Thursday, September 24, 2009
உலகை வெல்வோம் !
மூச்சடக்க
முயலாவிட்டால்
முத்து உனக்கில்லை !
வாசலையே
தாண்டாவிட்டால் - நீ
வானம்
பார்க்கப் போவதில்லை !
ஒருநாள் மட்டுமே
வாழும் பூச்சிகள் கூட
ஓய்வெடுத்ததாய்
செய்திகள் இல்லை !
விடிய விடிய
மழை பெய்தாலும்
எறும்பு
பட்டினியாய்
படுத்ததில்லை !
முட்டி முட்டி
பால் குடிக்க
குட்டிகளுக்கு
சொல்லித்தந்தது
யாருமில்லை !
மூலையிலே
முடங்கிக்கிடந்தால்
முகட்டில் உனக்கு
இடமில்லை !
தொடமுடியா
உயரமென்று எதுவுமில்லை !
தொட்ட உயரமே
கடைசியுமில்லை !
எழுந்து வா . . .
உலகை வெல்வோம் !
உழவன்
யூத்ஃபுல் விகடனில் இக்கவிதையைப் படிக்க இங்கே க்ளிக்கவும்
நன்றி: யூத்ஃபுல் விகடன்
விருப்பமிருப்பின் இப்படைப்பை "பூக்களிலிருந்து சில புத்தகங்கள்" எனும் நூலுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
(நேற்றே) கண்டேன் விகடனில்!
எந்த வரியினை என்று சொல்ல?
அத்தனை வரிகளும் அதிஅற்புதம்.
வாழ்த்துக்கள் உழவன்!
//விருப்பமிருப்பின் இப்படைப்பை "பூக்களிலிருந்து சில புத்தகங்கள்" எனும் நூலுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்.//
நிச்சயமாய்!
ரொம்ப அருமையா இருக்கு.
அருமை ...!
மிகவும் நல்ல தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை இது.
//விடிய விடிய
மழை பெய்தாலும்
எறும்பு
பட்டினியாய்
படுத்ததில்லை !//
இளைஞனின் தன்னப்பிக்கையினை தட்டியெழுப்பும் வரிகள்...
அனைத்து வரிகளும் சோம்பிக்கிடக்கும் சோம்பேரிகளின் உணர்ச்சியினை கிள்ளிவிடும் என்பதில் ஐயமில்லை...
பயனுள்ள கவிதை அன்பரே....
நல்லா இருக்கு நண்பா..
மனதைச் சோரவிடாமல் உரமேற்றும் வரிகள்.நன்றாகவே மனதை உழுது பயிரிடுகிறீர்கள்.வாழ்த்துகள்.
என்னை மாதிரி சோம்பேறிகளுக்கு சவுக்கடி எழப்பார்கிறேன் எட்டுகிறதா வானம் என்றும் பார்க்கிறேன்...
@ராமலக்ஷ்மி
உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
உங்களின் மின்னஞ்சல் கண்டு மகிழ்ந்தேன். பதில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.
மீண்டும் நன்றி :-)
@ வித்யா
@ ஜீவன்
@ பித்தன்
@ க.பாலாஜி
@ கார்த்திகைப் பாண்டியன்
@ ஹேமா
@ தமிழரசி - வானம் தொட்டுவிடும் தூரம்தான் தமிழ்
அனைவருக்கும் நன்றி
//தொடமுடியா
உயரமென்று எதுவுமில்லை !
தொட்ட உயரமே
கடைசியுமில்லை !//
அருமையான வரிகள்
மிகவும் அருமையான வரிகள்
வாழ்த்துக்கள்
தொட்ட உயரமே
கடைசியுமில்லை !
மிக்க நன்றிங்க இராஜராஜேஸ்வரி
Post a Comment