ஹலோ..
மாணிக்கம் ... நான் தான் ராஜசேகர் பேசுறேன். கோடம்பாக்கம் வரைக்கும் போகனுமே. வீட்டுக்கு இப்ப வரமுடியுமா?
ஓகே சார். வீட்டுக்கே வந்திர்ரேன்.
லேட் பண்ணிறாதப்பா. கரெக்டா வந்திரு.
ஆட்டோ ஸ்டாண்ட்லதான் சார் நிக்குது. ஒரு பத்து நிமிஷத்துல நான் அங்க இருப்பேன் சார். பேசிமுடித்தபின் மீண்டும் கழுத்தில் மொபைலை ஊசலாடவிட்டுவிட்டு, ஆட்டோவிலிருந்த எப்.எம்-ன் வால்யூம்யைக் கூட்டவும், நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழைக்கு அருகில் இருந்த ஆட்டோ டிரைவரும் தலையசைக்கத் துவங்கினார்.
டேய் தம்பி கிளாஸை எடுத்துக்கோடா.. அண்ணே.. ஒரு டீ ஒரு வடை.. கணக்குல வச்சுக்கோங்க. வழக்கம்போல காலைச் சிற்றுண்டியான ஒரு டீயை உளுந்தவடையோடு குடித்துவிட்டு புறப்படத்தயாரானான்.
ஸ்கூல் பேக்க முதுகுல போட்டுக்கிட்டு, பக்கத்து வீட்டுக்காரங்களுக்கெல்லாம் டாடா காட்டிக்கிட்டே, அம்மா அப்பாவோடு முதல் நாள் ஸ்கூலுக்குப் போறா அமராவதி. ஆட்டோல போகும்போது பெத்தவங்களுக்கோ ஆயிரம் கனவுகள். குழந்தையின் கண்ணுலயோ ஆயிரம் பட்டாம்பூச்சிகள்.
மாணிக்கம்.. தினமும் நீயே இவள ஸ்கூல்ல விட்டுடேன்; அப்படியே ஈவினிங்கும் பிக்கப் பண்ணிட்டு வந்திரேன்.
ம்.. பண்ணிரலாம் சார்.
மாசம் எவ்வளவுப்பா ஆகும்?
சார்.. உங்ககிட்ட நான் என்னத்த கேட்க? நீங்களா பார்த்து குடுங்க சார்.
மறுநாள் காலை 8.30 மணி. பள்ளி வாசலில் அமராவதியை இறக்கிவிட்டபின், ஒருவித ஏக்கத்தோடு பள்ளி முன் வந்து நின்ற பேருந்தையே பார்த்துக்கொண்டிருந்தான் மாணிக்கம். நூறுபேரை அள்ளிப் போட்டு வந்த அந்த பேருந்திலிருந்து இறங்கி, கலைந்த தலையைச் சரிசெய்தவாறே பள்ளியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான் மாணிக்கத்தின் மகன்.
உழவன்
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
கதைக் கரு நல்லா இருக்கு.ஆனா.... என்னவோ ஒன்னு மிஸ்ஸிங்.
சொல்லத்தெரியலை
அழகான கதை
நல்ல நறுக் சுருக் கதை. ஆனா இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கலாமோ?
பேசிமுடித்தபின் மீண்டும் கழுத்தில் மொபைலை ஊசலாடவிட்டுவிட்டு, ஆட்டோவிலிருந்த எப்.எம்-ன் வால்யூம்யைக் கூட்டவும், நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழைக்கு அருகில் இருந்த ஆட்டோ டிரைவரும் தலையசைக்கத் துவங்கினார்.
டேய் தம்பி கிளாஸை எடுத்துக்கோடா.. அண்ணே.. ஒரு டீ ஒரு வடை.. கணக்குல வச்சுக்கோங்க. வழக்கம்போல காலைச் சிற்றுண்டியான ஒரு டீயை உளுந்தவடையோடு குடித்துவிட்டு புறப்படத்தயாரானான். //
இந்த ஃப்ளோவிலேயே கதைய இன்னும் கொஞ்சம் தூரம் கூட்டிப்போயிருக்கலாம்னு தோணுச்சு, படிச்சு முடிச்சவுடன்.
நல்ல முயற்சி உழவன்
நல்லாருக்கு தோழரே. மேலும் முயற்சியுங்கள் நல்ல கதைசிரியர் வந்துகொண்டிருக்கிறார்.
//துளசி கோபால்
கதைக் கரு நல்லா இருக்கு.ஆனா.... என்னவோ ஒன்னு மிஸ்ஸிங்.
சொல்லத்தெரியலை//
உங்களின் விமர்சனத்துக்கு மிக்க நன்றி.. என்ன மிஸ்ஸிங்னு எனக்கு எதாவது தெரியவந்தால், கதையை சற்று மாற்றித் தர முயல்கிறேன்.
//sakthi
அழகான கதை //
மகிழ்ச்சி தோழி :-)
//அமிர்தவர்ஷினி அம்மா
நல்ல நறுக் சுருக் கதை. ஆனா இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கலாமோ?
