Friday, April 2, 2010
அகமதி வெண்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
அன்புள்ள அகமதிக்கு,
காலம் எவ்வளவு அதிவேகமாக உருண்டோடிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டின் இதே நாளின் பச்சையம் இன்றும் அப்படியே இருப்பதுபோலதான் உணர்கிறேன். அதற்குள் நீ பிறந்து ஓராண்டாகிவிட்டதா என எண்ணும்போது பிரமிப்பாகவே உள்ளது. கடந்த மார்ச் 8ம் நாளில்தான் வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. துருதுருவென நீ உதைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டிருந்த நாட்கள் அவை. உள்ளங்கையால் உன்னோடு பேசிய தருணங்கள் அவை.
பல ஆண்டுகளுக்கு முன், ஒரு பிரபல வார இதழில் வெளிவந்த கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதைக் கண்டறியும் சீன அட்டவணையொன்றை நண்பனொருவன் எனக்குத் தர, அதில் பார்த்தபோது பிறக்கும் குழந்தை ஆண் என்று இருந்தது. அதனை ஒரு பிரதி எடுத்து இன்னொரு நண்பனுக்கு நான் தர, அவன் அதனை வேறு சில நண்பர்களோடு சரி பார்த்துவிட்டு, இதுவரை சரி பார்த்ததில் இந்த அட்டவணையில் இருப்பது மிகச் சரி என உறுதி செய்தான். அவனுக்கும் அவ்வட்டவணையில் இருந்தது போலவே பெண் குழந்தைதான் பிறந்தது.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கையில், எங்களுக்கு ஆண் குழந்தைதான் பிறக்கப் போகிறது என்றே நாங்கள் எண்ணிக்கொண்டிருந்தோம். அதற்காக, ஆண் குழந்தைதான் வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது என்று பொருள் அல்ல. எந்தக் குழந்தையாயினும் சம மன மகிழ்வோடுதான் நாங்கள் ஏற்கத் தயாராக இருந்தோம். அந்த அட்டவணையின் பிரகாரம் ஆண் குழந்தை என்று நம்பினோம். அவ்வளவே. இருப்பினும் ஒரு சராசரி மனிதனாய் எனக்கு ஒரு சிறு விகிதாச்சார மகிழ்வு அதிகம் இருந்தது என்பதையும் உன்னிடமிருந்து மறைக்க விரும்பவில்லை.
ஒரு நாள் இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறேன். "பெண் குழந்தை பிறந்திருக்கிறது. எழுந்திரு" என்று யாரோ ஒருவர் என்னை எழுப்புவதுபோல் இருந்தது. எழுந்து பார்க்கிறேன்; யாருமேயில்லை. கனவோ என எண்ணிவிட்டு மீண்டும் தூங்கிவிட்டேன். இச்சம்பவம் நடைபெற்ற ஒரு சில தினங்களில்தான், பிரசவத்திற்காக உனது அம்மாவை இரவு 9 மணியளவில் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அந்த நிமிடத்திலிருந்து ஒருவித பயம் கலந்த மனநிலையுடன் தனிமையில் நான் இங்கு இருக்கிறேன். அலைபேசியில் அவ்வப்போது அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டுக்கொண்டே இருந்த நான், எப்போது தூங்கிப்போனேன் எனத் தெரியவில்லை. செல்போன் என்னை அழைக்கிறது; "பெண் குழந்தை பிறந்திருக்கிறது" என்ற செய்தியைத் தருகிறது. என்னே மகிழ்வான தருணங்கள் அவை. அந்த நள்ளிரவில் என்னைப் பார்த்து நான் புன்னகைக்கிறேன்.
சில தினங்களுக்கு முன்பு நான் கண்ட கனவு என் முன்னால் மெல்ல எட்டிப் பார்க்கிறது. ஜோசியம், அமானுஷ்யம் இதுபோன்ற இத்யாதிகள் எதிலுமே ஆர்வமில்லாத எனக்குள், இதுமட்டும் எப்படி என்ற கேள்வி எழுகிறது. அத்தருணத்தில் என் அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். சுவரில் சட்டங்களுக்குள் இருக்கும் அம்மா என்னைப் பார்த்து புன்னகைப்பதாய் உணர்கிறேன். "நீயே எனக்கு மகளாய்ப் பிறந்து விட்டாயோ; இதைக் கூறத்தான் அன்று என் கனவில் வந்தாயோ அம்மா" என்று கேட்கும்போது அழுகை பீறிட்டது. இதோ இதை எழுதும் இந்தத் தருணத்திலும் கண்கள் கசியத்தான் செய்கின்றன.
கடந்த ஆண்டின் ஏப்ரல் 3ம் நாளான வெள்ளிக்கிழமையின் அதிகாலையில் பிறந்த உன்னை, அடுத்த நாளின் அதிகாலையில்தான் பார்த்தேன். பூட்டியிருந்த மருத்துவமனையின் கேட்டைத் தட்டி, என் மகளைக் காணவந்திருக்கிறேன் எனக்கூறி உள்ளே நுழையும்போது உனது அழுகுரல் கேட்டது. அழைத்தாயோ என்னை?
