தைக் கைது செய். அப்புறம் ஜெய்பால்ரெட்டி, எம் எஸ் கில்லைக் கைதுசெய். அப்புறமா கடைசியா என்னிடம் வா எனத் தில்லாகச் சொல்லிக்கொண்டு அலைகிறார். பிரதமர் என்னவென்றால், கூட்டணி தர்மத்திற்காக சிலவற்றைச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார். என்னங்கடா டேய்... இங்க ஆபீசில் என்னனா, ரொம்பக் கறாரா இந்த ஆண்டுக்கான வருமானவரியை இம்மாதத்திலும், அடுத்த மாதத்திலுமாக பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். மெடிக்கல் பில்லில் என் குடும்ப உறுப்பினர் பெயர் இல்லை என்பதற்காக, அதனை இங்கு நிராகரிக்கிறார்கள். இப்படி எங்களிடம் இருந்து பிடுங்கப்படும் வரிப்பணத்தை நீங்கள் லட்சம் லட்சம் கோடிகளாக அடித்துக்கொண்டிருக்கிறீர்கள். எவனை நம்புவதெனவே தெரியவில்லை. எல்லோரும் நாசாமா போக...
 
oOo
 
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக 13 நாட்கள் (26.02.11 முதம் 10.03.11 வரை) கலை இலக்கியத்திருவிழா நடைபெற இருக்கிறது. வரும் ஞாயிறு காலை 10 மணியளவில் கவிஞர் ஞானக்கூத்தன் அவர்கள் தலைமையில் கவிதைப் பட்டறை நடைபெறுகிறது. விருப்பமிருப்பவர்கள் கலந்துகொள்ளுவதற்காக இத்தகவல்.

9 comments:

சத்ரியன் said...

//ஒருவேளை அம்மா ஆட்சியைப் பிடித்தால், அதிமுகவினர் நேராகத் திகார் ஜெயிலுக்குச் சென்றுதான் நன்றி சொல்லவேண்டும்.//

செம நக்கல்.

சத்ரியன் said...

//எல்லோரும் நாசாமா போக... //

சாபம் பலிச்சா எனக்கும் மகிழ்ச்சிதான். ..

ராமலக்ஷ்மி said...

கடைசித் தகவல் நானும் கேள்விப் பட்டிருந்தேன். சென்று வந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குங்கள்.

என்.விநாயகமுருகன் navina14@hotmail.com said...

கார்த்திக்கு மூடு ஏற்றத்தானே தமன்னா சிறுத்தையில் தேவைப்பட்டார்.

என்ன அப்படி சொல்லிட்டீங்க...படம் பார்க்கும் நமக்கு மூடு ஏற்றத்தானே தமன்னா சிறுத்தையில் தேவைப்பட்டார்.

"உழவன்" "Uzhavan" said...

@ சத்ரியன் நன்றி
@ ராமலக்ஷ்மி நன்றி

@விநாயக முருகன்

க்ளைமேக்ஸ்ல சந்தானம் கார்த்தியிடம் அவனை அடிடானு சொல்லும்போது, எனக்கு மூடு இல்லைனு கார்த்தி சொல்வார். அதற்கு சந்தானம் தமன்னாவிடம், அவருக்கு மூடு இல்லையாம்.. போய் மூடு ஏத்தும்மா எனச் சொல்வாருல்ல.. அதத்தான் சொன்னேன் :-)
நன்றி

ஹுஸைனம்மா said...

ஆடுகளம் - கருத்து சரிதான். சேவல் சண்டை பார்க்காதவர்களுக்குப் புதிதாக இருக்கும். ஆனால், அவசியமற்ற இடைச்செருகல் தப்ஸி.

//அதிமுகவினர் நேராகத் திகார் ஜெயிலுக்குச் சென்றுதான் நன்றி சொல்லவேண்டும்.//

யார்கண்டா, ராசா அதிமுகவில சேந்தாலும் சேரலாம் அப்போ!!

"உழவன்" "Uzhavan" said...

ஹுஸைனம்மா அவர்களுக்கு நன்றி :-)

இராஜராஜேஸ்வரி said...

பலரின் சினிமா பற்றிய பதிவுகளை மட்டுமே படித்துவிட்டு, படத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்//
சரியான கருத்து.நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

//இராஜராஜேஸ்வரி

பலரின் சினிமா பற்றிய பதிவுகளை மட்டுமே படித்துவிட்டு, படத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்//
சரியான கருத்து.நன்றி.//

அப்ப நான் சொன்னது கரெக்ட்தானா :-)