Sunday, May 24, 2009

பசி


வாசற்படியிலேயே செருப்பை உதறிவிட்டு, வீட்டினுள் நுழைந்தவள், அலமாரியிலிருந்த தேங்காய் எண்ணெய்யை எடுத்து தன் கால் விரலிடுக்கில் போடும்போது, குழந்தை கேட்டாள்.

ஏம்மா கால்ல எண்ணெய் போடுற?

அம்மா கால செருப்பு கடிச்சிருச்சிடா செல்லம்

ஏம்மா கடிச்சது?

ம்ம்ம்.. அதுக்குப் பசிச்சிருக்கும். அதான் கடிச்சிருக்கு. சிரித்துக்கொண்டே குழந்தையிடம் சொன்னவள், அவளுக்காக வாங்கி வந்த கேக்கில் ஒரு துண்டை எடுத்துக் கொடுத்தாள்.

ஷோபாவில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இரு. அம்மா கிச்சனுக்குப் போயி காபி எடுத்துகிட்டு வாரேன்.. சரியா?

சமையலறையிலிருந்து திரும்பியவள், அப்படியே பூரித்துப்போய் நின்றாள்.

" பசிக்குதுன்னு அம்மா கால கடிச்சயாக்கும். இந்தா இந்த கேக்க தின்னு. தினம் உனக்கு சாப்பிட எதாவது தாரேன். அம்மா கால கடிக்கக் கூடாது. சரியா?

மழலை மொழி பேசி, செருப்புக்கு கேக் ஊட்டிவிட்டுக் கொண்டிருந்த தன் குழந்தையைக் கண்டதும், அரும்பிய ஒரு துளிக் கண்ணீரோடு ஓடிவந்து, குழந்தையை அள்ளி அணைத்து அவள் கொஞ்சியதற்கும் அளவிருக்குமோ!
இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.
உழவன்

39 comments:

sakthi said...

மழலை மொழி பேசி, செருப்புக்கு கேக் ஊட்டிவிட்டுக் கொண்டிருந்த தன் குழந்தையைக் கண்டதும், அரும்பிய ஒரு துளிக் கண்ணீரோடு ஓடிவந்து, குழந்தையை அள்ளி அணைத்து அவள் கொஞ்சியதற்கும் அளவிருக்குமோ!

vithyasamana kathai rasithen uzhavan

அமுதா said...

இனிமையான கதை.

ராமலக்ஷ்மி said...

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். மழலையின் செயல் மனதை நெகிழ வைக்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

ஆகா, ஆகா..... அருமை நண்பரே..

சொல்லரசன் said...

// பசிக்குதுன்னு அம்மா கால கடிச்சயாக்கும். இந்தா இந்த கேக்க தின்னு. தினம் உனக்கு சாப்பிட எதாவது தாரேன். அம்மா கால கடிக்கக் கூடாது. சரியா?//

நல்ல சிந்தனை அருமையான கதை.

குடந்தை அன்புமணி said...

அந்த மழலையின் பாங்கு மனித குலத்துக்கே தேவையானது... அருமையா இருக்கு...

வல்லிசிம்ஹன் said...

அன்பு மொழி உண்மை. வளரட்டும்.இந்தக் குழந்தை மனசு எல்லோருக்கும் இருந்தால் உலகம் உய்யும்.

கடைக்குட்டி said...

அருமையான காட்சியை கண்முன் நிறுத்தியுள்ளீர்கள் :-)

வெல்ல வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

கதை அருமை.. வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா

அமிர்தவர்ஷினி அம்மா said...

வார்த்தைகளேதும் வரவில்லை

அருமை

நட்புடன் ஜமால் said...

\\பசிக்குதுன்னு அம்மா கால கடிச்சயாக்கும். இந்தா இந்த கேக்க தின்னு. தினம் உனக்கு சாப்பிட எதாவது தாரேன். அம்மா கால கடிக்கக் கூடாது. சரியா?\\


கண்களில் கண்ணீர் துளிகள் வர வைத்துவிட்டன இவ்வரிகள்

"உழவன்" "Uzhavan" said...

