இன்று எந்த ஆசிரியருக்கும் மாணவர்களைத் தண்டிக்கும்/கண்டிக்கும் அதிகாரம் இல்லை. ஒருவேளை ஆசிரியர் கண்டித்தால், இன்றைய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூட தயங்குவதில்லை. இந்நிலை ஏன்?
இன்றைய கல்வியும், கல்விக்கூடங்களும் ஒரு மாணவனை பொருள் ஈட்டும் இயந்திரமாக மட்டுமே உருவாக்குகிறது என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், நாம் நம் பிள்ளைகளை ஆசிரியர்கள் தண்டிக்கவோ கண்டிக்கவோ கூடாது என்று சட்டமே இயற்றுகிறோம். பிறகு எப்படி மனிதாபமானமுள்ள, ஒழுக்கமுள்ள மக்கள் நாட்டில் உருவாகமுடியும்?
குருகுலக் கல்விக் காலத்தில், சீடர்கள்தான் குருக்களுக்குத் தேவையான எல்லா பணிவிடைகளையும் செய்தார்கள். ஆனால் இன்று கல்வி வியாபாரமாகிப் போனதால், ஆசியர்களும் இதை எதிர்பார்ப்பதில்லை; மாணவர்களும் பணிவிடை செய்ய தயாராக இல்லை.
கண்மூடித்தனமாக மாணவர்களை அடித்தும் இன்னபிற கொடூரமான தண்டனைகளை அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக நாம் ஒருபோதும் செயல்படவேண்டாம். அதை நாம் ஆதரிக்கவும் வேண்டாம்.
ஆனால் ஒரு ஆசிரியரின் பொறுப்பு என்பது, கல்வியைத் தவிர்த்து, ஒழுக்கம் கற்பித்தலிலும் இருக்கிறது என்பதை மறவோம். அதற்காக மாணவர்களிடம் சற்றுக் கண்டிப்புடன் இருப்பதில் தவறொன்றும் இலலை.
பெற்றோர்களே.. நீங்களும், உங்கள் பெற்றோர்களும் படித்த காலத்தில் உங்களின் பள்ளி அனுபவம் என்ன?
நாம் படித்த காலத்தில், எந்த ஒரு மாணவனும், மாணவியும் ஆசிரியருக்குப் பயந்து தற்கொலை அளவிற்குப் போனதே இல்லை. நாம் வகுப்பறையில் போடாத தோப்புக்கரணமா இல்லை வாங்காத அடியா?? ஆனால் இன்றைய மாணவர்களுக்கு இதையெல்லாம் தாங்குகிற மனபலம் இல்லையே. இவர்களால் எப்படி வாழ்க்கையில் வரும் தோல்விகளைத் தாங்கிக்கொள்ளமுடியும்? தோல்விகளைத் தாங்கிக்கொள்பவனால்தான், வெற்றியை நோக்கிப் பயணிப்பதற்கு போராடும் குணத்தைப் பெறமுடியும்.
வகுப்பறைகளில் பெறும் ஒருசில தண்டனைகளையெல்லாம் மிகவும் அவமானமாகக் கருதி, கோழைத்தனமான முடிவுகளை எடுக்கின்ற சூழல்தான் இன்று நிலவுகிறது. இப்படிப்பட்ட மனநிலையை மாற்றுகிற மிகப் பெரிய பொறுப்பு பெற்றோர்களையே சார்ந்தது. தனது குழந்தைகளை மனரீதியாகவும் பலப்படுத்துங்கள்.
சமீபத்திய சென்னை சட்டக்கல்லூரி சம்பவத்திற்குக் காரணமாக, மாணவர்களை ஆசிரியர்கள் சரியான ஒழுக்கநெறியோடு வளர்க்கவில்லை என்றும் கூட சொல்லலாம். ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில்தான் உருவாகிறது என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் சொன்னாரே, அந்த எதிர்காலம் எப்படிப்பட்ட எதிர்காலம் என்று தீர்மானிக்கப்போவது யார்?
உழவன்
மீள் பதிவு. 11.2.2009 அன்று “தமிழோடு” தளத்தில் எழுதியது.
Tuesday, February 15, 2011
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
பழைய நாட்களில் ஆசிரியர்கள் தண்டனையுடன் அன்பும் அக்கரையும் இருந்தது. இன்று அதுவல்ல நிலை ஆசிரியர்கள் பணத்திமிற், ஆணவம், தன்னலம், காழ்ப்புணர்ச்சியுடன் தண்டிக்கின்றனர். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் என்றாலே மதிப்பு அல்லது உயிருள்ள ஜீவன் என்று கருதுவதில்லை.
தேவையான நேரத்தில் மிக அவசியமான பதிவு.
ஏட்டு சுரைக்காய் மட்டுமே கறிக்கு உதவாது என்பதை நல்லா சொல்லி இருக்கீங்க.. இன்றைய சமூக சூழல்கேற்ப
குழந்தைகளை வளர்ப்பதற்கு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சம பங்கு உண்டு.
ஆதங்கப்பட வேண்டிய விஷயம்தான் :( மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவு/அன்பு/மரியாதை, இதெல்லாம் இப்போது மாறிவிட்டது.
கவிநயா said...
ஆதங்கப்பட வேண்டிய விஷயம்தான் :( மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவு/அன்பு/மரியாதை, இதெல்லாம் இப்போது மாறிவிட்டது.
வழிமொழிகிறேன்..
ரெண்டு வருஷம் முன்னே எழுதினது இன்னும் பொருத்தமாகவே இருக்கு!!
இரு தரப்பிலும் மாற்றங்கள் தேவை. ஆனால், மாணவர்கள் தரப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டியது மறு தரப்பான ஆசிரியர்களே என்பதுதான்...
தனது குழந்தைகளை மனரீதியாகவும் பலப்படுத்துங்கள்.
very important.
அட ஆமாம்....
தேவையான பதிவு நண்பா
இதையும் பாருங்க
http://aammaappa.blogspot.com/2011/02/blog-post.html
@J.P Josephine Baba
@ராமலக்ஷ்மி
@Chitra
@கவிநயா
@தமிழரசி
@ஹுஸைனம்மா
@இராஜராஜேஸ்வரி
@ஆ.ஞானசேகரன்
அனைவருக்கும் நன்றி
ரொம்ப நாளா எழுதவேண்டும் என நினைத்துக் கொண்டேயிருக்கும் பதிவு ....ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க!பூங்கொத்து!
@அன்புடன் அருணா
பூங்கொத்திற்கு மிக்க நன்றி :-)
Post a Comment