ஆடையைக்
கண்டுபிடித்தவன்
கண்ணத்தில்
ஓங்கி ஒரு
அறை
விடவேண்டும் !
உடல் மறைக்க
எப்போது நினைத்தானோ
அன்றுதான்
நான்கு சுவர்
தேவைப்பட்டிருக்கும் !
எவன் செய்த தவறோ ..
இன்று அலைகிறோம்
தெருவெல்லாம்
வாடகை வீட்டுக்குக் கூட !
ஒரு வகையில்
நாங்களும்
காணி நிலம் கேட்கும்
பாரதிதானோ !
உழவன்
நன்றி: யூத்ஃபுல் விகடன்
Monday, July 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
நல்லா இருக்கே.... சரக்கு...
நல்லாருக்கு உழவன் சார். யூத்புல் விகடனில் வெளிவந்திருக்கிறதா... வாழ்த்துகள்.
நல்லாருக்கு!
வித்தியாசமான சிந்தனை அருமையான கவிதை,வாடகைவீடு தேடிய அனுபவம் போல் உள்ளது.
எவன் செய்த தவறோ ..
இன்று அலைகிறோம்
தெருவெல்லாம்
வாடகை வீட்டுக்குக் கூட !
ஒரு வகையில்
நாங்களும்
காணி நிலம் கேட்கும்
பாரதிதானோ !
உழவரே ரியலி சூப்பர்ப்
என் பாரதியை நினைவுகூர்ந்ததற்கு முதற்கண் நன்றி உழவன்...
கவிதையை நான் சொல்லி தான் பாராட்டனும் என்றில்லை..தகுதி அறிந்து விகடன் அங்கீகாரம் செய்து விட்டது,,வாழ்த்துக்கள்..எப்படி இப்படி அனைத்து தரப்பிலும் யோசிக்க முடிகிறது...வார்த்தையில் ஆதங்கம் தெரிகிறது வறுமையின் வலி மட்டுமல்ல..வாடகைக்கு வீடு கிடைக்காத வலியும் தான்..
//அமிர்தவர்ஷினி அம்மா
nice //
thx amithumaa :-)
//நையாண்டி நைனா
நல்லா இருக்கே.... சரக்கு... //
மகிழ்ச்சி நைனா.. நலமா?
//குடந்தை அன்புமணி
நல்லாருக்கு உழவன் சார். யூத்புல் விகடனில் வெளிவந்திருக்கிறதா... வாழ்த்துகள். //
நன்றி அன்பு.
//சந்தனமுல்லை
நல்லாருக்கு!//
நன்றிங்க :-)
வாழ்த்துக்கள் உழவன்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
வீடு தேடி அலைந்த அலுப்பும் களைப்பும் வலியுடன் வரிகளில்...!
//சொல்லரசன்
வித்தியாசமான சிந்தனை அருமையான கவிதை,வாடகைவீடு தேடிய அனுபவம் போல் உள்ளது//
வீடு தேடிய அனுபவம் தான் :-)
//sakthi
உழவரே ரியலி சூப்பர்ப்//
நன்றி தோழி :-)
//தமிழரசி
என் பாரதியை நினைவுகூர்ந்ததற்கு முதற்கண் நன்றி உழவன்...
கவிதையை நான் சொல்லி தான் பாராட்டனும் என்றில்லை..தகுதி அறிந்து விகடன் அங்கீகாரம் செய்து விட்டது,,வாழ்த்துக்கள்..எப்படி இப்படி அனைத்து தரப்பிலும் யோசிக்க முடிகிறது...வார்த்தையில் ஆதங்கம் தெரிகிறது வறுமையின் வலி மட்டுமல்ல..வாடகைக்கு வீடு கிடைக்காத வலியும் தான்..//
இந்த சென்னையில ஒரு வீடு வாடகைக்கு கிடைக்கறதுக்குள்ள எல்லோரும் படும் பாடு சொல்லிமாளாது. அதான் இப்படி
//"அகநாழிகை"
வாழ்த்துக்கள் உழவன்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்//
மிக்க நன்றி ஐயா :-)
//ராமலக்ஷ்மி
வீடு தேடி அலைந்த அலுப்பும் களைப்பும் வலியுடன் வரிகளில்...! //
ஆமாக்கா.. இங்க ஒரு வீடு பார்க்கறதுக்குள்ள.. யப்பா.. பெங்களூருல எப்படி?
//எவன் செய்த தவறோ ..
இன்று அலைகிறோம்
தெருவெல்லாம்
வாடகை வீட்டுக்குக் கூட !
//
வாடகை வீட்டுக்கு கூட இல்ல உழவரே!... வாடகை வீட்டுக்கு தான் அலைய வேண்டி இருக்கு..
அய்யைய்யோ, நான் இல்லப்பா(கண்டுபிடிச்சது)
வாடகை வீடு பத்தி சொன்னா, ஒரு பதிவு இல்லை ஒரு தீஸிஸே எழுதலாம். நாங்கள் ஏழு வீடு மாற்றி, இதே போன ஜூலை 14 அன்று தான் சொந்த வீடு பால் காய்ச்சினோம்.
ஆனால், ஊரில் சொந்த வீடு வைத்துக் கொண்டு, பட்டணத்தில் வாடகை வீட்டுக்காக அலையும் கொடுமை இருக்கிறதே?!
கவிதை அருமை .
வாழ்த்துக்கள்.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
//லிங்காபுரம்-சிவா
வாடகை வீட்டுக்கு கூட இல்ல உழவரே!... வாடகை வீட்டுக்கு தான் அலைய வேண்டி இருக்கு.. //
ஆமாங்க.. ரொம்ப சரியா சொன்னீங்க.
//SUMAZLA/சுமஜ்லா
அய்யைய்யோ, நான் இல்லப்பா(கண்டுபிடிச்சது)
வாடகை வீடு பத்தி சொன்னா, ஒரு பதிவு இல்லை ஒரு தீஸிஸே எழுதலாம். நாங்கள் ஏழு வீடு மாற்றி, இதே போன ஜூலை 14 அன்று தான் சொந்த வீடு பால் காய்ச்சினோம்.
ஆனால், ஊரில் சொந்த வீடு வைத்துக் கொண்டு, பட்டணத்தில் வாடகை வீட்டுக்காக அலையும் கொடுமை இருக்கிறதே?! //
ஓ ஜூலை 14.. என்னே ஒரு ஒற்றுமை.. ரொம்ப மகிழ்ச்சி. நீங்களாவது சொந்த வீட்டுல இருக்கீங்களே :-)
//பிரவின்ஸ்கா
கவிதை அருமை .
வாழ்த்துக்கள்.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா//
நன்றி நண்பா :-)
நியாயமான கோபம் தான் நன்பரே!! தொடக்கம் கவிதைக்கு நல்ல 'பளிச்'.
அருமை
Post a Comment