Tuesday, January 25, 2011

வாழ்வு

படம்: நண்பன் பிரசாத்

கரிசல்காரன் அண்ணாந்து பார்த்து மகிழ்கிறான்.
நீலமெல்லாம் மறைந்து
எங்கும் திட்டுத்திட்டாய்க் கருப்பு.
வெளியெங்கும் இருள் பரவ
பாறைகள் உருண்டு மோதுகின்றன.
இலையின் நரம்புகளாய் மின்னல்கள் மின்ன
அதீத தாகத்திலிருக்கும்
வாய்பிளந்த கரும்பூமி
தன் நாவை நீட்டிக் காத்திருக்கிறது.
எறும்புகள் சேமிப்புக்கிடங்கின்
இருப்பைக் கணக்கிடுகின்றன.
திடீரென எங்கிருந்தோ வந்த பெருங்காற்றொன்று
கையோடு கருந்திட்டுக்களை அள்ளிச்செல்கிறது
கோழிக்குஞ்சொன்றைத் தூக்கிச் செல்லும்
பருந்து போல.

உழவன்

நன்றி: திண்ணை 23.01.2011

19 comments:

'பரிவை' சே.குமார் said...

கடைசி வரியில் கவிதை நிற்கிறது.

rvelkannan said...

மிகுந்த அடர்வும் மாற்றமும் தெரிகிறது உழவன் வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

//எங்கிருந்தோ வந்த பெருங்காற்றொன்று
கையோடு கருந்திட்டுக்களை அள்ளிச்செல்கிறது//

வாழ்வை அழகாகப் படம் பிடித்த வரிகள்.

நல்ல கவிதை உழவன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல கவிதை

Chitra said...

திடீரென எங்கிருந்தோ வந்த பெருங்காற்றொன்று
கையோடு கருந்திட்டுக்களை அள்ளிச்செல்கிறது
கோழிக்குஞ்சொன்றைத் தூக்கிச் செல்லும்
பருந்து போல.


.....அருமையாக எழுதி இருக்கீங்க.

Anonymous said...

இயற்கையோடு உணர்வு உயிர் கொண்டது போல் காட்சியமைப்பு கற்பனை பண்ணி பார்த்திட்டேன் கிருஷ்ணா..

சிவகுமாரன் said...

பொய்த்துப் போன மழை
ஒரு அருமையான கவிதையை
விளைத்திருக்கிறது.

raji said...

அருமையான அர்த்தம் பொதிந்த கவிதை
பகிர்வுக்கு நன்றி

*************************

எனது வலையில் நினைவாஞ்சலி பதிவு வெளியிட்டுள்ளேன்
கலந்து கொள்ள எண்ணமிருப்பின் பின்னூட்டம் மூலம் கலந்து கொள்ளவும்

"உழவன்" "Uzhavan" said...

நன்றி சே.குமார்
நன்றி Vel Kannan
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி T.V.ராதாகிருஷ்ணன் சார்
நன்றி Chitra
நன்றி தமிழரசி
நன்றி சிவகுமாரன்
நன்றி raji

Prabu Krishna said...

எங்கள் ஊரின் நிஜம் இது.

Kavinaya said...

//இலையின் நரம்புகளாய் மின்னல்கள்//

அழகான பிரயோகம்.

//திடீரென எங்கிருந்தோ வந்த பெருங்காற்றொன்று
கையோடு கருந்திட்டுக்களை அள்ளிச்செல்கிறது
கோழிக்குஞ்சொன்றைத் தூக்கிச் செல்லும்
பருந்து போல.//

:(((

"உழவன்" "Uzhavan" said...

நன்றி பலே பிரபு

"உழவன்" "Uzhavan" said...

//கவிநயா
//இலையின் நரம்புகளாய் மின்னல்கள்//

அழகான பிரயோகம்.

//திடீரென எங்கிருந்தோ வந்த பெருங்காற்றொன்று
கையோடு கருந்திட்டுக்களை அள்ளிச்செல்கிறது
கோழிக்குஞ்சொன்றைத் தூக்கிச் செல்லும்
பருந்து போல.//

:(((

ரொம நன்றிங்க

Sugirtha said...

ம்ம் வலிக்கும் எதார்த்தம்...

ksground said...

your message is more useful......

"உழவன்" "Uzhavan" said...

//sugirtha
ம்ம் வலிக்கும் எதார்த்தம்...//

ஆமாங்க.. வலிக்கும் எதார்த்தம்தான்.. என்ன செய்ய..
நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//ksground
your message is more useful......//

Thx..

அன்புடன் நான் said...

இப்படிதான் வேளாண்மை வெறுமையடைகிறது...
கவிதை வீரியம்.

"உழவன்" "Uzhavan" said...

@ சி.கருணாகரசு
@ Gayathri

நன்றி