@sakthi
@அமுதா
@ராமலக்ஷ்மி
@ஆ.ஞானசேகரன்
@சொல்லரசன்
@குடந்தை அன்புமணி
@ வல்லிசிம்ஹன்
@கடைக்குட்டி
@கார்த்திகைப் பாண்டியன்
@அமிர்தவர்ஷினி அம்மா
@நட்புடன் ஜமால்

அனைவரின் பாரட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

அன்புடன்
"உளறல்கள்" உழவன்

Anonymous said...

மழையின் மனதை அப்படியே இறக்குமதி பண்ணியிருக்கீங்க... soooooooooooooooooo...
sweeeeeeeeeeeeeettttt...எப்படி சித்தரிச்சியிருக்கீங்க பரிசு நமக்குத்தான்ப்பா...வாழ்த்துக்கள்

Vidhoosh said...

நிஜமாவே கண்ணில் துளி நீரை வரவழைத்து விட்டது. நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

@Vidhoosh
//நிஜமாவே கண்ணில் துளி நீரை வரவழைத்து விட்டது. நல்ல படைப்பு. வாழ்த்துக்கள். //

நான் எதிர்பார்த்ததை விட நிறைய பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. மிக்க நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

@தமிழரசி
மழையின் மனதை அப்படியே இறக்குமதி பண்ணியிருக்கீங்க... soooooooooooooooooo...
sweeeeeeeeeeeeeettttt...எப்படி சித்தரிச்சியிருக்கீங்க பரிசு நமக்குத்தான்ப்பா...வாழ்த்துக்கள்//

தமிழ்.. உங்களின் இந்த பின்னூட்டமே எனக்கு பரிசு கிடைத்த மகிழ்வை ஏற்படுத்துகிறது. உங்க வாக்கு பலிக்கட்டும். :-)

//பரிசு நமக்குத்தான்ப்பா//

ஏதோ நீங்க என் முன்னாடி நின்னு சொல்றமாதிரி இருக்கு. மிக்க நன்றி.

கோபிநாத் said...

அருமையான கதை அதுவும் ஒரு அன்னையை பற்றி ;))

வாழ்த்துக்கள் ;)

"உழவன்" "Uzhavan" said...

@கோபிநாத்
//வாழ்த்துக்கள் ;) //

நன்றி கோபி அவர்களே..

சென்ஷி said...

நல்லாயிருக்குங்க..

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

@சென்ஷி
//நல்லாயிருக்குங்க..

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் //

மகிழ்ச்சி.

SUMAZLA/சுமஜ்லா said...

ஆஹா! என்ன அருமையான கற்பனை! படிக்க மிக நெகிழ்ச்சியாக இருந்தது!

பரிசு வாங்க இப்படி பல பேர் இருக்கும் போது, நாம் யோசிச்சு வைத்திருக்கும் கதையை எழுதலாமா வேண்டாமா என்று பலமாக யோசிக்கிறேன்!

"உழவன்" "Uzhavan" said...

//ஆஹா! என்ன அருமையான கற்பனை! படிக்க மிக நெகிழ்ச்சியாக இருந்தது!

பரிசு வாங்க இப்படி பல பேர் இருக்கும் போது, நாம் யோசிச்சு வைத்திருக்கும் கதையை எழுதலாமா வேண்டாமா என்று பலமாக யோசிக்கிறேன்! //

ஐயோ.. நீங்க வேற.. பரிசுக்காக இதை அனுப்பவில்லை. போட்டிக்கு அனுப்பிவச்சா ஒரு நாலு பேராவது படிப்பாங்க, ஓ உழவன் னு ஒருத்தன் இருக்கான்னு தெரிஞ்சிப்பாங்க. எல்லாம் ஒரு விளம்பரம்தான் :-)
எந்தத் தயக்கமும் இல்லாம கதையை எழுதி, சீக்கிரமா அனுப்பிவையுங்க. நானே போட்டியில் பங்கெடுக்கும்போது உங்களுக்கென்ன? அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பரிசு பெற!

அன்புடன்
உழவன்

தினேஷ் ராம் said...

உளறலே இவ்வளவு காவியத் தன்மை பெற்றிருக்கு என்றால்.... நீங்க உண்மையிலே பெரிய ஆளு சார்.

"உழவன்" "Uzhavan" said...