இப்போதும் உன்னைப் பார்க்கிறேன். தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்துவிட்டாய். சொல்வதைப் புரிந்துகொள்ளவும் செய்கிறாய். மனதின் இடுக்குகளிலெல்லாம் மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது.
நல்லோர் எல்லோரின் ஆசியும் வாழ்த்தும் என்றும் உனக்குக் கிடைக்கட்டுமாக!
மகளாய்ப் பிறந்த என் தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
அன்புடன்
அப்பா
ம்ம்.. எப்படியோ 100 இடுகை போட்டாச்சு..:-)
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
அகமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நூறாவது இடுகை இனிய இடுகை:)!
இன்னும் பல சதம் காண வாழ்த்துக்கள்!
நேர்மையான இடுகை.
மிக நெகிழ்வான பதிவு.
அகமதி வெகு அழகு:)!
நூறாவது இடுகையிலிருந்து உழவனின் 'உளறல்கள்' “நெற்குவியல்” ஆகியிருப்பது கூடுதல் சிறப்பு.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
அகமதிக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துகளும்..அன்பு முத்தங்களும்
அகமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அகமதிக்கு ஆசிகள். உங்கள் நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள். :)
பிறந்த நாள் வாழ்த்துகள் அகமதி:)
குழந்தை கொள்ளை அழகு:))
வாழ்த்துக்கள் வெண்பாவிற்கும்
வெண்பா எழுதும் உழவனுக்கும்
அதான் என்னை பெத்த தாயேன்னு குழந்தைய கொஞ்சறோம்
வாழ்த்துக்கள்
அகமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நண்பா உங்களுக்கும் என் வாழ்த்துகள்
அழகை சுமந்த அற்புத ஓவியம்
அம்மா படைத்த பைந்தமிழ் காவியம்
அப்பாவின் அரும் பெரும் களஞ்சியம்
வாழ்வின் மெருகை மேலும் ஏற்றி வாழ்க்கையை அர்த்தமாக்கிய பேரரெழில் பெட்டகம்.....
சின்ன பெண்ணே செல்லமே..
நீ சிரித்திடும் போது உருகும் உள்ளமே..
பையப் பையப் நடப்பாய்
பார்வையிலே உயிர் பறிப்பாய்
நீ தொட்டு வியந்த பொருள் எல்லாம்
இனி கட்டிக் காக்கும் செல்வமாகும்...
என்ன தவம் செய்தனரோ
தாரகை நீ இப்புவியில் தவழ்ந்திடவே..
தாய் தந்தை தரணி என
எல்லோர் மெச்ச வளர்ந்திடுவாய்
இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் என குறளுக்கிணங்க வாழ்ந்திடுவாய்.....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்புக்குரிய அழகிய
”அகமதி வெண்பா” செல்லத்துக்கு.....
அகமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நண்பா உங்களுக்கும் என் வாழ்த்துகள்.
thanga nilavukku...
velli natchatthiraththukku...
sirikkum malarukku...
Birthday Wishes.
HAPPY BIRTHDAY TO THE CUTE BABY!
Enjoy.....
//தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்துவிட்டாய். //
//ம்ம்.. எப்படியோ 100 இடுகை போட்டாச்சு..//
அப்பா, பொண்ணு ரெண்டு பேருக்கும் வாழ்த்துகள்!!
வாழ்த்துக்கள் உழவரே!!
அகமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள்
'உளறல்கள்' “நெற்குவியல்” ஆகியிருப்பது அழகு.
//காலம் எவ்வளவு அதிவேகமாக உருண்டோடிக் கொண்டிருக்கின்றன.//
அதானே! நேற்றுதான் உங்க பெயர் சூட்டுங்கள் பதிவிற்கு பின்னுட்டம் போட்டமாதிரி இருக்கிறது,அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா?
அகமதிக்கு பிறந்தநாள்வாழ்த்துகள்
அகமதி வெண்பாவிற்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!!!!!!
வாழ்த்துக்கள் உங்களுடைய நூறாவது இடுகைக்கு......
அகமதிக்கு வாழ்த்துக்கள். ரொம்ப கீயூட். நிறைய சந்தேசங்களை வாரி வழங்குவாள் பாருங்கள். மிக்க மகிழ்சி
வாழ்த்திய வலையுலக நட்புகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
kalakareenga daddy!!!
வாழ்த்துக்கு நன்றி ரோகிணி மேடம்
இது ரொம்ப லேட் தான். இருந்தாலும் வாழ்த்துக்கள்.
அகமதிக்கு எழுதின கடிதத்தை நாங்களும் படிச்சிட்டோமே!:-) நல்லா எழுதியிருக்கீங்க..
அகமதிக்கு வாழ்த்துகள்!:-)
கிருஷ்ணபிரபு, முல்லை - ரொம்ப நன்றிங்க :-)
happy birth day agamathi
Post a Comment