படம்: நண்பன் ananda prasath
வீட்டின் முன்னால் நின்று கொண்டு
மணியடித்துக் கொண்டேயிருக்கிறார்.
நல்லவேளை அவருக்கு
என் பெயர் தெரியாது.
தெரிந்திருந்தால்
பெயர் சொல்லிக்கூட அழைத்திருப்பார்.
கதவைத் திறந்து,
உடல்நிலை சரியில்லை இன்று வேண்டாம்
எனச் சொன்னவுடன்
கவலையுற்று குசலம் விசாரித்துச் சென்றார்
குல்பி ஐஸ்காரர்.
வீட்டின் முன்னால் நின்று கொண்டு
மணியடித்துக் கொண்டேயிருக்கிறார்.
நல்லவேளை அவருக்கு
என் பெயர் தெரியாது.
தெரிந்திருந்தால்
பெயர் சொல்லிக்கூட அழைத்திருப்பார்.
கதவைத் திறந்தவுடன்
கையிலிருந்த குப்பைக் கூடையை
ஓடிவந்து வாங்கிக் கொண்டார்
குப்பை வண்டிக்காரர்.
ஒரு வாரகாலமாய்
குல்பி ஐஸ் சாப்பிடவில்லை
இம்மாதம் குப்பை வண்டிக்காரருக்கு
பத்து ரூபாய் கொடுக்கவில்லை
இப்போதெல்லாம்
மணியொலி கேட்பதேயில்லை.
உழவன்
நன்றி: அதீதம் இணைய இதழ் (முதல் இதழ் - 15.01.2011)
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
எதார்த்தத்தை எதார்த்தமாய் சொல்லும் கவிதை.
மணியொலி எதார்த்தத்தின் எதிரொலி.
அருமையான கவிதை.
அதீதத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!!
எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு இந்தக் கவிதை.
குல்பிஐஸ் மணிஓசை நினைவுகள்.... சிறுவயதுக்குச் சென்றுவிட்டது்.
ஜஸ்காரன்தான் அம்மம்மாவிடம் பேச்சுவாங்குவான்.:)
'அதீதம்' வாழ்த்துக்கள்.
அருமை. அருமை. அருமை.
@சே.குமார்
@ராமலக்ஷ்மி
@விக்னேஷ்வரி
@மாதேவி
@Chitra
அனைவருக்கும் நன்றி
வாழ்த்துக்கள். கவிதை அருமை
அருமை!!!
அதீதத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!!
// என்.விநாயகமுருகன்
வாழ்த்துக்கள். கவிதை அருமை//
மிக்க நன்றி நண்பா :-)
*
// பலே பிரபு
அருமை!!!
அதீதத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!!//
மிக்க நன்றி பிரபு :-)
எதார்த்தம், இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் உழவன்.
இயல்பான கவிதை. நல்லாருக்கு :)
//கோநா
எதார்த்தம், இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் உழவன்.//
மிக்க நன்றி
//கவிநயா
இயல்பான கவிதை. நல்லாருக்கு :)//
ரொம்ப நன்றிங்க மேடம் :-)
எளிமையாக சொன்னாலும்
ஆழமாக உணர்வை ஏற்படுத்துகிறது உழவன். அருமை மற்றும் வாழ்த்துகள்
நன்றி Vel Kannan
Post a Comment