Wednesday, May 6, 2009

விகடன் தேர்தல் களம் 2009ல் ...


அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...

ஈழதேசமே...
எங்களின்
தேர்தல் போதைக்கு
இன்று
நீங்கள்தான்
ஊறுகாய்!
வேறு வழியில்லை
எங்களை
மன்னித்துவிடுங்கள்!

கொள்கை பேசும் மக்களே...
நாற்பது பணம் காய்க்கும்
மரங்களுக்காக
நாயாய் பேயாய்
அடித்துக்கொள்ளாமல்
வேறென்ன செய்வது?
எங்களை
மன்னித்துவிடுங்கள்!

கொடி பிடிக்கும் தொண்டர்களே...
நேற்று கைகுலுக்கியவரை
இன்று கைகழுவவும்
இன்று கைகுலுக்கியவரை
நாளை கைகழுவவும்
பழகிக் கொள்ளுங்கள்.
குறைந்தது
இரண்டு மாதத்திற்காவது
சோற்றில் உப்பு சேர்க்காதீர்கள்.
இப்படிப்பட்டகொள்கைகளுக்காக
எங்களை
மன்னித்துவிடுங்கள்!

மன்னியுங்கள் மக்களே
மன்னியுங்கள்!
உங்கள் வறுமைதான்
எங்கள் முதலீடு.
இலவசங்களுக்கும்
மானியங்களுக்கும்
விலை போகாமலா போவீர்கள்?

நீங்கள் காரித்துப்புவது
எங்கள் கண்களுக்குத் தெரியாமலில்லை.
அதிகாரத்துடன்
கொள்ளையடிக்க
நீங்கள் அனுமதி தரும்போது
இதைக்கூட
பொறுத்துக் கொள்ளமாட்டோமா!

மே 13
உங்கள் தலையெழுத்தை
மன்னிக்கவேண்டும்
எங்கள் தலையெழுத்தை
நிர்ணயிக்கப்போகும் நாள்!

வாக்களிக்க மறவாதீர்
எனக்கில்லையாயினும்
எவனுக்காவது ஒருவனுக்கு.
ஏனெனில்
நாளை
நானும் அவனும் கூட
கூட்டணி அமைக்கலாம்!

உழவன்

நன்றி: விகடன் தேர்தல் களம் 2009

9 comments:

Anonymous said...

uzhavan arasiyalai uzhuthu irukkirergal...ingu kalai eduka kooda iyalaadhu ellam kalaigaley....vevegathai ezhanthaal venthargal agalaam ingu....

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கள் நண்பா

ஆ.சுதா said...

வாழ்த்துக்கள் நண்பரே

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள்

விகடன ஒட்டுமொத்தமா குத்தகைக்கு எடுத்திருக்கீங்களோ...

எல்லோரின் எண்ண ஓட்டத்தை ப்ரதிபலிக்கும் இந்த கவிதை நல்லா இருக்கு.

சொல்லரசன் said...

வாழ்த்துகள் நண்பா

"உழவன்" "Uzhavan" said...

@தமிழரசி
uzhavan arasiyalai uzhuthu irukkirergal//

இல்லை தோழி நான் உழவில்லை. உழுது செம்மைப்படுத்த நல்ல அரசியல் உழவர்கள் இங்கு இல்லையே என்பதுதான் மக்களின் தீராத ஏக்கம். :-)
உங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி.

@கார்த்திகைப் பாண்டியன்
@சொல்லரசன்
வாழ்த்துக்கள் நண்பா//

வாங்க நண்பர்களே.. மிக்க நன்றி.. கூடவே எதாவது கருத்தும் சொல்லுங்கப்பா :-) சொல்லரசரே.. நம்ம கா.பாண்டியனோட பின்னூட்டத்தை அப்படியே copy paste ஆஆ?? :-)

@ஆ.முத்துராமலிங்கம்
தங்களின் முதல வருகை கண்டு மகிழ்கிறேன் தோழரே.. தொடர்ந்து வாருங்கள். நன்றி.

@அமிர்தவர்ஷினி அம்மா
விகடன ஒட்டுமொத்தமா குத்தகைக்கு எடுத்திருக்கீங்களோ...//
//எல்லோரின் எண்ண ஓட்டத்தை ப்ரதிபலிக்கும் இந்த கவிதை நல்லா இருக்கு. //

ஐயோ அப்படியெல்லாம் இல்லீங்க.. ஏதோ எழுதுறேன். சிலரின் படைப்புகளைப் படிக்கும்போது, சில சமயங்களில் எனக்கே என் எழுத்துக்களைப் பார்க்கும்போது கேவலமாக இருக்கும். எழுதுவதை நிறுத்திவிடலாமா என்றெல்லாம் யோசித்ததுண்டு. உங்களைப் போன்றோரின் இது போன்ற ஊட்டங்களினால்தான் என் எழுத்து தொடருகிறது. ரொம்ப நன்றி

balaji said...

அருமையான கவிதை அப்படியே என் மனதை பிரதிபலிக்கின்றது

"உழவன்" "Uzhavan" said...

@balaji
அருமையான கவிதை அப்படியே என் மனதை பிரதிபலிக்கின்றது//

மகிழ்ச்சி தோழா..தொடர்ந்து வாருங்கள்.

'பரிவை' சே.குமார் said...

கவிதை நல்லா இருக்கு.