Monday, December 27, 2010

ஓசிப்பெட்டி

தெனமும் மத்தியானம்
சமையல் நிகழ்ச்சி வந்திரும்.
சாஸ் சீஸ்னு என்னென்னமோ சொல்லுவான்.
 
ஓலக் கொட்டான்ல இருந்த
ரெண்டு தக்காளில
ஒன்ன நாளைக்குனு எடுத்து வச்சிட்டு,
இன்னொன்னுல ரசம் வச்சி
கஞ்சி குடிக்கிற நேரத்துல
இதப் பார்க்கும்போது,
தூக்கிப் போட்டு உடச்சிரலாம்னு தோணும்.
 
பாவம்.. அது என்ன பண்ணும்
ஓசியாக் குடுக்குறாங்கன்னு
ஓடிப்போயி வாங்கி வந்த அவரச் சொல்லனும்.
 
உழவன்

8 comments:

ராமலக்ஷ்மி said...

//பாவம்.. அது என்ன பண்ணும்//

அதானே:)?

அருமையான கவிதை உழவன்!

புன்னகைக்க வைத்தாலும் பல விஷயங்களை உணர்த்துகின்றன வரிகள்!

sakthi said...

உழவன் இலவச டீவிக்கு ஒரு கவிதையா:)

நடை வெகு அருமை

நாணல் said...

அச்சோ பாவம் :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

வெகு அருமை

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை உழவன்!

"உழவன்" "Uzhavan" said...

@ ராமலக்ஷ்மி
@ sakthi
@ நாணல்
@ T.V.ராதாகிருஷ்ணன்
@ சே.குமார்

அனைவருக்கும் நன்றி :-)

க.பாலாசி said...

ஹி...ஹி.. அப்டியே காய்கறியும் ஓசியில கெடச்சா நல்லாயிருக்கும்..என்ன பண்றது..

"உழவன்" "Uzhavan" said...

@ க.பாலாசி
நன்றி பாலாஜி