இந்த ஃப்ளோவிலேயே கதைய இன்னும் கொஞ்சம் தூரம் கூட்டிப்போயிருக்கலாம்னு தோணுச்சு, படிச்சு முடிச்சவுடன். //
ஒரு சிறுகதை எழுதுகிற அளவிற்கு எனக்கு காட்சிகளை அமைக்கமுடியுமா என்ற ஐயம் எனக்கிருந்தது. அதனால்தான் ஒரு பக்க கதையாக இருந்தாலே போதும் என்று கருதினேன். இன்னும் காட்சியமைப்புகளைக் கொண்டுவர முடிந்தால், இந்தக் கதையை இன்னும் கொஞ்ச தூரம் அழைத்துச்செல்ல முயல்கிறேன் அமித்துமா. உங்களின் கருத்துக்கு நன்றி :-)
//S.A. நவாஸுதீன்
நல்ல முயற்சி உழவன்//
இப்படி உங்களைப் போன்றவர்களின் ஊக்கத்தால் ஏதோ எழுதிக்கொண்டு இருக்கிறேன். மிக்க நன்றி
//குடந்தை அன்புமணி
நல்லாருக்கு தோழரே. மேலும் முயற்சியுங்கள் நல்ல கதைசிரியர் வந்துகொண்டிருக்கிறார்.//
நல்ல கதையாசியர் வந்துகொண்டிருக்கிறாரா?? எங்க நண்பா :-)
நன்றி
நச்சுன்னு இருக்கு.. கடைசியில் ஒரு மன அழுத்தம் வருகின்றது அருமையான கரு.. பாராட்டுகள் நண்பா
//ஆ.ஞானசேகரன்
நச்சுன்னு இருக்கு.. கடைசியில் ஒரு மன அழுத்தம் வருகின்றது அருமையான கரு.. பாராட்டுகள் நண்பா //
நன்றி நண்பா.. நலமா?
நல்ல கதை உழவன்.
//நூறுபேரை அள்ளிப் போட்டு வந்த அந்த பேருந்திலிருந்து இறங்கி, கலைந்த தலையைச் சரிசெய்தவாறே பள்ளியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான் மாணிக்கத்தின் மகன்.//
ஏக்கத்துக்கான காரணத்தை அழுத்தமாய் விவரிக்கும் இவ்வரிகள் அருமை.
நல்லா இருக்கு உழவன்..
//ராமலக்ஷ்மி
நல்ல கதை உழவன்.
//நூறுபேரை அள்ளிப் போட்டு வந்த அந்த பேருந்திலிருந்து இறங்கி, கலைந்த தலையைச் சரிசெய்தவாறே பள்ளியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான் மாணிக்கத்தின் மகன்.//
ஏக்கத்துக்கான காரணத்தை அழுத்தமாய் விவரிக்கும் இவ்வரிகள் அருமை. //
மிக்க நன்றி. உங்களைப்போன்ற எழுத்தாளர்களின் எழுதுக்களே எனக்கு எழுத உதவுகிறது. மகிழ்ச்சி :-)
//கார்த்திகைப் பாண்டியன்
நல்லா இருக்கு உழவன்//
மகிழ்ச்சி நண்பா.. உங்களின் நேரப்போராட்டத்திற்கு நடுவிலும் உங்களின் பின்னூட்டம் மகிழ்வைத் தருகிறது :-)
நன்றாக இருக்கிறது நண்பா வாழ்த்துகள்
//சொல்லரசன்
நன்றாக இருக்கிறது நண்பா வாழ்த்துகள் //
நன்றி சொல்லரசரே..
அமித்து அம்மாவின் கருத்துகளோடு உடன்படுகிறேன்.
வலையில் எழுத வந்துவிட்ட பிறகு எதற்கு சொற்சிக்கனம் ??
உங்கள் ஃப்ளோ நல்லா இருக்கு..பயன்படுத்திகோங்க தல..
//அ.மு.செய்யது
உங்கள் ஃப்ளோ நல்லா இருக்கு..பயன்படுத்திகோங்க தல.. //
ரொம்ப மகிழ்ச்சி தல. கண்டிப்பா பயன்படுத்திக்கிறேன்
நல்லா வந்திருக்கு. என்றாலும், புரியாமல் மறுபடியும் ஒரு தரம் படித்தேன். இன்னமும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்.
நல்ல முயற்சி உழவன்.........
செந்தழல் ரவி
நல்ல முயற்சி உழவன்......... //
மிக்க நன்றி செந்தழலாரே :-)
SUMAZLA/சுமஜ்லா
நல்லா வந்திருக்கு. என்றாலும், புரியாமல் மறுபடியும் ஒரு தரம் படித்தேன். இன்னமும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்.
தங்களின் மனம்திறந்த கருத்துக்கு மிக்க நன்றி சகோ..மெருகேற்ற முயற்சிக்கிறேன்
Post a Comment