நீ
நகம் வெட்டியதில்லை
வெட்டாத
ஆசை நகத்தின்
அழுக்கெடுத்ததில்லை
கொய்யா காய்
நறுக்கியதில்லை
சாத்துக்குடியின்
சேலை உரித்ததில்லை
குளிர்பானம்
திறந்ததில்லை
குதிகால் முள்
பிடுங்கியதில்லை
எந்த வேலையையுமே
உனக்குக் கொடுக்காமல்
எடுத்து எடுத்துப்
பார்த்துவிட்டு
அலமாரியை
அலங்கரிக்க மட்டுமே - நான்
அமரவைத்த
நகவெட்டியே . . .
மாயமாய்
மறைந்து போனது
எங்கே?
எப்போதும் விழித்திருக்கும்
என் வீட்டு
எறும்புகளே . . .
இருக்கும்
இடம் தெரிந்தால்
கொஞ்சம் சொல்லுங்களேன் !
என்னவளின்
நகத்தை மட்டுமே
சுவைத்த நாக்கு அது
அவளுக்குத் தெரியாமல்
நான்
எடுத்துவந்த
நினைவு அது !
உழவன்
Sunday, October 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
//என்னவளின்
நகத்தை மட்டுமே
சுவைத்த நாக்கு அது//
ஆஹா....என்னே கற்பனை வரிகள்...
//அவளுக்குத் தெரியாமல்
நான்
எடுத்துவந்த
நினைவு அது !//
அப்ப சுட்டுட்டு வந்திட்டீங்கன்னு சொல்லுங்க....
கவிதை நன்று அன்பரே.....
தீபாவளிக்கு வீட்ல இருந்து எடுத்திட்டுவந்தது இதுதானா !வித்தியாசமா இருக்கு.நல்லாயிருக்கு.
\\என்னவளின்
நகத்தை மட்டுமே
சுவைத்த நாக்கு அது\
ஆகா! ஆகா! என்னே ஒரு கற்பனை.
***********************************
\\நகம் வெட்டியதில்லை
வெட்டாத
ஆசை நகத்தின்
அழுக்கெடுத்ததில்லை//
அதுசரி உங்க நகவெட்டி எங்கே, அதையும் காணோமோ!. ஒருவேளை அவங்க சுட்டுருப்பாங்களோ! உங்களைமாதிரியே.
அட!
நல்லா இருக்கு நண்பா..;-))
அழகான கற்பனை. தொலைத்த பொருளை தேடி எடுத்திடுங்கோ.
அதில எத்தனை விடயம் இருக்கு!
[[என்னவளின்
நகத்தை மட்டுமே
சுவைத்த நாக்கு அது
அவளுக்குத் தெரியாமல்
நான்
எடுத்துவந்த
நினைவு அது !]]
அருமை!!
சுட்டுட்டு வந்த நகவெட்டியே
வந்துவிடு என் நண்பனிடம்...
WOWWWWWWWWWWWWWWWWWW என்னே காதலின் தன்மை.... SOOOOOOOOOOOOOOOO......SWEETTTTTTT
இப்படி லோகத்துல நிறைய பயல்கள் சுத்தி் திரியறானுங்கோ...
அருமையான கற்பனை உழவன்,ஊருக்கு போய் வந்த உழவனின் அனுபவகவிதையை எதிர்பார்த்தேன்.
supernga.. :)
க.பாலாஜி
ஹேமா
S.A. நவாஸுதீன்
அமிர்தவர்ஷினி அம்மா
கார்த்திகைப் பாண்டியன்
வித்யா
ஜெஸ்வந்தி
ஆ.ஞானசேகரன்
தமிழரசி
jackiesekar
சொல்லரசன்
kanagu
தொடர்ந்து ஊக்கம் தரும் அனைவருக்கும் என் நன்றிகள் என்றும் :-)
அவளுக்குத் தெரியாமல்
நான்
எடுத்துவந்த
நினைவு அது ! //
நச். நல்லா இருக்கு.
நன்றாக உள்ளது:)!
//அவளுக்குத் தெரியாமல்
நான்
எடுத்துவந்த
நினைவு அது !//
அருமை உழவன்!
"சாத்துக்குடியின்
சேலை உரித்ததில்லை"
இதுவரை எங்கேயுமே கேட்டறியாத கற்பனை
சூப்பர்
வாழ்த்துக்கள்.
விஜய்
அருமை.
”எப்போதும் விழித்திருக்கும்
என் வீட்டு
எறும்புகளே . . .” - அழகான விஷயம் - உண்மையான - அதிகம் கவனிக்கபடாத விஷயமும் கூட.
நன்றி கோபாலகிருஷ்ணன்
அவளுக்குத் தெரியாமல்
நான்
எடுத்துவந்த
நினைவு அது !//
interesting.
Post a Comment