
கூவிடும் குயிலே!
சிரித்திடும் பூவே
சுவைத்திடும் நாவே!
மணம் கமழும் நெய் தோசையே
மனம் கவரும் எழுத்தோசையே!
மழலை மொழிக்குச் சொந்தக்காரியே
மனதிலமர்ந்த நட்புக்காரியே!
வலையுலக எழிலே - எங்கள்
பாரதி கண்ட தமிழே!
வாழ்வாங்கு வாழ
வாழ்த்துகிறேன் உன்னை!!!
எனதருமைத் தோழி "எழுத்தோசை" தமிழரசிக்கு இன்று (செப்டம்பர் 23) பிறந்த நாள்.
நீ பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ, காளமேகப்புலவனோடு சேர்ந்து
"துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தனம்
அதிதானியம் செளபாக்கியம் போகம் அறிவு அழகு
புதிதாம் பெருமை அறம்குலம் நோயின்மை பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே"
என்று வேண்டுகிறேன்.
வாழ்த்துக்களோடு...
உழவன்
11 comments:
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசி!
நல்ல வாழ்த்துப்பா உழவன்:)!
//மணம் கமழும் நெய் தோசையே
மனம் கவரும் எழுத்தோசையே!//
நல்லாயிருக்கு:)!
படமும் அருமை.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசிக்கு!
கவிதை நல்லா இருக்கு, ஆமா எங்க நெய் தொசை?. பண்ணுனா சொல்லுங்க.
//மணம் கமழும் நெய் தோசையே
மனம் கவரும் எழுத்தோசையே!//
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசி!
அழகான கவிதை நண்பரே! நெய்த்தோசை மணம் பசிக்க வைத்து விட்டது.
தமிழுக்கு வாழ்த்துக்கள்.
தமிழுக்கு,மனம் நிறைந்த பிறந்தநாள் வழ்த்துகள்.
கவிதையோடு வாழ்த்து அழகு.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசி!
படம் நல்லா இருக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழரசி..:-)))
Happy Birthday mummy
-sandhya
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசி
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேடம்...
Post a Comment