//சாம்ராஜ்ய ப்ரியன்

உளறலே இவ்வளவு காவியத் தன்மை பெற்றிருக்கு என்றால்.... நீங்க உண்மையிலே பெரிய ஆளு சார். //

காவியத் தன்மையா?? காமடி பண்ணாதீங்க சார்.. ஏதோ எழுதுறேங்குற பேருக்கு எழுதுறேன்.
வருகைக்கு நன்றி!

தினேஷ் ராம் said...
This comment has been removed by the author.
தினேஷ் ராம் said...

காமெடி பண்ணனும் என்கிற எண்ணமோ/ அவசியமோ எனக்கில்லை. எனக்கு பிடித்திருந்தது. சில 'ஏனோ தானோ'க்கள் தான் சில சமயம் கடைசி வரை நிற்கும். கடைசி வரை நிற்கும் தன்மையை தான் நான் 'காவியத் தன்மை' என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறாக இருக்கலாம் :D . தங்களது படைப்பான "பசி" காலணி கண்டுப்பிடித்த காலம் முதல் உலகம் அழியும் காலம் வரை, எங்கு வைத்து பார்த்தாலும் உங்க சிறுகதையின் அழகியல் பாதிக்காது. கலப்படமற்ற காதலிற்கு அன்றும், இன்றும், என்றும் தாய்- சேய் உறவினை தான் சொல்லுவார்கள். இதுவும் ஒரு காரணம்.

மீண்டும் ரொம்ப காமெடி பண்ணிட்டேனோ!

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ரவி said...

முதலில் பதிவில் வரும் படம், அதில் வரும் குழந்தையின் முகம், அது சொல்லும் செய்தி (அதில் நூறு சிறுகதைகள் உண்டு), பெண்ணின் சிரிப்பு...சூப்பர்...நெஞ்சார பாராட்டவேண்டும்..

கதையின் முடிவு நச். நீட்டி முழக்காமல் சிக்கென்ற ஒரு பக்க சிறுகதை..

என்னுடைய மதிப்பெண் 65 / 100

"உழவன்" "Uzhavan" said...

//செந்தழல் ரவி
முதலில் பதிவில் வரும் படம், அதில் வரும் குழந்தையின் முகம், அது சொல்லும் செய்தி (அதில் நூறு சிறுகதைகள் உண்டு), பெண்ணின் சிரிப்பு...சூப்பர்...நெஞ்சார பாராட்டவேண்டும்..
கதையின் முடிவு நச். நீட்டி முழக்காமல் சிக்கென்ற ஒரு பக்க சிறுகதை..
என்னுடைய மதிப்பெண் 65 / 100 //

ஆ.. 65 மதிப்பெண்ணா?? என் வாழ்வில் நான் எடுத்த அதிகமான மதிப்பெண் இதுதானோ.. :-) மிக மகிழ்ச்சியாக உள்ளது இது போன்ற பாராட்டுக்களைப் பெறும்போது. நன்றி.

Radhakrishnan said...

மிகவும் அருமையான கதை. மழலைகளின் வெள்ளை மனதை படம் பிடித்துக் காட்டிய அருமையான கதை. சிறுகுழந்தைகளுக்கு அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் பெற்றோர்களின் நிலையையும் உணர்த்திய விதம் சிறப்பு.

மிக்க நன்றி ஐயா.

"உழவன்" "Uzhavan" said...

//வெ.இராதாகிருஷ்ணன்
மிகவும் அருமையான கதை. மழலைகளின் வெள்ளை மனதை படம் பிடித்துக் காட்டிய அருமையான கதை. சிறுகுழந்தைகளுக்கு அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் பெற்றோர்களின் நிலையையும் உணர்த்திய விதம் சிறப்பு.

மிக்க நன்றி ஐயா.//

மிக்க மகிழ்ச்சி.. நான்தான் சொல்லனும்யா உங்களுக்கு நன்றி :-)

Kalpagam said...

ரொம்ப அழகான... “சிறு”கதை.. குழந்தைகளின் மனதை மிக அழகாக, எளிமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்!

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. நானெல்லாம் மண்டபத்துல யார்கிட்டயாவது சிறுகதை எழுதி வாங்கிட்டு வந்தாதான் உண்டு போலிருக்கு!!!

"உழவன்" "Uzhavan" said...

//Kalpagam
ரொம்ப அழகான... “சிறு”கதை.. குழந்தைகளின் மனதை மிக அழகாக, எளிமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்!//

பாராட்டுக்கு மிக்க நன்றி.
 
//ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. நானெல்லாம் மண்டபத்துல யார்கிட்டயாவது சிறுகதை எழுதி வாங்கிட்டு வந்தாதான் உண்டு போலிருக்கு!!!//
 
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எதையாவது எழுதும்போது வேறு எதாவது சிக்கும். அப்ப அதைப் பிடிச்சிக்கவேண்டியதான்.

சித்த கார்த்திகை(stephen) said...

கலக்கிவிட்டீர்கள், உங்கள் கதை பரிசை வென்றுவிட்டது !,


மலையும் மடுவும்

(தங்கள் கதையும் என் கதையும்)


http://yuvaking2005.blogspot.com/

தயவுசெய்து படித்துவிட்டு விமரிசிக்கவும்

"உழவன்" "Uzhavan" said...

//Stephen
கலக்கிவிட்டீர்கள், உங்கள் கதை பரிசை வென்றுவிட்டது !, //

என்னது பரிசா.. நானா போயி சரவணா ஸ்டோர்ல வாங்கினாத்தான் உண்டு :-)
நன்றி உங்கள் பாராட்டுக்கு. உங்கள் கதையையும் படித்துவிட்டு சொல்கிறேன்.

anujanya said...

உழவன்,

என்ன இது? நியாயமா? நாங்க எல்லாம் ரூம் போட்டு யோசிச்சு, நீட்டி முழக்கி ஒரு கதை ஒப்பேத்துவதற்குள், இப்படி ஒரு அதகளமா?

மிகச் சிறிய, அருமையான கதை. எப்படிப் பாராட்டுவதென்று தெரியல. வாழ்த்துகள்.

அனுஜன்யா

நாமக்கல் சிபி said...

//@தமிழரசி
மழையின் மனதை அப்படியே இறக்குமதி பண்ணியிருக்கீங்க... soooooooooooooooooo...
sweeeeeeeeeeeeeettttt...எப்படி சித்தரிச்சியிருக்கீங்க பரிசு நமக்குத்தான்ப்பா...வாழ்த்துக்கள்//

தமிழ்.. உங்களின் இந்த பின்னூட்டமே எனக்கு பரிசு கிடைத்த மகிழ்வை ஏற்படுத்துகிறது. உங்க வாக்கு பலிக்கட்டும். :-)//

உழவன்!
உஷாரா இருங்க! பரிசு நமக்குத்தான்னு சொல்லி பாதிப்பரிசை ஆட்டையப் போடப் பாக்குறாங்க!

"உழவன்" "Uzhavan" said...

//அனுஜன்யா
உழவன்,
என்ன இது? நியாயமா? நாங்க எல்லாம் ரூம் போட்டு யோசிச்சு, நீட்டி முழக்கி ஒரு கதை ஒப்பேத்துவதற்குள், இப்படி ஒரு அதகளமா?
மிகச் சிறிய, அருமையான கதை. எப்படிப் பாராட்டுவதென்று தெரியல. வாழ்த்துகள்.
அனுஜன்யா //
 
ஆஹா..அந்த அளவிற்கு நல்லாருக்கா.. மிக மிக மகிழ்ச்சி அனுஜன்யா :-)

"உழவன்" "Uzhavan" said...

//நாமக்கல் சிபி
//@தமிழரசி
தமிழ்.. உங்களின் இந்த பின்னூட்டமே எனக்கு பரிசு கிடைத்த மகிழ்வை ஏற்படுத்துகிறது. உங்க வாக்கு பலிக்கட்டும். :-)//
உழவன்!
உஷாரா இருங்க! பரிசு நமக்குத்தான்னு சொல்லி பாதிப்பரிசை ஆட்டையப் போடப் பாக்குறாங்க! //
 
ஓ.. தமிழ் இப்படி வேற பிளான் இருக்கா? இந்த ஆட்டயப் போடுற வேலையெல்லாம் இங்க செல்லாது :-)

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

வலைப்பூக்கள் அறிமுகமான சமயம், உங்களின் இந்த சிறுகதையை படித்தி்ருந்தேன். ஆனால் இத்தனை நாட்கள் கழித்தும் மனதில் நின்று கொண்டே இருக்கிறது.

சுவையான சம்பவத்தினை எல்லோர் மனதிலும் நிலைநிறுத்தி விட்டீர்கள்.